Posts

Showing posts from December, 2021

கால் நூற்றாண்டுகளாக விடுதலைச் சிறுத்தையாய் அண்ணன் திருமாவளவன் அவர்களுடன் நான்

Image
2022 #இனிய_புத்தாண்டு #வாழ்த்துகள்... பலரை அடையாளப்படுத்தியதிலும், பலரை அமைப்பிற்குள் அய்க்கியப்படுத்தியலும்,  பலருக்கு பல தகுதிகளை ஏற்படுத்தியதிலும் எனக்கு பெரும் மகிழ்ச்சி உண்டு, சரியாக  எனது கடமையை செய்துள்ளேன். விடுதலைச்சிறுத்தையாய் நான் உணர்ந்தது எனது 16 வயதில் ,  விடுதலைச் சிறுத்தைகளின் போராட்ட களத்தில் 17 வயதிலிருந்து இருக்கிறேன் இன்று  25 ஆம் ஆண்டில்  நான்.  கடந்த 25 ஆண்டுகளில் நேர்மையுடன் மக்களுக்காக பணியாற்றி இருக்கிறேன், வாழ்ந்திருக்கிறேன்,  ஆதிக்க சக்திகள், சமூக விரோதிகள், கொள்கை பகைவர்கள், போன்ற எவரிடமும்  ஒரு திமிருடனே சுய மரியாதையுடன்   சமரசமின்றி இருந்துள்ளேன்.  என் வாழ்நாளின் பெரும் பகுதி அம்பேத்கர்- திருமா தான் என் உயிர் மூச்சுக் காற்றாக  வாழ்ந்துவிட்டேன், மன நிறைவு அடைகிறேன். நான் கடந்து வந்த பாதையை, எனது உழைப்பை பிறருக்கு சொல்லும் வகையில் மக்கள் மட்டுமே சாட்சியங்களாய் உள்ளார்கள்,    எனது போராட்ட வாழ்வில்  நான் ஒரு முறை கூட எனது புகைப்படத்தை நானே போட்டு போஸ்டர் அடித்தது இல்லை என்று சொன்னால் நீங...

புத்தாண்டு வாழ்த்துகள்

#எதிர்_நடவடிக்கைகளும்,  #நியாயமில்லாத_அதிருப்தியும்,  #என்னை_சீண்டும் #சுடு_சொற்களும்_என்னை_ஒன்றும் #செய்துவிடவில்லை. #அவர்கள்_என்_கொள்கைகளை #தாக்குகிறார்களே_ஒழிய_என்னை #தாக்கவில்லை, அவர்களை நான் நினைத்துக் கூட பாக்க மாட்டேன் ஏனெனில் எனக்கு அண்ணலும், அண்ணன் திருமா கொடுத்த அரசியல் மருந்தும்  இருக்கிறது. நான் யாருடைய அபிப்பிராயமும் பெரிது என்று நினைத்து என்னை தாழ்த்திகொண்டும், பிறர் கூறும் பாராட்டையும், புகழையும், ஆமோதிப்பையும் எதிர்பார்த்து என் பணியை செய்யவில்லை  அப்படி நான் எதிர்பார்த்து பணி செய்வது  பிறரால்  ஆட்டுவிக்கப்படும் பாதையில் பயணிப்பேன் என்பதை நான் அறிவேன்  ஆக� புரட்சியாளர் அம்பேத்கரும், என் அண்ணன் திருமாவின் கொள்கையும் கோட்பாடுமே என்னை வழி நடத்தும்.  என் எண்ணம் எதுவோ அதுவே என் சூழ்நிலை அதற்கான குணநலன்களுடன் நான் எமது போராட்ட பாதையில் செல்கிறேன். சில தோழர்களை  வேண்டுமென்றே எதிர்க்கிறேன் என்று பிறர் நினைக்ககூடும். தோழர்களே உங்களை திருப்திப்படுத்துவதற்காக நான் என் நடைமுறையை மாற்றிக்கொள்ளமுடியும்.  அப்போது நான் உண்மையானவனாக இ...

அன்னை மீனாம்பாள் சிவராஜ் பிறந்தநாள்...

Image
திசம்பர் 26 #அன்னை_மீனாம்பாள் #சிவராஜ்_பிறந்தநாள்..... பறையர் பேரினத்தின் மாபெரும் ஆளுமை , இந்தி எதிர்ப்பு போரை தமிழ்நாட்டில் முதன்முதலில் துவங்கிய வீர பறையர். ஈ.வே.ரா அவர்களுக்கு பெரியார் என்று பட்டம் வழங்கிய பூர்வகுடி அன்னை. இவர் பறையர் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான #வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் #கப்பலோட்டிய_தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான #மதுரைப்பிள்ளையின் பேத்தி. இவர் அக்காலத்தில் ரங்கூனில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிக்குலேசன்வரை படித்தவர். இவர் தனது 16வது வயதில் 1918இல் பட்டியலின இயக்கத் தலைவர்  தந்தை ந. சிவராஜ் பறையனார் அவர்களை மணந்து கொண்டார். அன்னையின் புகழ் வரலாற்றில் நிலைத்து நிற்கும்  அன்னை மீனாம்பாள் பறையர் புகழ் ஓங்குக...  அன்னையின் புகழ் வாழ்க

நல்ல கலாச்சாரம்

நல்ல கலாச்சாரம், பண்பாடு,நாகரீகம், மனித நேயம் வளர்க்காத  எந்த கொள்கையும், தத்துவமும், கோட்பாடும் மனித குலத்திற்கு எதிரானது. நமக்கு தேவை வசதியான வாழ்க்கை  அல்ல, உயர்ந்த கலாச்சார பண்பாட்டு முறையான சமூக அமைப்பு முறை  உருவாக வேண்டும். இந்தியாவில் உயர்ந்த சிறந்த கலாச்சார, பண்பாட்டை உருவாக்க கூடிய ஒரே தத்துவம் அம்பேத்கரிசமே.....

இந்து_மதத்தில்_கடவுள்_கிடையாது - #தந்தை_பெரியார்

Image
#இந்து_மதத்தில்_கடவுள்_கிடையாது - #தந்தை_பெரியார் ___________________ மதம் என்பதற்கு என்ன அடிப்படைத் தத்துவ மென்று பார்க்கும்போது யாரோ ஒருவர் கூறியதை, அது புத்திக்கு ஏற்றதா? இல்லையா? என்று சிந்திக்காமல் அவரிடம் இருக்கும் பக்தியைக் கொண்டு நம்பிவிட வேண்டும் என்பது தான். இதன்றி, கூறியதை ஆராய்ந்து, ஏன்? எப்படி? என்ன? எதற்காக? என்று அதில் கண்டவற்றுக்கு விவரம் கேட்டால் அப்படிக் கேட்பவன் மதத் துரோகி. இதுதான், அதாவது வெறும் நம்பிக்கை வைப்பதுதான் மதம் என்பதன் உட்கருத்து. பவுத்தம் என்பது ஆராய்ந்து புத்திக்குச் சரி என்றுபட்டால் மாத்திரம் ஏற்பது. உதாரணம், புத்தர் கூறியது: எனக்கும் கடவுள் என்பதற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. நான் சாதாரண மனிதன். நான் சொல்பவை என் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு எட்டியவைகளேயாகும். அவற்றை நீங்கள் ஆராய்ந்து பார்த்து உங்களுக்குச் சரியென்று பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; சரியில்லை என்று தோன்றினால் அதை விட்டு விடுங்கள் என்ப தாகும். இன்னமும் விளக்கமாக, நான் கூறுகிறேன் என்பதற்காக நம்பி விடாதே. எதையும் உன் புத்தியைக் கொண்டு ஆராய வேண்டும். இல்லையேல், நீ பகுத்தறிவு கொண்ட ...