Posts

Showing posts from August, 2022

சேரி ஆதி மனிதனின் முதல் குடியிருப்பு

Image
மனிதன் நாகரிக காலத்தை அடைந்தவுடன் வீடுகளை அமைத்து வாழ துவங்கிய காலத்தில் தோன்றிய  குடியிருப்புகளுக்கு பெயர் சேரியாகும்.  சேரியே மனிதனின் முதல் குடியிருப்பு பகுதி, மக்கள் தொகை அதிகரிப்பாலும், வாழ்வாதரத்திற்காவும் மனிதன் இடம்பெயர்வு காரணமாக பல சேரியில் இருந்து பிரிந்து பல பகுதிகளுக்கு சென்ற மனித குழுக்கள் அந்தந்த பகுதியில் அமைத்துக் கொண்ட குடியிருப்பு பகுதிகளுக்கும் சேரி என்றே அழைத்து கொண்டனர், இடத்திற்கு ஏற்றவாறு, நில வகைகளுக்கு ஏற்றவாறு, செய்யும் தொழில்களுக்கு ஏற்றவாறும், பெயர்களையும் இட்டுக் கொண்டனர், அப்படி வாழ்ந்த மனிதக் குழுக்கள் அதனை சேரி என்றும் பல பெயர்களையிட்டும் அழைத்துக் கொண்டனர்,  சேரிகளில் வாழ்பவர்கள் புதிதாக குடியேறும் பகுதிகளை குடியானவர்கள் வாழும் பகுதி என்றும் அழைத்தனர். சோழர்கள் காலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் குடியிருப்புகளுக்கு பெயர் சேரி என்கிற அடிப்படையிலேயே அழைக்கப்பட்டிருக்கிறது, குடியிருப்புகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றது அதில் செய்யும் தொழிலின் அடிப்படையில் தீண்டாச்சேரி என்றும் பல ஊர்கள் இருந்திருக்கிறது அந்த தீண்டாச்சேர...