Posts

Showing posts from 2023

இந்துமதம் வேறு, சேரி மதம் வேறு...

Image
குங்குமம் வைத்திருப்பதால் இந்து என்று நினைத்து விட வேண்டாம் #நாங்கள்_சேரி எங்களுக்கு என்று தனி பண்பாட்டு கலாச்சாரம்,, பழக்க வழக்கம், வழி பாட்டு முறை உண்டு....  சேரி பண்பாட்டையும்,  இந்துத்வ பண்பாட்டையும் வேறுபடுத்திக் காட்டும் பண்பாட்டு நடவடிக்கைகள் பெரிதும் தேவை. குல தெய்வ வழிபாடு , நடுகல் வழிபாடு, வேப்பமரம் ,அரச மரம் இப்படி இயற்கையை வழிபடுபவர்கள், அறத்தை வழிபடுபவர்கள், ஒழுக்கத்தை வழிபடுபவர்கள் ஞான வம்சத்தவர்கள்,  திருமணம், காது குத்து, வளையகாப்பு, மஞ்சள் நீராட்டு , பிறந்தநாள், சாவு, வாழ்வு, கருமாதி இப்படி எல்லாமே சேரிக்கென்று தனி பண்பாட்டு பழக்க வழக்கம் உண்டு,  மாரியம்மன், நாகம்மாள், பிடாரி அம்மாள், அங்காளம்மன், பெரியாயி, வீரன், அய்யனாரப்பன்  போன்ற இப்படியான தெய்வங்களும் பொறையாத்தாம்மா, இருச்சி, முனீஸ்வரன்,( முனி) பாப்பாத்தி அம்மன், பாப்பாங் குலத்து அம்மன்,  பாவாடை ராயன், இடும்பன், பஞ்சாத்தா, அம்சாரு அம்மா, இப்படி குல தெய்வங்களை தான் சேரி மக்கள் வழிபடுகிறார்கள் இந்த தெய்வங்களை எந்த பிராமணன் வணங்குகின்றனர்? இதையெல்லாம் இந்து மதம் என்று சொல்லி பூர்வகுடிகளை ...

பெயர் மாற்றம் வேண்டும்...!

Image
சாதியின் காரனமாக  தீண்டாமைக்கு ஆளான பூர்வகுடி மக்களை வேறு பெயர் கொண்டு அழைத்தலும், பெயர் சூட்டலும் அரசின் சலுகைகளுக்காக அடையாளம் காண்பதற்கு வகைப்படுத்தலும், தொடர்ந்து கொண்டே இருக்கின்றன  ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பெயர்கள் அரசும், சமூக செயல்பாட்டாளர்களும் பூர்வகுடிகளுக்கு சூட்டி கொண்டுதான் வருகிறார்கள், தீண்டதகாதவர்கள் என்றும்,  டிப்பிரஸ்ட்டு கிளாஸ் என்றும் அரிஜன சாதி என்றும், தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் ஆதிதிராவிடர்கள் என்றும் தலித்துகள் என்றும் பெயர் வைத்து அழைத்து வருகிறார்கள் தற்போது ஆதிதிராவிடர் என்று அரசு ஆவணங்கள் மூலம் வகைப்படுத்தி அழைத்தாலும் ஆனால் ஆட்சியாளர்கள் , அரசியல் கட்சியினர், வெகு மக்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டோர் என்றே அழைக்கின்றனர்,  ஷெட்யூல்டு காஸ்ட் என்று அழைப்பது கூட சரியானதாக ஏற்கலாம் அல்லது ஷெட்யூல்டு காஸ்ட் (SC )என்பதை மொழி பெயர்த்து அட்டவணை வகுப்பினர் அல்லது பட்டியல் வகுப்பினர் என்று கூட அழைக்கலாம், ஆனால் தாழ்த்தப்பட்டோர் என்று அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அழைப்பது என்பது ஏற்புடையதாக பொறுத்தமுடையதாக தோன்றவில்லை. ஒவ்வ...

சனாதனத்தை வீழ்த்துவோம்.

Image
2018 பதிவு ஏறத்தாழ 2400 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இந்திய பேரமைப்பில் உழைக்கும் மக்களை சமதர்ம ஆன்மீகத்துடன் திரட்டி  (Conservative ) சனாதன கொள்கையை எதிர்த்து அமைப்பை நடத்தியவர் உலகின் முதல் முற்போக்கு புரட்சியாளர் புத்தர். இந்தியாவில் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து உழைக்கும் மக்களாக இந்த விவசாய சமூக கட்டமைப்பில் உடைந்த மனிதர்களாக (அம்பேத்கரின் உடைந்த மனிதர்கள்) அடையாளப்படுத்தப்பட்டு  இன்றுவரை இந்தியாவில் இன்னொரு உழைக்கும் இந்தியாவாக இருக்கும் #தலித்துகளே_முதல்_கம்யூனிச_சமூக #அமைப்பாகும் உழைப்பின் வலிமை மற்றும் பேரண்ட ஆன்மீகத்துடன் சமத்துவ, சமூக அமைப்பை வலியுறுத்தியவர்களை இந்தியாவின்  (Conservative ) சனாதனவாதிகள் #தீண்டத்தகாதவர்களாக_மாற்றினார்கள்  காரல் மார்க்ஸின் பொருளாதாரக் கொள்கை மனித குலத்திற்கு எப்படி அவசியமோ அதற்கும் மேலாக மனித குலத்திற்கு மிக அவசியம் #சுதந்திரம் #சமத்துவம் #சகோதரத்துவம், இவைகளுக்கு எதிரான  closed door policy என்று அழைக்கப்படும் அம்பேத்கரின் ஆய்வான, தனக்குத்தானே மூடி கொள்வதன் மூலம், அடுத்த மனிதனை ஒதுக்கித் தள்ளும் சாதியக் ...

கருப்பு கொடி

Image
#ஜனநாயக_முறைப்படி_எதிர்ப்பு_தெரிவிக்க #கருப்பு_கொடிக்_காட்டுவது_என்பது_தமிழகஅரசியலில்_ஒரு_போராட்ட_வடிவம் , நீண்ட கால ஒரு மரபு அந்த வகையில் பலப்போராட்டம் தமிழிகத்தில் இந்தியாவில் நடைபெற்று இருக்கின்றன  நானும் அண்ணன் பழனிவேல் அவர்களும் வேப்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு கடலூரிலிருந்து சென்று   10 க்கும் மேற்பட்ட சிறுத்தைகளுடன் அங்கே கலைஞருக்கு  கருப்பு கொடி காட்டினோம், காவல்துறை கைது செய்தது அவ்வளவுதான் அதுபோல் திமுக வும் பல போராட்டம் நடத்தி இருப்பார்கள் அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தி இருக்கிறது ஆனால் பாஜக தமிழிசை வரும் போது நான்கு சிறுத்தைகள் ஜனநாயக முறைப்படி கருப்பு கொடி எதிர்ப்பு தெரிவித்தார்கள் அவ்வளவு தான்  தமிழிசையுடன் வந்த பாஜக ரவுடி கும்பல் விடுதலைச் சிறுத்தைகள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியதும் பாஜக மோதல் போக்கை கடைபிடிப்பதும் திட்டமிடப்பட்டவை என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டும் . தாத்ரியில் மாட்டுக்கறியின் பெயரில் வயதான முசுலீம் ஒருவரை கொலை செய்தது. முற்போக்குவாதி தபோல்கர்  எழுத்தாளர் கல்புர்...

தலித் அரசியலால் மட்டுமே சாதி மத வேறுபாடுகளை ஒழிக்கமுடியும்...

Image
தலித் அரசியலால் மட்டுமே சாதி மத வேறுபாடுகளை ஒழிக்கமுடியும்,  மொழி இன உரிமைகள் மீட்கமுடியும்,  மனித நேயத்தை வளர்க்க முடியும் , பெண் அடிமை தனத்தை ஒழிக்க முடியும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்  மலர வேண்டுமென்றால், மனித ஒற்றுமையை பிளக்கும் காரணிகள் அனைத்தும் ஒழிய வேண்டுமானால்  தலித் அரசியல் இந்த மண்ணில் நிலைத்து வளர வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் தத்துவமும் , அண்ணன் திருமா அவர்களின் தலைமை மட்டுமே இந்தியாவை, தமிழகத்தை ஊழல்வாதிகளிடமிருந்து, சாதி வெறியர்களிடம் இருந்து,  இந்த தேசத்தை கொள்ளை அடிக்கும் அதிகார ஆதிக்க சக்திகளிடமிருந்து, இந்துத்துவ சக்திகளின் பிடியில் இருந்து விடியவைக்க முடியும் விடுதலை வென்றெடுக்கமுடியும். பிஜேபி ரவுடிகள் காவல்துறை துணையுடன்  விடுதலைச் சிறுத்தைகள் நான்கு பேரை  தாக்கியதை பெரிதாக பெருமையாக சாதிய வாத சக்திகள், ஊடகங்கள் பெருமை கொள்ள வேண்டாம்  விடுதலைச் சிறுத்தைகள் G 20 நாடுகள் எடுக்கும் முடிவை ,மக்கள் விரோத திட்டத்தை எதிர்த்து மக்கள் இயக்கம் நடத்துபவர்கள்  அனு உலையாக இருந்தாலும் சரி,பெட்ரோ கெமிக்கல் திட்டமாக இரு...

படிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும்...

Image
1999 ஆம் ஆண்டு அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு பிரச்சாரம் முடிந்து  அப்போது கடலூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே இருந்த  துவராக லாட்ஜ் க்கு வந்தார் அப்போது தலைவருடன் எடுத்தப்படம்..  நான் அப்போது 12-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியிருந்தேன், முதன் முதலாக சிதம்பரம் தேர்தல் கலவரத்தில்தான் என் மீது வழக்கானது, அப்போது என் மீது எந்த வழக்கு  இல்லாமல் இருந்திருந்தால் எனது அம்மாவின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றி இருப்பேன், ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆண்டுக்குள்  அனைத்து வழக்குகளும் முடிந்துவிடும் அடுத்த ஆண்டு முடிந்துவிடும் என்று நினைதிருந்தேன், ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக புதிது புதிதாக வழக்குகள் சேர்ந்தன, கடைசியாக அம்மாவின் ஆசையை நிறைவேற்ற உறுதியாக நின்றேன் 2020 ஆம் அண்டு கடவு சீட்டிற்கு விண்ணப்பித்தேன், ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக கடவுசீட்டு நிறுத்தப்பட்டு விளக்கம் கேட்டனர், நீதிமன்றத்தில் முறையிட்டு கடவுசீட்டு பெறலாம் என்று நினைத்தேன் அதற்குள் அம்மா தவறிவிட்டார், எனது அம்மா தன் வாழ்நாள் முழுவதும் தவம் செய்த வரம் கிடைக்காம...

வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி

Image
அக்டோபர் 2 முன்னாள் பிரதமர்  லால் பகதூர் சாஸ்திரி  பிறந்தநாள்... #வாழ்க_போர்வீரன்! #வாழ்க_விவசாயி லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர், இவர் இந்தியாவின் முக்கிய விடுதலைப் போராட்ட வீரர், 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் . அச்சமயம் இவரின் பெண்ணின் உடல் நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார். நாட்டிற்காக பெரும் தியாகம் செய்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள். லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. ஆனால் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் சாதிய அமைப்பை அதன் பழக்க வழக்கங்களை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியை குறிக்கும் குடும்ப பெயரை நீக்கினார்,  முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர்பான விரிவ...

#இடது_சாரிகள்_கூடாரத்தில் #சனாதன_வாதிகள்...

கொண்ட கொள்கையில் உறுதியாக கடைசிவரை அதன் இலக்கை நோக்கி நகர வேண்டும், கொள்கை எதிரி நமக்கு தெரியும்  ஆனால் கூடவே இருந்து கொண்டு நமது ஒற்றுமையை , கொள்கையை சிதைப்பவனை  நாம் அடையாளம் காணவேண்டிய நேரம் இது, அத்தகையவர்களை அடையாளம் காண்பது பெரும் கடினம் அவர்கள் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், பிரபாகரன் போன்றவர்களின் முகமூடி அணிந்திருப்பார்கள்.  வலது சாரிகள் அதன் தலைமைகள் தனக்கானவர்களை அடையாளம் கண்டு அவர்களை பயிற்றுவித்து திட்டமிட்டு இடது சாரிகளின் அரசியலை தலைமை தாங்க வைத்து அதனை எளிதில் அழிக்க திட்ட மிட்டு வேலை செய்து வருகிறார்கள். சாதி வெறியர்கள், மத வெறியர்கள் இன வெறியர்கள், சாதிய அமைப்பை  பாதுகாக்க விரும்புவர்கள் முதலாளித்துவ , கார்பரேட் நிறுவன  கைக் கூலிகள், சமூக மாற்றத்திற்கு போராடுகிற அனைத்து அமைப்புகளுக்குள்ளும் ஊடுருவி  சிதைப்பதற்கு வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களே வழிநடத்தும் பொறுப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள்  இன்றைய புதிய சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது அவர்களை சமாளிக்க புதிய பலத்துடன் மீண்டும் ஒரு யுத்தம் முதலில் இருந்து தொடங்குவத...

சுயாட்சி உரிமை

Image
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மொழி இனத்தவர்களுக்கும்  சுயாட்சி கோரி  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு.... எந்த வடிவத்தில் அடக்குமுறை, ஆதிக்கம்  இருந்தாலும் அதனை எதிர்த்து அவரவர்களின் சுதந்திரத்தை நிலை நாட்ட போராடுபவர்கள்தான்  விடுதலைச் சிறுத்தைகள்.  ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்கி ஆளுமை செய்யதால்  அடக்க பட்டுகிடக்கிற இனத்தின் பக்கமே விடுதலை சிறுத்தைகள் இருப்பார்  விடுதலைச் சிறுத்தைகள் மொழி,இனம், சாதி போன்ற  அடையாள அரசியலை  எப்போதும் விரும்ப மாட்டார்கள். மனித நேயமே  உலகத்தின் தலைச் சிறந்த கொள்கை என்று ஏற்று  அண்ணன் அவர்கள் மனித குலத்தின் ஒற்றுமைக்காக போராடிவருகிறார் மனித ஒற்றுமையை சிதைக்கும் எந்த கோட்பாட்டையும்  விடுதலைச் சிறுத்தைகள் எதிர்க்கும்,இந்துத்துவமாக இருந்தாலும் சரி வேறு எதுவானாலும் சரி எதிர்த்து போராடும், போராடிவருகிறது .  விடுதலைச் சிறுத்தைகளின் தாகம்  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்  ஒடுக்குமுறை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் விடுதலைச் சிறுத்தைகள் கிளர்ச...

இந்த நாடு எங்களுடையது...

Image
200 ஆண்டுகளாக தாத்தன்,பாட்டன், முப்பாட்டன் அனைவரும் உழவு செய்ய நிலம் வைத்திருக்கிறார்கள் ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் அதாவது சுந்திர இந்தியாவில்  அனைத்தையும் இழந்து இருக்கிறார் தந்தை,  சொல்லப்போனால் இந்த நவீன காலத்தில் தான் நவீனமாக சாதியும், சுருண்டலும், ஆதிக்கமும் ,அடக்கு முறையும் அதிகரித்திருக்கின்றன, எங்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டதில் இருந்து கிள்ளிப்போட்டுவிட்டு நாங்கள் தான் எல்லாம் செய்தோம் என்று சொல்லும் திராவிட அரசியல் வாதிகளின் வாயை தான் உடைக்க வேண்டும். உள்ளபடியே தென்னார்க்காடு மாவட்டத்தில் குறிப்பாக இன்றைய விழுப்புரம் மாவட்டத்தில் பறையர்கள் அனைவரிடமும் நிலம் இருந்திருக்கின்றன, இன்றைக்கு ஏளனமாக பேசும் திமிராக பேசும் அறிவில்ல முட்டாப் பயனிடம் அவர்கள் தாத்தா காலத்தில் அவரிடம் நிலம் இருந்ததா ? இன்றைக்கு வைத்துள்ள சொத்து 50 வருடத்திற்கு முன்பு இருந்ததா என்று அந்த மயிரான் எண்ணி பார்க்க வேண்டும் ஆனால் இன்று மக்களை ஏமாத்தி பிழைத்து சம்பாதித்து விட்டு புதிய பணக்காரனாக, முதலாளியாக உருவெடுத்து விட்டு நம்மையே ஏளனமாக பேசுகிறான், ஆமாம் நாங்க  SC தான், பறையர்தான் உங...

Arivudainambi VCK

Image