Posts

Showing posts from October, 2021

சனாதன சமூக அமைப்பு

#மீள்பதிவேற்றம் பிற்போக்கான பண்பாட்டு பழக்க வழக்கங்கள்,மூட நம்பிக்கையில்  அறிவியல் அற்ற தன்மையிலான மத நம்பிக்கையில், புராணங்கள், கற்பனை கதைகளை நம்பி, சனாதனத்தில்  திளைத்து போய் வாழ்கின்ற சமூக அமைப்பில் வாழ்வாதாரத்திற்காக  மனப்பாட கல்வி பயின்று நல்ல வேலைக்காக, போட்டி தேர்வு எழுதுவதற்காக மனப்பாடம் செய்து  தேர்ச்சி பெற்று அதிகாரியாக உருவாகியிருப்பவன், ஆய்வு பட்டங்கள் பெற்று இருப்பவன் ,அறிவியலை, மருத்துவத்தை, தொழிநுட்பத்தை, விஞ்ஞானத்தை மனப்பாடம் முறையில் படித்தவன் ஒன்றுக்கும் உதவாதவன் தான், இவனால் இந்த நாட்டை எந்த துறையிலும் மேம்படுத்த முடியாது வரி மட்டுமே வசூல் செய்து அரசை , அரசாங்கத்தை நடத்தலாம். இந்த அறிவு கெட்ட முண்டங்கள் தான் நெருப்பில் இருந்து பிறந்தேன் என்கிறது,  தலையில் இருந்து பிறந்தவன் என்று நம்புகிறது, மார்பின் வழியே வந்தவன் என்று பீத்தி கொள்கிறது, கால் பாதத்தில் இருந்தும் பிறந்ததாக சொல்கிறது. மனிதனுக்கு மனிதன்  வேறுபாடு பார்க்கிற பண்பாட்டு பழக்க வழக்கங்கள் இருக்கும் போது இவன் எப்படி மக்களுக்காக, மேம்பட்ட ஓர் நாட்டை கட்டி எழுப்ப முடியும். விஞ்ஞானம், ...

மீள்_பதிவு

Image
#மீள்_பதிவு   ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட பிரச்சினை, தனிப்பட்ட கோபம், தனிப்பட்ட கருத்துக்களால், தனிப்பட்ட வெறுப்பால் ஓர் மாபெரும் தலைமையை, மாபெரும் இயக்கத்தை விமர்சனத்திற்கும், பழி சொல்லிர்க்கும், தேவையில்லாத விரோதம் உருவாக்குவதற்கும் வழி வகுக்குகிறது..... தலைமையை நேசிப்பது என்பதிலும் கொள்கை நேசிப்பு என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும் சம அளவில் இருக்கவேண்டும். உங்கள் சொந்த வெறுப்புக்கும், பகைக்கும் கட்சியை பயன்படுத்த வேண்டாம்  அடுத்தடுத்த தலைமுறைக்கும் கட்சி சென்றாக வேண்டும்.  மக்களுக்குகான மாபெரும் இயக்கம் இது தனிப்பட்ட எவருக்கும் சொந்தம் கிடையாது. தினமும் முகநூலில் சகோதரத்துத்துவத்தை உடைக்கிற கருத்து மட்டுமே சில தற்குறிகளால் கட்டமைக்கப்படுகிறது, சாதிய மதவாத சக்திகளை எதிர்ப்பதைவிட சொந்த சமூகத்தவரை எதிர்த்து செய்கிற வேலையே பெரிதாக இருக்கிறது,  கொள்கை அடிப்படையில் வருடத்திற்கு 10 இளைஞர்களை அரசியல் படுத்தி கட்சிக்கு அழைத்துவரும் வேலை செய்தலே போதும்  அதை விடுத்து உட்கட்சி முரண்பாடு, பொறாமை அரசியல், நல்லவர்களை பிரிப்பது , பழி சொல்வது, ஆதரவு சக்திகளை எ...

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

Image
*தமிழக அரசே* ! *காவல் துறையே* !    *விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்* மற்றும் *SC/ST*   *இளைஞர்களை* *பல ஆண்டுகளாக ரவுடி பட்டியலில்* *வைத்திருப்பதை*   *ஆய்வு செய்து* *நடவடிக்கை எடு* ….     ஒரு வரலாற்று தாள் ( History sheet ) அல்லது ரவுடி தாள் ( Rowdy sheet) ஒன்றினை ஒரு நபர் பெயரில் ஏற்படுத்தப்பட்டு அந்த நபர் மீது  வரலாற்று தாள் ஏற்படுத்தப்பட்ட அல்லது ஒரு ரவுடி என்ற முத்திரை  குத்தப்படுமேயானால் அது அந்த நபர் மீது ஒரு அழியாத களங்கத்தை  ஏற்படுத்திவிடும். அதோடு அவருடைய அடிப்படை உரிமைகளை  பாதிப்பதாகவும் அமைந்துவிடும். குறிப்பாக இந்திய அரசியலமைப்பு  சட்டம் கட்டளை  (Articles) 21 மற்றும் 19(1)-ல் வழங்கப்பட்டுள்ள  சுதந்திரமாக வாழும் உரிமையை பறிப்பதாகவும் அமைந்துவிடும்.  அத்தகையை அடிப்படை உரிமையை சரியான காரணங்களின்  அடிப்படையில்தான் கட்டுப்படுத்த முடியும். அந்த உரிமையை எந்த ஒரு  முறையிலும் அதிகாரம் பெற்ற ஒருவரின் உத்தரவினால் சரியான காரணங்கள் இல்லாமல் பறிக்கபடுமேயானால் அந்த ...