மக்களுக்கான அரசியல் ஏன் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகிறது?
மக்களுக்கான அரசியல் ஏன் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகிறது? இன்றைய தமிழக–இந்திய அரசியல் சூழலில், “மக்கள் அரசியல்” என்ற பெயரில் நடைபெறும் பெரும்பாலான செயல்பாடுகள், உண்மையில் மக்களை அதிகாரத்துக்கு அருகே கொண்டு செல்லவில்லை. மாறாக, அவர்கள் “issue-based politics” எனப்படும் ஒரு குறுகிய அரசியல் வட்டத்திற்குள் சிக்க வைக்கப்படுகிறார்கள். Issue-based politics என்பது தன்னிச்சையாக உருவாகும் அரசியல் அல்ல. அது ஆளும் வர்க்கத்தினரும், கார்பரேட் முதலாளிகளும், ஏகாதிபத்திய நாடுகளும் திட்டமிட்டு உருவாக்கும் அரசியல் யுக்தி. இவர்களின் ஊடகங்களின் வழியாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு பிரச்சினை பெரிதாக்கப்படுகிறது. அதே பிரச்சினை அரசியல் விவாதத்தின் மையமாக மாற்றப்படுகிறது. மக்கள் அந்த “issue”-க்குள் சிக்க வைக்கப்படுகிறார்கள். சில நாட்கள் அல்லது மாதங்களில் அந்தப் பிரச்சினை மறைக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக புதிய ஒரு “issue” உருவாக்கப்படுகிறது. இந்த தொடர்ச்சியான திசைதிருப்பலின் மூலம், அடிப்படை அரசியல் கேள்விகள் முற்றிலும் மறைக்கப்படுகின்றன. நிலம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? உற்பத்தி யாரால் நிர்ணயிக்...