Posts

Showing posts from November, 2026

1891 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பறையர் சமூகத்தின் 348 உட்பிரிவுகள் – சோழியர் என்ற பெயர் வெளிப்படுத்தும் வரலாறு!

1891 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பறையர் சமூகத்தின் 348 உட்பிரிவுகள் – சோழியர் என்ற பெயர் வெளிப்படுத்தும் வரலாறு! பிரிட்டிஷ் கால ஆவணங்கள் பதிவு செய்த பறையர் சமூகத்தின் உட்பிரிவுகள், தொழில் அடையாளங்கள், சோழியர் என்ற பெயரின் வரலாற்றுப் பின்னணி குறித்த ஓர் ஆய்வு. வழக்கறிஞர் மு. அறிவுடைநம்பி ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அந்தச் சமூகம் இன்று எந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது என்பதை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. அந்தச் சமூகத்தின் பழமையான பெயர்கள், உட்பிரிவுகள், தொழில்கள், வாழ்விடங்கள், பண்பாட்டு மரபுகள், அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தே அதன் வரலாற்றை அறிய முடியும். அந்த வகையில், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான சமூகங்களில் ஒன்றான பறையர் சமூகத்தின் வரலாற்றை ஆராயும்போது, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகளும், இனவியல் ஆய்வு நூல்களும் மிக முக்கியமான ஆவணங்களாக விளங்குகின்றன. குறிப்பாக 1891ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பறையர் சமூகத்தின் 348 உட்பிரிவுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக 1906ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்விதழ்...