ஆசை எனும் நெருப்பு
#ஆசை_எனும்_நெருப்பை_ஏற்காமல் #வாழ்கிறோம் #பொறாமை_என்பது_அழிவை_தரும் #விஷம்_என்பதால்_ஒதுக்கி #வைத்திருக்கிறோம். எந்தக் காலத்திலும் பகை என்பது பகைமையினால் நீங்கி விடுவது இல்லை. பகையைத் தீர்த்து வைக்க அன்பு ஒன்றினாலேயே முடியும். தனக்கு எல்லாம் தெரியாது என்று எண்ணுபவனுக்கு புத்தி உண்டு. தனக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பில் இருப்பவன் சுத்த முட்டாள். ஆசையைப் போன்ற நெருப்பு வேறு எதுவும் இல்லை. ஆசையால் உந்தப்பட்ட மனிதர்கள் வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப் போல ஓடுகிறார்கள். சிலந்தி தன்னால் பின்னப்பட்ட வலைக்குள்ளே சுற்றுவது போல ஆசையில் அழுத்திய மக்கள் வெள்ளத்தின் போக்கில் மிதந்து செல்கின்றனர். ஆசை என்னும் இந்த தளையை அறுத்துக் கொண்டதும் உலகினைத் துறந்த கவலைகள் இல்லாமல் துன்பங்களை எல்லாம் விட்டு கடந்து போகிறார்கள். வயல்களுக்குத் தீமை களைகள். சமுதாயத்திற்கு தீமை *ஆசைகள்* . ஆதலால் ஆசையில்லாதவர்களுக்குச் செய்யும் உதவி பெரும் பயனை ஏற்படுத்தும்.