ஏமாற்றும் செயல்
நம்மை நம்பி நம்முடன் பழகும் நல்ல தோழமைகளை
ஏமாற்றுவது, அவமானப்படுத்துவது
மிகவும் கேவலமான செயல்.
வறுமை இருக்கிறது என்பதற்காக
பொய் சொல்லி,
ஏமாற்றி,
அதன் வழியாக வாழ்வது
என்ன வகையான வாழ்க்கை என்பதே புரியவில்லை.
உழைத்துதான் வாழ வழி தேட வேண்டும்.
பிறரை ஏமாற்றி வாழ வழி தேடக்கூடாது.
ஏமாற்றுவதே வாழ்க்கை என்ற எண்ணத்தை
ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
திருந்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
இப்படிப் பல நேரங்களில்
நான் பிறரை நோக்கி பேசும் போது,
ஒரு கேள்வி என்னுள் எழுகிறது.
எனக்கே ஒரு பிள்ளை பிறந்து,
அல்லது என்னுடன் வளர்ந்து,
அல்லது என் உறவிலேயே ஒருவன்
இப்படிப் பிறரை ஏமாற்றினால்
எனக்கு எப்படி இருக்கும்?
யாருடைய குடும்பத்திலும்,
யாருடைய நட்பிலும்,
யாருடைய சமூகத்திலும்
நம்பிக்கைத் துரோகிகள்
ஏமாற்றுக்காரர்கள்
இல்லாத ஒரு நிலையை உருவாக்க
நாம் அனைவரும் சேர்ந்து
ஒரு நல்ல கலாச்சாரத்தை கட்டமைக்க வேண்டும்.
இந்தப் பதிவு ஏன் என்றால்—
உழைத்து வாழும்
ஒரு தம்பியுடன் நன்றாக பழகி,
அவனது நம்பிக்கையை மோசடி செய்து
ஏமாற்றிய ஒருவரைப் பற்றிய
அந்த ஏமாந்த தம்பியின் கதையை கேட்டேன்.
மனது வலித்தது.
அந்த வலியிலிருந்தே இந்தப் பதிவு.
குற்றச் சிந்தனை
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஒளிந்து கொண்டிருக்கும்.
அதனை தலைதூக்க விடாமல்,
முடிந்த அளவு
பிறரை ஏமாற்றாமல்
நல்ல வாழ்வை வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில்—
நாம் வாழும் வாழ்க்கையைப் பார்த்தே
நம் பிள்ளைகளும்
அதே பாதையில் வளர்ந்துவிடுவார்கள்.
Comments
Post a Comment