Posts

Showing posts from September, 2022

நடுவீரப்பட்டு சேரியில் புகுந்து தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடு

*தமிழக அரசே...!*                                   *காவல்துறையே...!*  கடலூர் வட்டம், கடலூர் ஒன்றியம் குமளங்குலம் ஊராட்சி, நடுவீரப்பட்டு காலனி அருகே  சேரி மக்கள் வழிபடும் அய்யனார் கோவில் உள்ளது அக்கோயிலில் ஆண்டு தோறும் ஊரணி பொங்கல் வைத்து சேரி மக்கள் உள்ளிட்ட அனைத்து சாதியினரும் வழிபடுவார்கள்.  கடந்த இரண்டு வருடங்களாக கொரான நோய் பரவல் காரணமாக  பொங்கல் வைத்து வழிபடவில்லை, ஆகவே இந்த ஆண்டு  நடுவீரப்பட்டு சேரி மக்கள் வீட்டு வரி போட்டு வழக்கம்போல் ஊரணி பொங்கல் வைக்கும் திருவிழாவை நடத்த 05.09.2022 அன்று ஏற்பாடு செய்து கோயிலை அலங்காரப்படுத்தி அனைத்து பணிகளையும் செய்தனர்,  வழக்கம்போல் சஞ்சீவிராயன் கோயில் கிராமத்தை சேர்ந்த சுமார் 100 வன்னியர்கள் ஆண்கள்,பெண்கள் அனைவரும் நடுவீரப்பட்டு காலனி  அய்யனார் கோயிலுக்கு 5.09.2022 அன்று காலை சுமார் 7 மணிக்கு பொங்கல் வைக்க வந்தனர். 04.09.2022 அன்று இரவு  நடுவீரப்பட்டு காலனியில் செல்வகுமார் என்பவர் இறந்ததால் நடுவீரப்பட்டு காலனி மக்க...

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்தியாவிலிருந்து தமிழர்கள் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

ஏகாதிபத்தியத்தால் (பேரரசுவாதம்), காலணி ஆதிக்கத்தால் இந்த நூற்றாண்டில் இந்திய ஒன்றியத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் தான் குறிப்பாக  தமிழக பூர்வ குடிகள் தான்,  ஆம் அப்படி பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியா அல்லாத இலங்கை,மலேசியா, மியன்மார் போன்ற பிற நாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டு வெள்ளையர்களின் வணிக லாபத்திற்காக கொத்தடிமைகளாக, கூலிகளாக வேலைக்கு அமர்த்தி கொண்டனர், அக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்து சென்ற இந்திய தமிழர்கள் குறித்து தற்போதைய நிலையில் இந்தியாவில் தமிழர்கள் உள்ளிட்ட யாரும் அவர்களை பற்றி கவலைப்படுவதே இல்லை என்பது கவலைக்குரிய ஒன்றாகும். அவர்களின் உறவினர்களும் கூட புலம்பெயர்ந்து சென்ற உறவுகள் மீண்டும் பூர்வீகத்திற்கு அதாவது சொந்த நாட்டிற்கு வந்தால் அவர்களின் தந்தை,தாய், பாட்டன் பூட்டன் விட்டு சென்ற சொத்தில் உரிமை கோருவார்கள் என்ற சுய நலத்தின் காரணமாகவும் பலருக்கு இரத்த வழி உறவுகள் குறித்து கவலைகள் இல்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள்  வாழுகின்ற நாட...