கருப்பு கொடி
#ஜனநாயக_முறைப்படி_எதிர்ப்பு_தெரிவிக்க
#கருப்பு_கொடிக்_காட்டுவது_என்பது_தமிழகஅரசியலில்_ஒரு_போராட்ட_வடிவம் , நீண்ட கால ஒரு மரபு அந்த வகையில் பலப்போராட்டம் தமிழிகத்தில் இந்தியாவில் நடைபெற்று இருக்கின்றன
நானும் அண்ணன் பழனிவேல் அவர்களும் வேப்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு கடலூரிலிருந்து சென்று 10 க்கும் மேற்பட்ட சிறுத்தைகளுடன் அங்கே கலைஞருக்கு கருப்பு கொடி காட்டினோம், காவல்துறை கைது செய்தது அவ்வளவுதான் அதுபோல் திமுக வும் பல போராட்டம் நடத்தி இருப்பார்கள் அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தி இருக்கிறது ஆனால் பாஜக தமிழிசை வரும் போது நான்கு சிறுத்தைகள் ஜனநாயக முறைப்படி கருப்பு கொடி எதிர்ப்பு தெரிவித்தார்கள் அவ்வளவு தான்
தமிழிசையுடன் வந்த பாஜக ரவுடி கும்பல் விடுதலைச் சிறுத்தைகள் மீது கொலை வெறித்தாக்குதல்
நடத்தியதும் பாஜக மோதல் போக்கை கடைபிடிப்பதும் திட்டமிடப்பட்டவை என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டும் .
தாத்ரியில் மாட்டுக்கறியின் பெயரில் வயதான முசுலீம் ஒருவரை கொலை செய்தது. முற்போக்குவாதி தபோல்கர் எழுத்தாளர் கல்புர்கி, பன்சாரே, கெளரிலங்கேஷ் ஆகியோரைச் சுட்டுக் கொன்றது, சமூக வலைத்தளங்களில் இந்துத்துவ சக்திகளை எதிர்த்து எழுதுபவர்களை கைது செய்வது, பூனாவில் முசுலீம் இளைஞரை வாட்ஸ் அப் வதந்தியைக் காட்டி கொலை செய்தது,
சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை, ஐதராபாத் பல்கலை கழகத்தில் தலித் இளைஞர் ரோஹித் வெமுலாவைத் தூக்கிலேற்றி கொலை செய்தது , உஸ்மானியா ஜே.என்.யூ பல்கலைகழகங்களில் அசுரர் தினம் கடைபிடிக்க தடை, ஊடகங்களில், சமூக ஊடகங்களில் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக எதிர்க்கருத்துக்களை எழுதுபவர்களை பாஜக ஆர் எஸ் எஸ் கும்பல் அதனுடைய சங்பரிவார அமைப்புகள் சட்ட விரோதமாவே அல்லது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அடக்குவது அல்லது கொலை செய்வது இதுதான் இந்துத்துவ சக்திகளின் திட்டமிட்ட செயல் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் #எதிர்_கருத்தே_இருக்கக்கூடாது
இதன் அடிப்படையில் தான் விடுதலைச் சிறுத்தைகள் இந்துத்துவ சக்திகளின் எதிர் கருத்தாளர் என்பதால் திட்டமிட்டு பாஜக நம்மிடம் மோதுகிறார்கள் அதன் அடிப்படையில் தான் புதியவன் மீது கூட வழக்கை பதிவு செய்துள்ளார்கள்.
இந்தியா முழுவதும் எதிர்கருத்து கொண்டவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது தான் தற்போதைய பாஜக கும்பலின் பெருந்திட்டம் ஆகவே தோழர்களே விடுதலைச் சிறுத்தைகளிடம் மோதினால் என்னவாகும் என்பதை நாம் காட்டவேண்டும்.
கடலூரில் 2017 நவம்பர் 14 அன்று மதவாத சக்திகளுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் மு.அறிவுடைநம்பி உரை சுருக்கம்
Comments
Post a Comment