Posts

Showing posts from October, 2022

பரையர்களின் பங்காளி முறையா தமிழ் பிராமணர்கள்...?

#பரையர்களின்_பங்காளி_முறையா #தமிழ்_பிராமணர்கள்...? திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பறையர்கள் பற்றித் திரு . எப்.ஆர்.ஹெமிங்வே ஆய்வு செய்த  புராணம்  இவர்கள் தங்கள் தோற்றம் பற்றி மிக உயர்ந்ததான எண்ணம் உடையவர்களாக உள்ளனர்.  சால சாம்பவன் என்ற பிராமணப் புரோகிதன் வழியில் வந்தவர்கள் என தெரிவிக்கிறார்கள். ஒருமுறை அவன் சிவன் கோயிலில் மாட்டிறைச்சியினைப் படைத்து வழிபாடு நடத்துகையில் ஒரு நாள் இறைச்சியின் ஒரு பகுதியினைக் கருவுற்றிருக்கும் தன் மனைவிக்காக மறைத்து வைத்த காரணத்திற்காகப் பறையனாகும்படி சபிக்கப்பட்டவனானான். கடவுள் அவனுக்கு பதிலாக அவன் தம்பியைப்   பணி செய்யும்படி அமர்த்தினார். அந்த தம்பியின் வழி வந்தவர்கள் தான் இன்றை தமிழ் பிராமணர்கள் இதன் அடிப்படையில் பிராமணர்களைப் பறையர்கள் தங்கள் பங்காளிகள் எனக் கூறுகிறார்கள், இதன் காரணமாக இவர்கள் தங்கள் திருமணத்தின்போதும் சாவுச் சடங்கின்போதும் பூணூல் அணிந்து கொள்கின்றனர்.  கிராம தேவதைகளின் திருவிழாக்களின் போது இவர்கள் தங்கள் சாதியினைப் பின்வருமாறு தெரிவிப்பார்கள்,  பறையர்களே முதன்முதல் உலகில் தோன்றியவர்கள். முதன்...

மறைகளை படைத்த மறையர்கள் என்கிற பறையர்கள்...

மனித குலத்திற்கு ஓர் பொது மறை என்றால் திருக்குறள். உலகத்தில் வாழ்கிற மனிதர்களுக்காக படைக்கப்பட்ட மறைதான் திருக்குறள், இப்படி மறைகளை படைத்த மறையர்களின் (பரையர்கள்) வள்ளுவம் மீள் எழும்.  வரலாறு எல்லாம் பிராமணியத்திற்கும் மறை படைத்த  மறையரான பரையர்களுக்குமே யுத்தமாக உள்ளது.  எங்கள் வேதம் திருக்குறள் இருக்க உங்கள் மனுநீதி,பகவத் கீதை எங்களுக்கு எதற்கு...! ~~~~~~~~~~~~~~~~~~ பரையர் என்றால் தமிழர், தமிழர் என்றால் பரையர் என்ற வரலாற்று புரிதலுடன் படிக்கவும். (பறையர் என்று எழுதுவது இல்லை பரையர் என்றே நான் பதிவிடுவேன் அதையும் புரிந்து படிக்கவும்)

'கல்வெட்டில் தீபாவளி' - ‘விளக்கீடு’ ஒளிவிழா

Image
'கல்வெட்டில் தீபாவளி' - ‘விளக்கீடு’ ஒளிவிழா ----------------------------------------  இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி ---------------------------------------------------------- இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி பண்டிகை ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் பின்னாலுள்ள வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம். தீபஆவலி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள்.  ஒளி சிந்தும் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து ஒளிச் சுடரைப் போற்றிக் கொண்டாடும் பண்டைய மரபு சங்க இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அகநானூற்றில் வரும் அவ்வையாரின் பாடல், இலை தழைகள் ஏதுமின்றிச் சென்னிறப் பூக்களாய்ப் பூத்துக் குலுங்கும் இலவமரத்தின் காட்சி ஆரவாரம் மிக்க மகளிர் கூட்டம் மகிழ்ந்து கூடி ஏற்றிய அழகிய சுடர்களை உடைய நீண்ட விளக்கு வரிசை போலக் காட்சியளிப்பதாகக் கூறுகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ, கார்த்திகை மீனுக்குரிய கார்த்திகைத் திங்களில் ஏற்றி வைக்கப்படும் நீளமான விளக்கு வரிசைகள் போலக் கோங்க மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். கார்த்திகை மாத முழுநி...

போராளியின் வரலாறு. 2

Image
போராளியின் வரலாறு. 2 நாட்டின் சுதந்திரம் அடையும் போது அந்த போராளியின் வயது 10, அவரின் பதினெட்டாவது வயதில் ஆதிக்கவாதிகளை எதிர்த்து தொழிலாளர்களுக்காக, அடிமையில் உழன்ற அந்த மக்களுக்காக அடிமை விலங்கொடிக்க களத்தில் இரங்கிய அந்த போராளியின் காலில் ஆதிக்க வாதிகள் திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டு படுகாயம் படுத்தினார்கள், அப்பெரும் ஆபத்தி்ல் இருந்து தப்பித்து அவரது காலில் இருந்த துப்பாக்கி குண்டை  நாட்டு  வைத்திய முறையில் எடுத்து, சிகிச்சை எடுத்து கொண்டார், அவர் சாகும் வரை கொஞ்சம் கால் தாங்கிய நிலையிலேயே இருந்து இறந்தார், அந்த போராளி இறக்கும் தருவாயில் இது குறித்து அவரது மனைவியும் அவர் உடன் பிறந்தவர்கள்  சொல்லியே அவர்களது பிள்ளைகளுக்கு தெரியும்.  அந்த உழைக்கும் தொழிலாளர் பூர்வகுடி தமிழர்களுக்கு கொடுத்த  உழைப்பையும் தியாகத்தையும் மறைத்து வாழ்ந்தார், அவர் இறந்த பிறகு இப்போது வெளியே வருகிறது, உரியவர்கள் அனுமதியுடன் அவர் குறித்த வரலாறு வெளி வரும். வெளியே எங்கேயும் எங்களுக்கு முன் மாதிரிகள் தேட வேண்டிய அவசியம் இல்லை பூர்வகுடியிலே பல ஆளுமைகள் இருந்தனர், இருக்கின்றன...

ஒரு போராளியின் வரலாறு.

Image
ஒரு போராளியின்  வரலாறு. சும்மா விளம்பரத்திற்காக அல்ல, பதவிக்காக அல்ல, ஆதிக்க வாதிகள் செய்யும் கொடுமைகளை பார்த்து அவர் ரத்த கண்ணீர் வடித்தார், அடிமைத்தனம், ஆதிக்கம் கூடவே கூடாது என்ற  வெறியுடன் ஒரு குழு 1957 இல் உருவானது, அவர் சார்ந்த பகுதிக்கு அவர்கள் பாதுகாப்பு படையானர்கள், அந்த குழுவின் தலைவனை ஆதிக்க வாதிகள் உயிரோடு புதைத்துவிட்டனர் ஆனால் கற்பனையில், கதைகளில் திரைப்படங்களில் வருவது போல, நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்த மாவீரன்  புதைத்த இடத்தில் இருந்து மண்ணை தோண்டி கொண்டு வெளியே வந்தார், 10 நாட்களுக்கு பிறகு அந்த ஆதிக்கவாதிகளின் தலைவனின் மூச்சை நிறுத்தினார், அவர் இடம் பெயர்ந்து, அவரது அடையாளங்களை மறைத்து ஆதிக்கவாதிகளின் ஆதிக்கம் உடைக்க பல பணிகளை செய்தார், அவரது 30 வயதிற்கு மேல் குடும்பத்தின் அன்பில் சிக்கிகொண்டு 35  வயது க்கு மேற்பட்ட அவரின் வாழ்வு என்பது ஒரு குழந்தையை போல, அவரின் குடும்பத்திற்காகவே வாழ்ந்து மடிந்தார், அவர் குறித்த இன்னொரு பகுதியின் வாழ்வு அவரது பிள்ளைகளுக்கு கூட தெரியாது, அவரது மனைவியை தவிர... தொடரும் வரலாறு...

சைவம், வைணவம் தனி மதமாக அறிவித்திடு...!

Image
இந்தியாவில் இந்துத்துவம் மிகப்பெரிய அளவில் தற்போதைய நிலையில் பலத்தோடு எழுச்சி பெற்று நிற்கிறது, நாட்டின் பெயரை இந்துராஸ்டிரம் என்று  மாற்றுவோம் என்றும், அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று மாதிரி அரசியல் அமைப்புச் சட்டம் வெளியிடும் அளவிற்கு இந்துத்துவ சனாதன கும்பல் வளர்ச்சி அடைந்துள்ளது, இந்தகைய கொடு நெறி போக்கை, இந்த சனாதன எழுச்சியை தடுப்பதற்கு சனநாயக சக்திகள் சில செயல் வடிவங்களை முன்னெடுக்க வேண்டி உள்ளது, அதன் அடிப்படையில் சனாதனவாதிகளின் பலத்தை உடைப்பதற்கு, இந்துத்துவ கொடு நெறி அரசியலை சீர்குலைப்பதற்கு, சனநாயகத்தை பாதுகாக்க சில யுக்திகளை சமூகநீதி காவலர் #எழுச்சித்_தமிழர் முன்னெடுக்கிறார், இந்த  அரசியல் நடவடிக்கைகள் சரி என உணர்ந்த சனநாயக சக்திகளும் ஆதரிக்கிறார்கள் ஆனால்   இதனை விரும்பாத சில மூளை வீங்கிகள், அவர்கள் தான்  மாபெரும் முற்போக்குவாதி என்று கருதிக் கொண்டிருக்கும் சிலர்  சைவம், வைணவம் என்று அரசியல் செய்தால், தனிமதம் அந்தஸ்து கிடைத்து விட்டால் சாதி ஒழிந்து விடுமா, சமத்துவம் கிடைத்து விடுமா என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறாரதான், சனாதன சக்திகளின...