Posts

Showing posts from 2025

மக்களுக்கான அரசியல் ஏன் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகிறது?

Image
மக்களுக்கான அரசியல் ஏன் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகிறது? இன்றைய தமிழக–இந்திய அரசியல் சூழலில், “மக்கள் அரசியல்” என்ற பெயரில் நடைபெறும் பெரும்பாலான செயல்பாடுகள், உண்மையில் மக்களை அதிகாரத்துக்கு அருகே கொண்டு செல்லவில்லை. மாறாக, அவர்கள் “issue-based politics” எனப்படும் ஒரு குறுகிய அரசியல் வட்டத்திற்குள் சிக்க வைக்கப்படுகிறார்கள். Issue-based politics என்பது தன்னிச்சையாக உருவாகும் அரசியல் அல்ல. அது ஆளும் வர்க்கத்தினரும், கார்பரேட் முதலாளிகளும், ஏகாதிபத்திய நாடுகளும் திட்டமிட்டு உருவாக்கும் அரசியல் யுக்தி.  இவர்களின் ஊடகங்களின் வழியாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு பிரச்சினை பெரிதாக்கப்படுகிறது. அதே பிரச்சினை அரசியல் விவாதத்தின் மையமாக மாற்றப்படுகிறது. மக்கள் அந்த “issue”-க்குள் சிக்க வைக்கப்படுகிறார்கள். சில நாட்கள் அல்லது மாதங்களில் அந்தப் பிரச்சினை மறைக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக புதிய ஒரு “issue” உருவாக்கப்படுகிறது. இந்த தொடர்ச்சியான திசைதிருப்பலின் மூலம், அடிப்படை அரசியல் கேள்விகள் முற்றிலும் மறைக்கப்படுகின்றன. நிலம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? உற்பத்தி யாரால் நிர்ணயிக்...

சனாதனத்துக்கு எதிரான சமதர்மப் புரட்சிப் பயணம்✦ புத்தர் – அம்பேத்கர் – திருமாவளவன் ✦

Image
சனாதனத்துக்கு எதிரான சமதர்மப் புரட்சிப் பயணம் ✦ புத்தர் – அம்பேத்கர் – திருமாவளவன் ✦ ஏறத்தாழ 2400 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இந்தியப் பேரமைப்பில் உழைக்கும் மக்களை சமதர்ம ஆன்மீகக் கோட்பாட்டின் கீழ் ஒருங்கிணைத்து, (Conservative) சனாதனக் கொள்கைக்கு எதிராக ஒரு அமைப்புசார்ந்த போராட்டத்தை நடத்தியவர் உலகின் முதல் முற்போக்கு புரட்சியாளர் – புத்தர். இந்தியாவில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே விவசாய சமூகக் கட்டமைப்பில் உழைக்கும் மக்களாக இருந்து, சமூக ரீதியாக உடைக்கப்பட்ட மனிதர்களாக—பி.ஆர்.அம்பேத்கர் கூறிய “Broken Men”—அடையாளப்படுத்தப்பட்டவர்களே இன்றைய தலித்துகள். வரலாற்று தொடர்ச்சியில், இன்னொரு உழைக்கும் இந்தியாவாக தொடர்ந்து வாழ்ந்து வரும் இந்த சமூகமே, உண்மையில் முதல் கம்யூனிச சமூக அமைப்பு எனலாம். உழைப்பின் வலிமையையும், பேரண்ட ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு சமத்துவ சமூக அமைப்பை வலியுறுத்திய அனைவரையும், இந்தியாவின் (Conservative) சனாதனவாதிகள் திட்டமிட்டு “தீண்டத்தகாதவர்கள்” என மாற்றினர். இது ஒரு இயல்பான சமூக நடைமுறை அல்ல; அது திட்டமிட்ட அரசியல்–சமூக வன்முறை. கார்ல் மார்க்ஸ் அவர்களின் பொருளாத...

நிலவுடமை ஆதிக்கமா? சாதிய ஆதிக்கமா?

நிலவுடமை ஆதிக்கமா? சாதிய ஆதிக்கமா? —-------------------------------- புரட்சியாளர் அம்பேத்கரின் பார்வையில் சமூக அதிகாரத்தின் உண்மை இந்திய சமூகத்தைப் புரிந்துகொள்ள முயலும் ஒவ்வொரு அரசியல் விவாதத்திலும் அடிக்கடி எழும் கேள்வி ஒன்று உண்டு: “இந்த நாட்டில் ஆதிக்கம் நிலத்தின் மூலமா, அல்லது சாதியின் மூலமா?” முதல் பார்வையில், நிலம் அதிகாரத்தின் அடிப்படை என தோன்றலாம். ஆனால் இந்திய சமூகத்தின் ஆழத்திற்குள் சென்று பார்த்தால், நிலத்தைக் கூட கட்டுப்படுத்தும் சக்தி சாதிதான் என்பதே உண்மை. இதனை மிகத் தெளிவாகவும் அறிவியல் ரீதியாகவும் உலகிற்கு எடுத்துச் சொன்னவர் புரட்சியாளர் அம்பேத்கர். நிலமும் அதிகாரமும் — இந்திய யதார்த்தம் ஐரோப்பிய சமூகங்களில், நிலம், மூலதனம், தொழில் ஆகியவை சமூக அதிகாரத்தை நிர்ணயித்தன. ஆனால் இந்தியாவில் நிலம் ஒருபோதும் சுயாதீன அதிகாரமாக இருந்ததில்லை. அது எப்போதும் சாதியின் கீழ்ப்படிதல் கருவியாகவே இருந்தது. அம்பேத்கர் இதை மிகத் தெளிவாகச் சொல்கிறார்: “Caste is not merely a division of labour, it is a division of labourers.” (சாதி என்பது வேலைப் பிரிவே அல்ல; மனிதர்களையே பிரிக்கும் அமைப்பு.) ...

மனித நேய கலாச்சாரத்தின் அடித்தளம் அம்பேத்கரிசமே...

மனித நேய கலாச்சாரத்தின் அடித்தளம்  அம்பேத்கரிசமே... ______________________ நல்ல கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் மற்றும் மனித நேயம் ஆகியவை வளர்க்கப்படாத எந்த கொள்கையும், தத்துவமும், கோட்பாடும் மனித குலத்திற்கு எதிரானதே. மனித சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிடுவதற்கான உண்மையான அளவுகோல் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியோ அல்லது பொருளாதார வசதிகளோ அல்ல; மாறாக, அந்தச் சமூகத்தில் மனித மரியாதை எவ்வளவு பாதுகாக்கப்படுகிறது, சமத்துவம் எவ்வளவு நடைமுறையில் அமல்படுத்தப்படுகிறது என்பதில்தான் உள்ளது. இன்றைய உலகம் “வசதியான வாழ்க்கை” என்ற பெயரில் பொருளாதார வளர்ச்சியையே முன்னேற்றமாகக் காட்ட முயல்கிறது. ஆனால் வசதிகள் அதிகரிப்பது மட்டுமே உயர்ந்த நாகரீகமாகிவிடாது. மனிதனை மனிதனாக மதிக்காத, ஒருவரை ஒருவர் ஒடுக்கிக் கொண்டு வாழும் சமூக அமைப்பு எவ்வளவு வசதிகளுடன் இருந்தாலும் அது மனித நேயமற்ற சமூகமாகத்தான் இருக்கும். ஆகவே நமக்கு தேவை வசதியான வாழ்க்கை அல்ல; உயர்ந்த கலாச்சார பண்பாடுகளுடன் கூடிய, மனித மரியாதையை மையமாகக் கொண்ட சமூக அமைப்பு. இந்திய சமூகத்தின் வரலாற்றை நோக்கினால், சாதி, மதம், பாலினம் போன்ற அடிப்படைகளில் மனிதர்கள...

✊🏽 இந்த மண் எங்களுடையது! ✊🏽

✊🏽 இந்த மண் எங்களுடையது! ✊🏽 September 19, 2023 பதிவு 200 ஆண்டுகால வரலாற்றை எடுத்து கொண்டால் கூட எங்கள் தாத்தன் – பாட்டன் – முப்பாட்டன் உழவு செய்ய நிலம் இருந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவின் குறிப்பாக கடந்த 60 ஆண்டுகளில் அந்த நிலங்கள் எங்கள் தந்தை தலைமுறையிடமிருந்து முறையாகப் திட்டம் போட்டு பறிக்கப்பட்டன. சாதி ஒழிந்தது என்று பேசும் இந்த நவீன காலத்தில்தான் சாதியும், சுரண்டலும், ஆதிக்கமும், அடக்குமுறையும் முன்னெப்போதையும் விட நவீனமாகவும் திட்டமிட்டும் அதிகரித்துள்ளது. நம்மிடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக்கொண்டு, “நாங்கள்தான் எல்லாம் செய்தோம்” என்று மார்தட்டும் சூத்திர சனாதன அரசியல் வாதிகளின் பொய்யை உடைக்க வேண்டிய நேரம் இது. 📌 வரலாறு பேசட்டும்! தென்னார்க்காடு மாவட்டத்தில், இன்றைய கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில், பறையர்கள் அனைவரிடமும் ஒரு காலத்தில் நிலம் இருந்தது. இன்று ஏளனமாக பேசும் ஆதிக்கக் குரல்களிடம்  ஒரே ஒரு கேள்வி: 👉🏽 உன் தாத்தா காலத்தில் உனக்கு நிலம் இருந்ததா? 👉🏽 இன்று நீ வைத்திருக்கும் சொத்து 50 வருடங்களுக்கு முன்பே உன்னிடம் இருந்ததா? 💰 புதிய பணக்காரனின்  பழைய ஆதிக்கம...

ஊடக பயங்கரவாதம்

இன்றைய சூழலில் ஊடகவியலாளர்களுக்கு “எதை வேண்டுமானாலும் கேட்கலாம், யாரை வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம்” என்ற அபத்தமான நிலையே உருவாகியுள்ளது. அதனை அரசியல் ரீதியாக ஆதரிப்பதும், கண்டிப்பதும் போன்ற இரு முனைப்புகளும் நிலவுகின்றன. ஆனால்  அறங்கெட்ட ஊடகத்தின்மீது யார் எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள்? தவறான தகவல்கள், நேர்மையற்ற கேள்விகள், நாகரிகமற்ற அணுகுமுறைகள், மனித சமத்துவத்திற்கு சமூக நீதிக்கு தமிழினை விடுதலைக்கு போராடுகின்ற ஆளுமைகள் மீது அவதூறுகள் பரப்புவதை கண்டிப்பதற்கு  சமூகத்திலோ, அரசியலிலோ எந்தத் தடையும் எதிர்ப்பும் கண்டிப்பும் இல்லை.  குறிப்பாக சேரிமக்கள் மீதும், அவர்களின் அரசியல் மீதும், அவர்களுக்காக போராடும் தலைவர்கள்மீதும்கூட தினந்தோறும் திட்டமிட்ட பரப்புரையாக வன்மமும் அவதூறும் செலுத்தப்படுகிறது. அநியாய ஊடகத்தை எதிர்கொள்வது – அவசியமான காலத்தின் கோரிக்கை சாதி ஆதிக்கம் கொண்ட ஊடக அமைப்புகளுக்கு மாற்றாக சமூக நீதிக்காக,ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் மற்றும்  சேரிமக்கள் தங்கள் சொந்த இதழ்களை, நாளேடுகளை, டிஜிட்டல் மீடியாக்களை உருவாக்க வேண்டும். அனைவரும் தகவல் துறையில் தங்...

கடலூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு தரக்கோரி போராட்டம்

Image
அக்டோபர் 25 முதல் 31 வரை மண்ணுரிமை வாரம்  டாக்டர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆணைக்கிணங்க  நாளை  31 வெள்ளிக்கிழமை காலை 10  மணி முதல் 2 மணிவரை கடலூரில்  பஞ்சமி நில உரிமை மீட்பு  பேரணி- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பஞ்சமி நில உரிமை மீட்பு போராட்டம்

Image

பஞ்சமி நில உரிமை மீட்பு போராட்டம்

Image

சமூக மாற்றத்தின் குரலாக இயக்குனர் பா. ரஞ்சித் திகழ்கிறார்.

Image
சாதியச் சிக்கல்களை தீர்ப்பதற்கு மிகப்பெரிய மக்கள் தொடர்பு சாதனமான திரைத்துறையின் ஊடாக — சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, பாலின வேறுபாடு, மண்ணுரிமை, பூர்வகுடிகளின் வரலாறு போன்ற பிரச்சனைகள் குறித்தெல்லாம் ஒரு பெரும் விவாதத்தை உருவாக்கி, திரைத்துறையில் அடுத்த கட்ட முற்போக்கான வளர்ச்சியை நோக்கி எடுத்துச் சென்றவர் அறிவுகுடி இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களே. ரஞ்சித்திற்கு முன்பாக திரைத்துறையில் முற்போக்கு பேசியவர்கள் பெரும்பாலும் காந்திய சிந்தனையுடையவர்கள். ஆகவே அவர்கள் காந்தியம் பற்றியே பேசினர்; அதுவே அவர்களின் வரம்பாக இருந்தது. ஆனால், இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் — “நான் மட்டும் இல்லாமல், என்னால் இன்னொருவரும் உருவாக வேண்டும்; அதன் மூலம் பலரும் உருவாக வேண்டும்; இந்த சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டும்” என்ற ஆழமான புரிதலோடு வாழ்பவர். தன்னுடைய திறமை, உழைப்பு, சம்பாதித்த அனைத்தையும் சமூக சமத்துவத்திற்காக அர்ப்பணித்து வருகிறார். ஒரு திரைப்பட இயக்குநராக இருந்தாலும், அவ்வப்போது மக்களுக்கான போராட்டக் களத்திலும், பண்பாட்டு தளத்திலும், சாதி ஒழிப்பு களத்திலும் உறுதியுடன் நிற்பவர் ரஞ்சித் அவர்கள் ம...