அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...
உடலால் நம்மிடையே இல்லாவிட்டாலும், சிந்தனையாலும் செயலாலும் என்றும் உயிருடன் இருப்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டின் முன்னாள் தலைவர், வழக்கறிஞர், #அண்ணன் #ஆம்ஸ்ட்ராங் இன்று அவரது பிறந்தநாள். மரணம் அவரது உடலை மட்டுமே எடுத்துச் சென்றது, சாதி ஒழிப்பு, சமூக நீதி, சுயமரியாதை, மனித நேயம், துணிச்சல், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் குரல்- இவையனைத்தையும் அது எடுக்க முடியவில்லை. 17 வயதில் இருந்து அண்ணன் #எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையை ஏற்று விடுதலைச் சிறுத்தைகளின் போராட்ட களத்தில் நின்று கொண்டிருக்கும் என்னை அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு தெரிந்தது, அவரை நான் நேரில் கூட பார்த்ததில்லை இருப்பினும் என் மீது காவல்துறையும் அரசும் தொடுக்கும் அடக்குமுறை அறிந்து, நான் படித்த படிப்பிற்கான தொழிலை செய்ய விடாமல் தடுத்ததை செய்வதற்காக, பல ஆண்டுகளாக நீடித்த அரச பயங்கரவாதப் பிரச்சினையில், தலையிட்டு என்னை கட்சி அடையாளங்களால் அளவிடாமல், கோட்பாட்டு வழியில் மனிதநேயத்தால் அணுகி “ஏன் இவ்வளவு நாட்களாக சொல்லவில்லை?” என்று அன்போடு கேட்டு, என்னை வழக்கறிஞராக அடையாளப்படுத்தியது அண்ணன் #ஆம்ஸ்ட்ராங் அ...