Posts

Showing posts from September, 2026

நமக்குத் தேவை ‘வாடிக்கையாளர்’ அரசியல் அல்ல; ‘உரிமையாளர்’ அரசியல் நுகர்வோரிலிருந்து பொருளாதார உரிமையாளர்களாக — சாதி ஒழிப்பின் அடுத்த கட்டப் பயணம்

நமக்குத் தேவை ‘வாடிக்கையாளர்’ அரசியல் அல்ல; ‘உரிமையாளர்’ அரசியல் நுகர்வோரிலிருந்து பொருளாதார உரிமையாளர்களாக — சாதி ஒழிப்பின் அடுத்த கட்டப் பயணம் முறுக்கு பாக்கெட் முதல் குளிர்பானம் வரை, பால் பாக்கெட் முதல் ஐஸ்கிரீம் வரை, பினாயில் முதல் ஷாம்பு வரை, பற்பசை முதல் குளியல் சோப்பு வரை, மிளகாய்த்தூள் முதல் மஞ்சள், உப்பு, புளி வரை— ஒரு குடும்பத்தின் அன்றாட வாழ்க்கைக்குள் நுழையும் நுகர்வுப் பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. குழந்தை முதல் முதியவர் வரை, கிராமம் முதல் மாநகரம் வரை, ஒவ்வொரு குடும்பமும் நாள்தோறும் சந்தையில் நுகர்வோராக பங்கேற்கிறது. அந்தச் சந்தையில் தலித் மக்களும் பங்கேற்கிறார்கள். ஆனால் இங்கு ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது: நாம் சந்தையில் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது மட்டுமா முக்கியம்? அந்தச் சந்தையில் நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறது என்பதும் முக்கியமல்லவா? ஒரு பொருளை வாங்குபவராக இருப்பது ஒரு நிலை. அதே பொருளை விற்பவராக இருப்பது இன்னொரு நிலை. அந்தப் பொருளின் விநியோகஸ்தராக இருப்பது வேறு நிலை. டீலராக இருப்பது வேறு நிலை. அதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின்...

சாதிவாரி கணக்கெடுப்பில் ‘பறையர்’ என்றே பதிவு செய்திட வேண்டும்!

Image
சாதிவாரி கணக்கெடுப்பில் ‘பறையர்’ என்றே பதிவு செய்திட வேண்டும்! சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நாடு முழுவதும் பெரும் விவாதம் உருவாகி வருகிறது. ஒவ்வொரு சமூகத்தின் மக்கள் தொகை, சமூக-பொருளாதார நிலை, கல்வி நிலை, அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைத் துல்லியமாக அறிந்து, அதனடிப்படையில் அரசின் கொள்கைகளையும் நலத்திட்டங்களையும் உருவாக்குவதற்கான அடிப்படைத் தரவாக சாதிவாரி கணக்கெடுப்பு அமைய வேண்டும். இந்நிலையில், தமிழ்நாடு முன்னாள் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மக்கள் தாங்கள் விரும்பியபடி சாதிப் பெயர்களைச் சொல்லும் நிலையில் குழப்பம் ஏற்படலாம் என்றும், எனவே அரசே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களின் சாதிப் பட்டியலில்  வரையறுத்துள்ளதன்  அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருப்பது விவாதிக்க வேண்டிய கருத்தாகும். சாதிவாரி கணக்கெடுப்பு என்று அரசு அறிவித்த பிறகு, ஒவ்வொரு சாதியும் அதன் சொந்த அடையாளப் பெயருடன் பதிவு செய்யப்படுவதுதான் உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பாக இருக்க முடியும். ஒரு பெரிய பிரிவுக்க...

உறையூர் – சோழர்களின் தலைநகரமும் “சேரி” என்ற சொல்லின் வரலாறும்

உறையூர் – சோழர்களின் தலைநகரமும் “சேரி” என்ற சொல்லின் வரலாறும் சோழ நாட்டின் தொன்மையான தலைநகரம் உறையூர். இது “உறந்தை” என்றும் இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் தென்கரையில், உள்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்த உறையூர், சங்ககாலச் சோழர்களின் முக்கிய அரசியல் மற்றும் நகர மையமாக விளங்கியது. உறையூர் சாதாரண குடியிருப்பாக இல்லாமல், பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட கோட்டை நகரமாக இருந்ததாகப் பழந்தமிழ் இலக்கியச் செய்திகள் உணர்த்துகின்றன. நகரைச் சுற்றி கோட்டை மதிலும், மதிலுக்கு வெளியே ஆழமான அகழியும், அதனைச் சூழ்ந்து பாதுகாப்பிற்கான மீளைக்காடும் இருந்ததாக அறியப்படுகிறது. கோட்டைக்குள் சோழ மன்னனின் அரண்மனையும் அமைந்திருந்தது. உறையூர் – உறந்தை – கோழி உறையூருக்கு “கோழி” அல்லது “கோழியூர்” என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது. கோழி தொடர்பான தொன்மக் கதையொன்றும் உறையூரின் பெயருடன் இணைத்துக் கூறப்படுகிறது. இவ்வாறு, உறையூர் – உறந்தை – கோழி (கோழியூர்) என்ற பல பெயர்களால் சோழர்களின் தொன்மையான தலைநகரம் அறியப்பட்டிருக்கிறது. சோழர் தலைநகரிலேயே உள்ள தெருக்களை சேரி என்று அழைக்கப்பட்டுள்ளது  குறிப்பாக “ஏணிச்சேர...