Posts

Showing posts from January, 2024

எயினர்கள் பறையர்களின் முன்னோர்கள். -ஏட்கர் தர்ஸ்டன்-

எயினர்கள் பறையர்களின் முன்னோர்கள்... ஏட்கர் தர்ஸ்டன் ___________________   கொட்டு எனப்பொருள்படும் பறை என்ற சொல்லிலிருந்து பறையர் என்ற சொல் பிறந்ததாக த கால்டுவெல் கருதுகின்றனர். பறையருள் சிலர் திருமணம், சாவு , திருவிழா ஆகியவற்றின்போது பறை கொட்டுவதோடு அரசின் அறிவிப்புக்களைப் பறைகொட்டி  அறிவிக்கின்றனர். எனினும் இக் கருத்தை உடன்படாதவராக 1891 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கையில் திரு. எச்.ஸ்டுவர்ட் கூறியுள்ளவை வருமாறு:- பறையர்களுள் ஒரு பிரிவினர் பறைகொட்டுகின்றனர். இத் தொழில் பறையருக்கு மட்டும் உரியதாக இல்லை. இன்று எண்ணிக்கையில் மிகுந்தவர்களாகவும் ஒரு காலத்தில் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருந்த சாதியாரின் பெயர் அவ்வப்பொழுது அவர்கள் இன்று பலசாதியாரோடு மேற்கொள்ளும் தொழிலின் அடிப்படையில் அமைந்தது என்பது ஒரு சிறிதும் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நிகண்டான திவாகரத்தில் பறையர் என்ற சொல் காணப்படவில்லை. இன்றும் மலையாளத்தில் வழக்கில் உள்ளதான புலையன் என்ற சொல்லே அன்று இச்சாதியாரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது . சைவ சமய நாயன்மார்களுள் ஒருவரான நந்தன...