வலிமையான சொற்கள் உச்சரிக்கும்போது வல்லமை பெறுகிறோம்
வலிமையான சொற்கள் உச்சரிக்கும்போது வல்லமை பெறுகிறோம் _________________________ அண்ணன் தொல்.திருமா அவர்களின் பேச்சிலும், எழுத்திலும், வாழ்வியல் முறையிலும் வலிமை இருக்கிறது, விடுதலைக்கான அறிவியல் இருக்கிறது. பாடலிலும், பேச்சிலும், கவிதைகளிலும், சொற்கள் இருக்கின்றன அந்த சொற்கள் எதைக் குறிக்கின்றனவோ அந்த வலிமை அந்த சொற்களுக்கு உண்டு. அதனால் தான் சில வார்த்தைகள் சில மந்திரங்களாக்கி வைத்திருக்கிறார் அண்ணன் எழுச்சித்தமிழரின் அவரது முழக்கங்கள், நமக்கு உற்சாகத்தை தருகிறது, இடைவிடாத போராட்டத்தை நடத்த ஊக்கத்தைதருகிறது. அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! இப்படியாக என்னற்ற விடுதலை முழுக்கங்கள் அண்ணன் திருமா அவர்கள் எழுதியிருக்கிறார் அவைகள் அனைத்தும் பூர்வகுடி மக்கள் விடுதலைக்கு படைத்தவை. அவரின் எண்ணங்களை வலிமை நிறைந்த எண்ணங்களை விடுதலை வேண்டி தவிப்பர்களின் மனத்தில் நிறைப்பது, விடுதலை போராட்டம் என்கிற எண்ணங்களில் மனதை ஊரப் போடுவது, அண்ணன் திருமாவை படிக்கும்போது எண்ணும் போது நம் மனத்தில் போராடு என்கிற எண்ணங்கள் உருவாகும். அண்ணனின் எழுத்துகள் சிறந்த அறிவிய...