மக்களுக்கான அரசியல் ஏன் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகிறது?

மக்களுக்கான அரசியல் ஏன் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகிறது?

இன்றைய தமிழக–இந்திய அரசியல் சூழலில், “மக்கள் அரசியல்” என்ற பெயரில் நடைபெறும் பெரும்பாலான செயல்பாடுகள், உண்மையில் மக்களை அதிகாரத்துக்கு அருகே கொண்டு செல்லவில்லை. மாறாக, அவர்கள் “issue-based politics” எனப்படும் ஒரு குறுகிய அரசியல் வட்டத்திற்குள் சிக்க வைக்கப்படுகிறார்கள்.

Issue-based politics என்பது தன்னிச்சையாக உருவாகும் அரசியல் அல்ல. அது ஆளும் வர்க்கத்தினரும், கார்பரேட் முதலாளிகளும், ஏகாதிபத்திய நாடுகளும் திட்டமிட்டு உருவாக்கும் அரசியல் யுக்தி. 

இவர்களின் ஊடகங்களின் வழியாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு பிரச்சினை பெரிதாக்கப்படுகிறது. அதே பிரச்சினை அரசியல் விவாதத்தின் மையமாக மாற்றப்படுகிறது. மக்கள் அந்த “issue”-க்குள் சிக்க வைக்கப்படுகிறார்கள். சில நாட்கள் அல்லது மாதங்களில் அந்தப் பிரச்சினை மறைக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக புதிய ஒரு “issue” உருவாக்கப்படுகிறது.
இந்த தொடர்ச்சியான திசைதிருப்பலின் மூலம், அடிப்படை அரசியல் கேள்விகள் முற்றிலும் மறைக்கப்படுகின்றன.

நிலம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது?
உற்பத்தி யாரால் நிர்ணயிக்கப்படுகிறது?
அரசியல் அதிகாரம் உண்மையில் யாரிடம் உள்ளது?

சாதி–வர்க்க அடக்குமுறை எவ்வாறு அரசியலாக்கப்படுகிறது?
இந்தக் கேள்விகளுக்கு issue-based politics ஒருபோதும் செல்லாது.
இன்றைய ஊடகங்கள் மக்களின் குரலாக இல்லை. அவை அதிகாரத்தின் குரலாக மாறிவிட்டன. 

எந்த பிரச்சினை பேசப்பட வேண்டும், எது பேசப்படக்கூடாது, யார் பேச வேண்டும், யார் ஒதுக்கப்பட வேண்டும் என்பதனை ஊடகங்களே தீர்மானிக்கின்றன. இதன் விளைவாக, இடஒதுக்கீடு, சாதிய ஒடுக்குமுறை, உழைப்புச் சுரண்டல், கார்பரேட் கொள்ளை போன்ற அடிப்படை கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றன.
I
ssue-based politics-இன் மிகப்பெரிய மோசடி என்னவென்றால், அது மக்களுக்கு “நாம் போராடுகிறோம்” என்ற உணர்வை மட்டும் தருகிறது. ஆனால்  சாதிய ,அதிகார கட்டமைப்பை அப்படியே பாதுகாக்கிறது. மக்கள் தெருவில் இறங்குகிறார்கள், கோஷங்கள் எழுப்புகிறார்கள், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் அரசியல் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதில் எந்த மாற்றமும் நிகழவில்லை.
இதன் காரணமாகவே, தமிழகத்திலும் இந்தியாவிலும் உயர்ந்த கொள்கை கொண்ட, மக்களுக்கான அரசியல் இலக்கை முன்வைக்கும் கட்சிகளும் இயக்கங்களும் தங்கள் இலக்கை அடைய முடியாமல் தடுக்கப்படுகின்றன. 

அவை தேர்தல் அரசியலுக்குள் இழுக்கப்படுகின்றன. ஊடக கவனத்தை பெற வேண்டிய கட்டாயத்தில் தங்கள் கொள்கைகளை மெல்ல நீர்க்கச் செய்கின்றன. இறுதியில், கொள்கை அரசியல் போராட்ட அரசியலாக மாறாமல், தேர்தல் கணக்காக சுருங்குகிறது.

இது அந்த இயக்கங்களின் தோல்வி அல்ல. இது திட்டமிட்ட தடுப்பு. சமூக மாற்ற அரசியலை பிறக்க விடாமல் தடுக்கும் அதிகார வர்க்கத்தின் அரசியல் யுக்தி.
உண்மையான சமூக மாற்ற அரசியல் ஒரு issue-இல் இல்லை. அது hashtag-களில் இல்லை. அது தேர்தல் வாக்குறுதிகளில் இல்லை. அது அடிப்படை சமூக–பொருளாதார கட்டமைப்பை மாற்றும் கொள்கை அரசியலில்தான் உள்ளது.

Issue-based politics எனும் இந்த அரசியல் வட்டத்திலிருந்து வெளியேறும் வரை, மக்களுக்கான அரசியல் அதன் இலக்கை அடையாது. அந்த வட்டத்தை உடைத்து, கொள்கை அரசியலை மீண்டும் மையமாக்கும் நாளில்தான், உண்மையான மக்கள் அரசியல் பிறக்கும்.

இவண்:-
வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

(2017 ம்  ஆண்டு திசம்பர் 31 தேதி இதே நாளில்  எழுதியது,fb பதிவு )

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்