Posts

Showing posts from March, 2020

விழுப்பறையர்களே சோழ அரச குடிகள்

#வரலாற்று_திரிபு இவருடைய, அவருடைய, இதன் உடைய, அதன் உடைய, ஒரு பொருளின் உடையார் அதாதாவது உடையோர், தஞ்சை உடையார்  தஞ்சை காரர் , இதனை கொண்டோர் , இதன் உடையார் என்பதையெல்லாம்   படித்த முட்டாள் சாதி வெறியர்கள் தன் சாதியை பெருமை படுத்தி கொள்ள (சோழர்) பறையர்  வரலாற்றை தன் சாதிக்கானதாக  திருத்தி நிறுவி கொண்டு வருகிறார்கள்.  விழப்பறைய சோழர்களே  தஞ்சையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளனர், பறையர்களை தான் இன்று ஒவ்வொரு சாதியை சேர்ந்தவர்,சாதி வெறியர்கள் சோழர்களை எங்கள் சாதி என்று பெருமை அடித்து கொள்கிறான் வரலாற்றை திருத்தி அவர்கள் சாதிக்கு ஏற்றவாறு சோழர் வரலாற்றை நிறுவிகொள்கிறார்கள்.  சாதி வெறியர்களே எப்படி வேண்டுமானாலும் சொல்லி கொள்ளுங்கள் எழுதி கொள்ளுங்கள் பறையர்களில் இருந்து உருவான குடிகள் தானே நீங்கள் உரிமை கோருங்கள்.  விழுப்பறையர்  பெயரிலே இன்றும் விழுப்புரம் இருக்கிறது,   விழுப்பறையர் என்போர் வேறு சாதி என்று சொல்வதற்கு முன் திரிப்பதற்கு முன் பறையர்கள் வரலாற்றை தேடுங்கள் சோழர்கள் வரலாற்றை மீட்டெடுங்கள்.

கட்டிப்பறையர்

#கட்டிப்பறையர்கள் கட்டி இரும்பை ஆங்கிலத்தில்  pig என்பர். உருக்குமண்ணை அல்லது உருக்கு மணலை எடுத்து உலையிட்டு உருக்கி இரும்பு கட்டிகளை உருவாக்கியவரையே பிற்காலத்தில் கட்டி பறையர் என்றனர்.  இருப்பு தொழில் செய்தவர்கள்,  பல நாடுகளுக்கு இரும்பு ஏற்றுமதி வணிகம் செய்தவர்கள்  கட்டிப்பறையர்கள்,  இரும்பு உருக்கு உலைகளை அமைத்தவர்கள் கட்டிப்பறையர்கள்  வடுகர்கள் அதனை பறித்து கொணன்டார்கள்.  1843 ஆம் ஆண்டு கேப்டன் கேம்பெல் போன்றோர் தென்னிந்திய இரும்புத் தொழில் நுட்பத்தை ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகளும் குறிப்புகளும் மடல்களும், இரும்பு எஃகுத் தொழிலில் அன்றைய இங்கிலாந்தையும் விஞ்சி நின்ற தமிழரின் அதாவது கட்டிப்பறையரின் தொழில்நுட்பத்தை வந்தேறிகள் இங்கு வந்து அறிந்து சென்றதைக்காட்டுகிறது. வரலாற்று ஆய்வுகளில் சேலம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கொல்லன் உலைகள் அவற்றின் தொன்மையை நிறுபித்தன, இக் கொல்லனுலைகளின்  அமைப்பிலான தொழில்நுட்பத்தையும், எளிமையையும் குறைந்த செலவையும் கண்டு வந்தேறி ஆங்கிலேயரே மலைத்து நின்றனர். உலையில் அடுப்புக்கரியை நிரப்பி உலை மூட்டித் துருத்தியைக் ...

நேரத்தை பயன்படுத்தி படியுங்கள்

எமது அரசியல் போராட்ட வாழ்வில் சிறையில் தனிமையில் இருந்துள்ளேன் அந்த தனிமை நாட்களை பெரும் பயனுள்ளதாக மாற்றியிருக்கிறேன். அந்நாட்களை எண்ணற்ற புத்தகங்கள் படிக்க வாய்பாகவும் அதனை தொடர்ந்து பல புத்தகங்கள் தொடர்பான அறிமுகமும் கிடைத்து அதனையும் தேடி தேடி படித்திருக்கிறேன்,  எனது அண்ணன் மற்றும் எனது நண்பர்கள், தம்பிகள் வில்வநகர் கு.சுபாஷ், சா.சுரேந்தர், கு.மஞ்சு, ம.கார்த்திக்  ஆகியோர்கள் எனக்காக நான் கேட்கிற புத்தகங்களை தேடி தேடி வாங்கி வந்து சிறையில் கொடுத்திருக்கிறார்கள்,  சிறையில் இருக்கும் தோழர்களிடமும் புத்தகங்கள் வாங்கி படித்திருக்கிறேன், புத்தகம் வாசிப்பு என்பது இயற்கையாகவே எனது  அண்ணனிடம் இருந்து சிறுவயதில் இருந்தே எனக்கு பழக்கமானதுதான்,  ஆனாலும் சிறையில் தனிமையில் இருக்கும் போது நிறைய புத்தகங்கள் படிக்க நேரம் கிடைத்திருக்கின்றன. இப்போது கிடைத்திருக்கும் கோவிட்19 வைரஸ் அபாய தனிமை  நேரத்தை சரியாக பயன்படுத்தி கொள்வேன்,  எல்லா கொடுமையை அனுபவித்தவன் இதுவெல்லாம் ஒரு தனிமையே கிடையாது ஆனால் நாம நேசிக்கிறவர்களே நம்மை வெறுக்கும் கொடுமையை விட , அவர்கள் நம்மை ஓரம...

மகளிர் தின வாழ்த்துகள்

உலகத்தில் இருக்கிற எல்லா பிரச்சினைகளும் (behaviours) பிகேவியர் காரணங்களால் தான் அதற்கு நாம் கொடுக்கிற பெயர் மதம், சாதி, இனம், மொழி, நிறம், ஆண்,பெண் என்று ஏழை,பணக்காரன் போன்ற பல எண்ணற்ற வடிவங்கள், இத்தகைய வேறுபாடுகள், ஆதிக்கங்கள், பல்வேறு பிரச்சனைகள் ஒழிய வேண்டுமெனில் நடத்தை பழக்கவழக்கங்கள் மாற வேண்டும் மனிதனிடம் மொத்தமாக behaviours மாற வேண்டும்.  இத்தகைய பிரச்சினைகளை எல்லாம் நுட்பமாக ஆராயாமல்  அதற்கான அரசியல் கலாச்சார நடவடிக்கைகள் எடுக்காமல் வெறுமன மேலோட்டமாக ஆணாதிக்கம் ,சாதி வேறுபாடு, போன்ற தவறான நடத்தைகள் ஒழிய வேண்டுமென சொல்வது ,செயல்படுவது ஒரு நோயாளிக்கு தவறான சிகிச்சை கொடுப்பதற்கு ஒப்பாக்கும். கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் அனைத்தும் வணிக நடத்தியல் தொடர்பாகவே உலகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எண்ணங்கள், சிந்தனைகள், கலாச்சார பழக்க வழக்கங்கள், மாறவேண்டும் அப்போது தான் நடத்தைகள் மாறும். அனைத்து பிரச்சினைகளும் பிகேவியர் தொடர்பானது நல்ல சிந்தனைகளை வளர்ப்போம்.    *மகளிர் விடுதலை வெல்லட்டும்*  இவண்:  _வழக்கறிஞர்_   *ஞானம்* *மு.அறிவுடைநம்பி* கடலூர்...