ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு
*தமிழக அரசே* ! *காவல் துறையே* !
*விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்* மற்றும் *SC/ST*
*இளைஞர்களை* *பல ஆண்டுகளாக ரவுடி பட்டியலில்* *வைத்திருப்பதை*
*ஆய்வு செய்து* *நடவடிக்கை எடு* ….
ஒரு வரலாற்று தாள் ( History sheet ) அல்லது ரவுடி தாள் ( Rowdy sheet) ஒன்றினை ஒரு நபர் பெயரில் ஏற்படுத்தப்பட்டு அந்த நபர் மீது
வரலாற்று தாள் ஏற்படுத்தப்பட்ட அல்லது ஒரு ரவுடி என்ற முத்திரை
குத்தப்படுமேயானால் அது அந்த நபர் மீது ஒரு அழியாத களங்கத்தை
ஏற்படுத்திவிடும்.
அதோடு அவருடைய அடிப்படை உரிமைகளை
பாதிப்பதாகவும் அமைந்துவிடும்.
குறிப்பாக இந்திய அரசியலமைப்பு
சட்டம் கட்டளை (Articles) 21 மற்றும் 19(1)-ல் வழங்கப்பட்டுள்ள
சுதந்திரமாக வாழும் உரிமையை பறிப்பதாகவும் அமைந்துவிடும்.
அத்தகையை அடிப்படை உரிமையை சரியான காரணங்களின்
அடிப்படையில்தான் கட்டுப்படுத்த முடியும். அந்த உரிமையை எந்த ஒரு
முறையிலும் அதிகாரம் பெற்ற ஒருவரின் உத்தரவினால் சரியான
காரணங்கள் இல்லாமல் பறிக்கபடுமேயானால் அந்த செயல் அடிப்படை
உரிமை மீறப்பட்ட செயலாக கருதப்படும் என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்தகைய பல
சூழ்நிலையில் இந்த நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை
காப்பாற்றுகிற வகையில் உயர்நீதி மன்றத்தின் தலையீடும், தீர்ப்பும் பல
உள்ளன. ஆனால் காவல்துறை நீதிமன்ற தீர்ப்புகளை, சட்டத்தை, அரசின்
ஆணைகளை மதிக்காமல், சரியாக நடைமுறை படுத்தாமல் சாதி
அடிப்படையில் அரசியல் கட்சி பாகுபாட்டில் பழிவாங்கும்
உணர்ச்சியில் தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற நிலைப்பாட்டில்
காவல் அதிகாரிகளின் தவறான நடவடிக்கையில் சட்டவிரோதமாக
குற்றமற்ற பலரை ரவுடிகள் (Rowdy sheet ) பட்டியலில் அல்லது வரலாற்று
(History sheet) பதிவேட்டில் சேர்த்து அவர்கள் *இறக்கும்* வரை இந்த
பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் சரியான காரணங்கள் இல்லாமல் கால
நீட்டிப்பு செய்து வருகிறார்கள்.
ஆதாயத்திற்காக குற்றம் செய்யும், தொடர் குற்ற நடவடிக்கையில்
ஈடுப்படுபவர்களையெல்லாம் விட்டுவிட்டு, தமிழ்நாட்டில் உள்ள காவல்
நிலையங்களில் குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து
காவல் நிலையங்களிலும் எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லாத
அல்லது குற்ற வழக்கே இல்லாதவர்களையும், அரசியல் போராட்ட வழக்குகள் உள்ளவர்களையும், குடும்ப சண்டை போன்ற வழக்குகள் உள்ள
நபர்களின் பெயரை ரவுடி பட்டியலில் சேர்த்து வைத்துள்ளனர். காவல்
நிலை ஆணை 749 மற்றும் 716, படிவம் 11 காவல் நிலைய ஆணை
749(2), படிவம் 112 இல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி இவை
ஏற்படுத்தப்பட்டதல்ல. அதுபோலவே காவல் நிலை ஆணை 748-ன் படி
எவ்வித முகாந்திரமும் இன்றி இயந்திர தனத்தில் (Mechanical fashion)
மேற்படி காவல் நிலையங்களில் தவறான அறிக்கையின் படி ஒவ்வொரு
ஆண்டு இறுதியில் (திசம்பர் மாதம்) காவல்துறை
துணைக்கண்காணிப்பாளர் (DSP)
உத்தரவால் அல்லது காவல்
அலுவலகத்தினால் மேற்சொல்லபட்டவருக்கு எதிராக பிறப்பிக்கப்படும்
உத்திரவானது எவ்வித நியாயமும் இன்றி ஒவ்வொரு ஆண்டும்
காலநீட்டிப்பு செய்யப்பட்டு; வருகிறது. பொதுவாக காவல் நிலையங்களில்
இவ்வித நடவடிக்கை என்பது அரசியல் அமைப்பு சட்டம் கட்டளைகள் 21
மற்றும் 19(1)-ல் வழங்கப்பட்ட சுதந்திரமாக வாழும் உரிமையை
இவர்களிடமிருந்து பறிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஆகையால் எவ்வித
முகாந்திரமோ, அடிப்படையோ, குற்றச்செயலோ எதுவும் இன்றி
காவல்துறை துணைகண்காணிப்பாளர் சட்டத்திற்கு முரணாக தொடர்ந்து
ஒவ்வொரு ஆண்டும் சரியாக ஆய்வு செய்யாமல் பிறப்பிக்கப்பட்டு வரும்
ரவுடிகளின் பட்டியலில் சேர்க்கப்படும் உத்தரவினை முழுவதும் ரத்து
செய்திட வேண்டும்.
மாண்புமிகு உச்சநீதிமன்றம் மேனகாகாந்தி எதிர் இந்திய அரசு (AIR
-1978-SC-597) என்ற வழக்கில் ஒரு அரசின் நடவடிக்கையானது மூன்று
அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டுமென்று
கூறியுள்ளது. ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையைக்
கட்டுப்படுத்துவதற்கான உத்தரவினை பிறப்பிப்பதற்கு முன்பாக அத்தகைய
உத்தரவினைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றுள்ள நபர் அந்த வழக்கின்
சங்கதிகளை ஆழமாக ஆராய்ந்து அத்தகையதொரு உத்தரவு பிறப்பிக்க
வேண்டியதின் காரணங்களை குறிப்பிட்டு அந்த உத்தரவானது நியாயமான
முறையில், நேர்மையான காரணங்களோடு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை
உறுதிப்படுத்த வேண்டும்.
ஒரு உத்தரவானது எந்த காரணங்களின் அடிப்படையில் என்பதை
தெளிவு படுத்தாத நிலையில் அந்த உத்தரவானது நியாயமற்ற முறையில்
ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில்
பிறப்பிக்கப்பட்டதாகவே கருதப்பட வேண்டும் என்று நீதிமன்றம் பல
தீர்ப்புகளையும் வழங்கியுள்ளது.
ரவுடி பட்டியலை மற்றும் (சரித்திர) வரலாற்று பதிவேட்டில் உள்ளவர்களை நுட்ப
கண்காணிப்பு மூலம் காலாண்டுக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒரு முறை
அல்லது தேவைப்படும் போதெல்லாம் அவர்களின் நடத்தைகளை உதவி
ஆய்வாளர் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் அப்படி பதிவு செய்யப்பட்ட
அப்பதிவேடுகளை ஆண்டு இறுதியில் PSO ஆணைப்படி ஆய்வுக்கு உட்படுத்த
வேண்டும். ஆனால் இதனை காவல் துறை துணை கண்காணிப்பாளர்
சரியாக ஆய்வு செய்யாமல் மீண்டும் ஒருவருடம் ரவுடி பட்டியலில் இருக்க
வேண்டும் என்று எந்த காணரமும் இல்லாமல் உத்தரவை பிறப்பிப்பார்.
இந்த நடவடிக்கை ஒவ்வொரு ஆண்டும் காவல் துணை கண்காணிப்பாளர்
இயந்திர தனத்தில் செய்திடுவார். இதில் என்ன நியாயம் இருக்கிறது.
ரவுடி பட்டியல் அல்லது (சரித்திர) வரலாற்று பதிவேட்டில் உள்ளவர்களில்
வீடுகளில் அதிரடி சோதனை என்று தவறாக அப்பட்டியலில்
சேர்க்கப்பட்டவர்களின் வீட்டில் அத்துமீறி நுழைந்து ஆய்வு செய்வது,
அவமானம் செய்வது, அவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை என்றாலும்
வருடத்தில் மூன்று முறை கு.வி.மு.ச. பிரிவு 110 படி கோட்ட நிர்வாக
நடுவரிடம் ஆஜர் செய்து பிணை எழுதி வாங்குவது இதனை
அடிப்படையாக வைத்து கொண்டு ரவுடி பட்டியலில் ஆண்டு கணக்கில்
நீட்டித்து வைப்பது போலீசாரின் தந்திரமாகவும் உள்ளது.
எந்த நேரத்திலும், எந்த ஒரு காவல் நிலையத்தையும். சிறையையும்
. பிறகாவல் நிலையங்களையும், சோதனையிடும் கடமை அனைத்து
குற்றவியல் நடுவர்களுக்கும் உண்டு. (சுனில் பாத்ரா எதிர் தில்லி சிறை
நிர்வாகம் || AIR, 1980 SC 1579PP1598/99 என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம்
வழங்கிய தீர்ப்பு) இப்படி பல பல தீர்ப்புகள் இருந்தாலும் குற்றவியல்
நடைமுறைச் சட்டத்தில் இத்தகைய வழிகாட்டுதல் இருந்தாலும், நீதித்துறை
நடுவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று பொதுவாக, சரியாக ஆய்வு செய்தால்
ரவுடி பட்டியல் மற்றும் சரித்திர பதிவேடுகளை ஆய்வு செய்தால் அதில்
காவல் உதவி ஆய்வாளர்களின் குறிப்புகள் மற்றும் காவல் துணை
கண்காணிப்பாளர் உத்தரவுகளை ஆய்வு செய்து ரவுடி மற்றும் சரித்திர
பதிவேடுகளில் உள்ளவர்கள் குறித்து சரியான புரிதலுக்கு வரலாம்,
குற்றமற்றவர்கள், நிரபராதிகள், பொய்யாக சேர்க்கப்பட்டவர்கள்
அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் PSO படி அல்லது நீதித்துறை நடுவரின்
உத்தரவின்படி அப்பட்டியலில் இருந்து விடுவிக்கப்படலாம். ஆனால்
நீதித்துறை நடுவர்களும் இதனை மேற்கொள்வது கிடையாது.
*கு.வி.மு.ச.110 பிரிவில் யாரிடம் பிணையம பெறலாம்* .
வாடிக்கை குற்றவாளிகளிடமிருந்து நன்னடத்தைக்கான பிணையம்
பெறலாம்,
உட்கோட்ட நிர்வாக நடுவரிடம்,
நன்னடத்தைக்கான பத்திரமொன்றை பிணையாள்களுடன்
எழுதித்தருவது
(அ) வாடிக்கையாகக் கொள்ளைக்காரானாக, கன்னமிடுபவராக,
திருடராக, அல்லது பொய்யாவணம் புனைபவராக உள்ளார் அல்லது
(ஆ) திருட்டுப் பொருளெனத் தெரிந்தே அதை வாடிக்கையாகப்
பெறுபவர் அல்லது
(இ)வாடிக்கையாகவே திருடர்களுக்குக் காப்பளிக்கின்றவர் அல்லது
அவர்களுக்குத் தஞ்சம் கொடுக்கிறவர், அல்லது திருட்டுப்பொருளை
மறைத்து வைப்பதற்கு, அல்லது பாரதீனம் செய்தவற்கு உதவி
செய்கின்றவர் அல்லது
(ஈ) பிள்ளை பிடித்தல், ஆளைக் கடத்துதல், மிரட்டி பறித்தல்,
ஏமாற்றுதல் அல்லது அழிம்பு செய்தல் அல்லது இந்தியச் தண்டனைச்
சட்டடத்தின் XII ஆவது அத்தியாத்தின்படியோ, அச்சட்டத்தின் 489-அ, 489-
ஆ, 489-இ அல்லது 489-ஈ இவற்றில் எந்தப் பிரிவின்படியோ,
தண்டிப்பதற்குரிய குற்றம் எதையும் வாடிக்கையாகவே செய்கிறவர்,
அல்லது செய்ய முயல்கிறவர் அல்லது செய்வதற்கு உடந்தையாக
இருக்கிறவர் அல்லது
(உ) அமைதிக்குலைவை உண்டாக்கக்கூடிய
குற்றங்களை வாடிக்கையாகவே செய்கிறவர், அல்லது செய்ய
முயல்கிறவர், அல்லது செய்வதற்கு உடந்தையாக இருக்கிறவர், அல்லது
(ஊ) பின்வரும் குற்றம் எதையும் வாடிக்கையாகவே செய்கிறவர்.
அல்லது செய்ய அல்லது முயல்கிறவர், அல்லது செய்வதற்கு உடந்தையாக
இருக்கிறவர்.
(i)
பின்வரும் சட்டங்களில், அதாவது
(அ) 1940 ஆம் ஆண்டு மருந்துச் சரக்குகள் மற்றும் அலங்கார
சாதனங்கள் சட்டம்.
(ஆ) 1947 ஆம் ஆண்டு அயல்நாட்டு நாணயமாற்றை முறைப்படுத்தும்
சட்டம்.
(இ) 1952 ஆம் ஆண்டு வேலைபெறுபவர்களின் எதிர்காலக்
காப்புநிதிச் சட்டம்.
(ஈ) 1954ஆம் ஆண்டு உணவு கலப்படத்தை தடை செய்யும் சட்டம். (உ) 1955ஆம் ஆண்டு அத்தியாவசியமான பண்டங்கள் சட்டம்.
(ஊ) 1955 ஆம் ஆண்டு தீண்டாமை (குற்றங்கள்) சட்டம்.
(எ) 1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டம்
(ஏ) அயல் நாட்டினர் சட்டம்,
அல்லது இவற்றில் ஒன்று அல்லது மேற்பட்டதன்படியான குற்றம்
எதனையும் அல்லது
(i)
பதுக்கலை, அல்லது கொள்ளை லாபம் அடிப்பதை, அல்லது
உணவு மருந்துச் சரக்குகளின் கலப்படத்தை,அல்லது லஞ்சத்தைத் தடை
செய்வதற்கு வகை செய்கின்ற வேறெந்தச் சட்டத்தின்படியேனும்
தண்டிப்பதற்குரிய எதனையும்,
(ஏ) பிணையம் வாங்காமல். சுதந்திரமாக விட்டு வைப்பது
சமுதாயத்திற்கு அபாயகரமான தென்னும் அளவிற்கு
வெறித்தனங்கொண்டவராவும். ஆபத்தானவராகவும் இருந்தால் அவர் மீது 110
பிரிவு பயன்படுத்தலாம்.
ஆனால காவல்துறை உட்கோட்ட நடுவரிடம் யாரை ஆஜார்படுத்தி
பிணையம் எழுதி வாங்குகிறார்கள். அபபாவி இளைஞர் மீது ஏன் Cr.P.C
110 பிரிவு பயன்படுத்துகிறார்கள்.
Cr.P.C பிரிவு 110 ஒருவர் மீது காவல்துறை இப்பிரிவை பயன்படுத்துவதே அவரை ரவுடி
பட்டியலில் அல்லது சரித்திர பதிவேட்டில்
சேர்ப்பதற்குத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
*காவல் நிலை ஆணை* (PSO) சில *குறிப்புகள்*
1. தமிழ்நாடு காவல் நிலைய ஆணை எண். 748 படி ஒவ்வொரு
ஆண்டும், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவுடி பட்டியல்,
சரித்திர பதிவேட்டில் உள்ளவர்களை காலநீட்டிப்பு செய்யப்பட்டு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறார்.
2. உதவி ஆய்வாளர் ரவுடி பட்டியலில் உள்ளவர்களின்
நடவடிக்கைகளை ஒவ்வொரு மாதமும் தணிக்கை செய்து அது
குறித்த விபரங்களை ரவுடித்தாளில் பதிவு செய்து வருவார்.
3. ரவுடித்தாளானது ( Rowdy sheet) காலப்போக்கில் வரலாற்று தாளாக
(History sheet) மாறிவிடும்
4. வரலாற்றுத்தாள் என்பது தமிழ்நாடு காவல் நிலை ஆணை 749(2) –
ன் கீழ் படிவம் 112-ன் படி ஏற்படுத்தப்படுவதாகும்.
5. ஓவ்வொரு ஆண்டு முடிவில் (திசம்பர்) காவல்துறை துணை
கண்காணிப்பாளர் ஒரு உத்தரவை பிறப்பித்து வருவார் அந்த
உத்தரவு ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரி அமைந்திருக்கும்.
அதாவது இந்த வரலாற்றுத்தாளை 31.12.2021 வரை வைத்திருக்கவும்,
அதாவது 01.01.2021 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 31.12.2021 முடியும் வரை
வைத்திருக்கவும், என்றுதான் இருக்கும். எதற்காக உத்தரவிட்டார், என்று
காவல்துறை துணை கண்காணிப்பாளர் தன்னுடைய கவனத்தை செலுத்தி
உத்தரவு பிறப்பிப்பது இல்லை. எனவே, காவல் நிலையங்களில்
பராமரிக்கப்படும் ரவுடி பட்டியல் மற்றும் வரலாற்று பதிவேடுகளை ஆய்வு
செய்து நீண்ட காலமாக ரவுடி பட்டியலில் இருக்கும் எந்த குற்ற வழக்கும்
நிலுவையில் இல்லாதவர்களை, குற்ற வழக்கே இல்லாமல் சாதிய
காழ்ப்புணர்ச்சியில் சேர்க்கப்பட்ட நபர்களின் பெயர்களை நீக்கம் செய்திட
வேண்டும்.
*தமிழக அரசே!* *காவல்துறையே!*
1. கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் சாதிய காழ்ப்புணர்ச்சி
காரமணாக காவல் நிலை ஆணைகள் (PSO) கீழ் ரவுடி பட்டியல்
அல்லது வரலாற்று பதிவேட்டில் (history Sheet) மக்களுக்கான
போராட்ட வழக்குகள் உள்ளவர்கள், SC/ST இளைஞர்களின் பெயர் சேர்த்தும்,
பழிவாங்கும் நோக்கத்தில் எந்த குற்றவழக்கும் நிலுவையில் இல்லாத
குறிப்பாக படித்த இளைஞர்கள் பெயரை ரவுடி பட்டியலில் பல
ஆண்டுகளாக நீட்டித்து வருவதை நீக்கி நடவடிக்கை எடு.
2. கடலூர் மாவட்ட காவல்துறையில் தனிப்பிரிவு (SB),
உளவுத்துறை (SBCID) போன்ற காவல்துறை பிரிவுகளில் SC/ST
அல்லாத குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களை மட்டுமே கொண்டு
அமைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து அதனை கலைத்து, SC/ST
சமூகத்தினரை காவல் துறையில் அனைத்து பிரிவுகளிலும் (WING)
பணியில் அமர்த்து.
3. தவறு செய்யும் போலீசார் மீது புகார் அளிக்க தனி
அமைப்பை ( Police Complaints Authority) உருவாக்க வேண்டும்
என கடந்த 2006-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களுக்கும்
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுப்படி தனிஅமைப்பை
(PCA) உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
4. அரசியலமைப்பு
சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளுக்கு விரோதமான தமிழ்நாடு காவல் நிலை (PSO)
ஆணை எண்களை நீக்கம் செய்.
இவண்:
*வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி*
கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர்
*விடுதலைச் சிறுத்தைகள் கட்சி*
தொடர்புக்கு: 9443422442
Comments
Post a Comment