சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நாடுமுழுவதும் பெரும் விவாதம் உருவாகிக்கொண்டிருக்கிறது அதற்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று கொண்டிருக்கிறது, 

ஆம் சாதி வாரி கணக்கெடுப்பு என்று அரசு அறிவித்த பிறகு ஒவ்வொரு சாதியையும் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் நியாயமாக இருக்க முடியும், சாதிவாரி கணக்கெடுப்பு சாதிவாரியான குழுக்களை அடையாளம் காண்பது என்பது சாதிவாரி கணக்கெடுப்பு என்று பெயர், அப்போதுதான்
சாதிவாரி கணக்கெடுப்பு எந்த நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறதோ அந்த நோக்கத்தை அரசும், அரசாங்கமும் நிறைவேற்ற முடியும், 

உலகத்தில் வேறு எங்கும் இல்லாத சனநாயம் இந்தியாவில் தான் இருக்கிறது அது அரசியல் அமைப்பு சட்டம் என்கிற வடிவத்தில் இருக்கிறது, 

பன்மைத்துவத்தை காப்பாற்றுவது தான் ஆகப்பெரும் சனநாயகம் அந்த மாபெரும் தத்துவத்தை வலியுறுத்துவதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். 
வேற்றுமையில் ஒற்றுமை, ஒவ்வொரு இனத்தவர்களின் தாய் மொழியையும், அவரது பண்பாட்டு பழக்கவழக்கங்களையும் அச்சமின்றி, தயக்கம் இன்றி கடைபிடித்து அவர்கள் சுதந்திரமாக வாழ்வதுதான் பெரும் சனநாயகம், 

அனைத்து மொழிகளையும் ஒழித்து ஒரு மொழி தான் பேச வேண்டும் என்பதும், ஒரே மதத்தவராக, இனத்தவராக  நிறுவ முயற்சி செய்வதும், அடையாளப்படுத்த வலிய திணிப்பது என்பதுதான் சர்வதிகாரம்,
ஒரு நாடு,ஒரு மதம், ஒரு மொழி  என்பது  சர்வதிகாரத்தின் உச்சம்  அதுதான் சனாதனம்.

ப(றை)ரையர் பேரினத்தவர் பறையர் என்று தான் பதிவு செய்ய வேண்டும்,  ஆதி திராவிடர் என்பது  சாதியின் பெயர் அல்ல அது அரசியல் அடிப்படையிலான ஒரு பெயர், 
வரலாற்று அடிப்படையிலான சாதியின் பெயர் பறையர் என்பதுதான்  ஆக வரலாற்று அடிப்படையிலாக  பரையர் பேரனித்தவரை பறையர் என்று தான் பதிவு செய்ய வேண்டும், 

ஆதிதிராவிடர் என்றோ,வேறு பெயர் கொண்டோ மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்தால் பறையர் பேரினம் வரலாற்று அடிப்படையில் அரசியல் அடிப்படையில், சமூக ரீதியில் பெறும் அடிமைப்பட நேரிடும் ,பெரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகி எதிர்காலத்தில் அழிந்து போகும் நிலை பறையர் பேரினத்திற்கு உருவாகும், ஏன் பறையர்கள் தமிழர்களே இல்லை அவர்களுக்கும் இந்த மண்ணிற்கும் எந்த தொடர்புமே இல்லை என்கூறி நிலையை கூட உருவாக்குவார்கள், எதிர்கால வரலாற்றில் பறையர்கள் அரேபியாவில் இருந்து வந்தார்கள், ஆந்திராவில் இருந்து வந்தார்கள் என்று சாதியவாதிகள் நினைக்கின்ற போக்கில் நிறுவார்கள், மேலும் எதிர்காலத்தில் எதற்காகவும் இந்த மக்கள் அணி திரளவே முடியாத அளவிற்கு நரிக்குறவர்களைப் போல சிதறடிக்கப்படுவார்கள் என்பது தான் உண்மை , பறையர்கள் யார் அவர்களின் வரலாறு என்ன என்பதை எல்லாம் சொல்லலாம் பறையர் என்றாலே இழிவு என்பதை போல  அனைத்து சாதிக்குழுக்களின் சிந்தனையில் கற்பித்து, கட்டமைத்து பறையர் என்கிற பெயரையே ஒழிப்பது ஏதோ படு பயங்கர திட்டத்தை நோக்கித்தான் என்று சிந்திக்க தோன்றுகிறது இதற்காக யாரிடமும் விவாதம் செய்ய தயார்.

பரையறை பரையர் என்று கணக்கெடுத்துக் கொண்டு நீங்கள் எந்த பெயரை வைத்து வேண்டுமானால் அழைத்துக் கொள்ளுங்கள், ஆதிராவிடர் என்று சொல்லுங்கள் அல்லது ஆதி தமிழர் என்று சொல்லுங்கள் அல்லது அரசும் அரசியல்வாதிகளும் விருப்பப்படும் எந்த பெயரை வேண்டுமானால் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள், (எங்களிடம்) பறையர்களின் விருப்பம் கேட்டா பறையர்களுக்கு இதுவரை பெயர் வைத்தீர்கள் இதுவும் உங்கள் விருப்பத்திற்கு விடுகிறோம். 

பறையர் சாதியை பறையர் சாதி என்று சாதி வாரி  கணக்கெடுப்பில் பதிவு செய்யவில்லை என்றால் இட ஒதுக்கீடில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு உருவாகும், என்பதை நாம் உணர வேண்டும், 

இது குறித்து பெரும் விவாதம் உருவாக்க வேண்டும் பறையர் என்றால் இழிவு அல்ல பறையர் என்கின்ற வார்த்தையை அரசு பயன்படுத்த வேண்டும், பறையர் என்பதற்காக ஒருவரை இழிவாக நடத்துவதும், பறையர் என்பதற்காக ஒருவர் மீது வன்முறை திணிப்பதும்,அவரை ஒதுக்குவதும் தான் தவறு, அழிக்க முற்படுவதும்தான் பாசிசம் , அதைத்தான், அத்தகைய செயலை தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு சாதி ரீதியான அடக்குமுறை செய்பவனை தண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும், அதாவது தமிழர் என்பதற்காகவும்,இந்தியர் என்பதற்காகவும் ஒருவரை ஒதுக்குவதும் ஒடுக்குவதும் என்பது தான் சட்டவிரோத செயல்,  அவர் மீது ஆதிக்கம் செய்வது என்பது தான் பாசிசம், அத்தகைய கொடுமைக்கு எதிராக சட்டப்படி தண்டிக்க வேண்டுமே தவிர, அதனை விடுத்து இந்தியன்,தமிழன் என்ற பெயரையே  அழிப்பதும், அந்தப் பெயரையே பயன்படுத்தக் கூடாது என்று தடை செய்வது, வேறு பெயரை சூட்டுவது  எந்த வகையிலும் சிறந்ததல்ல, ஏற்புடையதல்ல, இதுகுறித்தும் சிந்திக்க வேண்டும், 

ஆதிக்க சாதி  வர்க்கத்தின் இந்த உளவியல் தான் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கூண்டு போட வைத்தது, இந்த உளவியல் தான் பொது இடங்களில் சேரி மக்கள் தமக்கான கட்சி கொடியேற்றினால் அதனை ஏற்காமல் பொது இடங்களில்  எந்த கட்சி கொடியும் ஏற்ற கூடாது என்கின்ற நிலையை உருவாக்கியது, 

காலம் காலமாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு சாதியின் தலைவர்களின் பெயர் இருந்தது, அதுபோல அரசு போக்குவரத்து துறைக்கு (பேருந்துகளுக்கு) ஒவ்வொரு சாதி தலைவர்களின் பெயரும் இருந்தது, 

சேரி மக்கள் அரசியல் படுத்தப்பட்டு தனக்கான தலைவர்களின் பெயரை போக்குவரத்து துறைக்கு (பேருந்திற்கு)  பெயர் சூட்ட அரசிடம் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்திய போது   அரசு எந்த தலைவரின் பெயரும் இருக்கக் கூடாது என்று சட்டம் போட்டது, அதேபோல எந்த மாவட்டத்திற்கும் எந்த தலைவரின் பெயரையும் சூட்டுவது இல்லை என்று சட்டத்தை உருவாக்கியது , அப்படித்தான் பறையர்களின் உரிமைகள் ஒவ்வொன்றும் பெற முயற்சி செய்யும் பொழுது அதனை அழிப்பதற்கு நவீன வடிவத்தில் பல கருத்துக்களை நுட்பமாக சொல்லி பறையர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்த பரையர்களுக்கு ஒவ்வொரு பெயரை ஒவ்வொரு கால கட்டத்தில் சூட்ட முயற்சி செய்கிறார்கள், எஞ்சியிருக்கும் பறையர்களின் வரலாற்றை அழிக்க , பறையர்களின் உரிமையை பறிக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும், 

சாதிவாரி கணக்கெடுப்பில் பறையர் என்று பதிவு செய்யவில்லை என்றால் பறையர் பேரினத்திற்கு பெறும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

முற்று முழுவதுமாக பறை

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நாடுமுழுவதும் பெரும் விவாதம் உருவாகிக்கொண்டிருக்கிறது அதற்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று கொண்டிருக்கிறது, 

ஆம் சாதி வாரி கணக்கெடுப்பு என்று அரசு அறிவித்த பிறகு ஒவ்வொரு சாதியையும் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் நியாயமாக இருக்க முடியும், சாதிவாரி கணக்கெடுப்பு சாதிவாரியான குழுக்களை அடையாளம் காண்பது என்பதே சாதிவாரி கணக்கெடுப்பு என்று பெயர், அப்போதுதான்
சாதிவாரி கணக்கெடுப்பு எந்த நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறதோ அந்த நோக்கத்தை அரசும், அரசாங்கமும் நிறைவேற்ற முடியும்.

உலகத்தில் வேறு எங்கும் இல்லாத சனநாயம் இந்தியாவில் தான் இருக்கிறது அது அரசியல் அமைப்பு சட்டம் என்கிற வடிவத்தில் இருக்கிறது, பன்மைத்துவத்தை காப்பாற்றுவது தான் ஆகப்பெரும் சனநாயகம் அந்த மாபெரும் தத்துவத்தை வலியுறுத்துவதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். 

வேற்றுமையில் ஒற்றுமை, ஒவ்வொரு இனத்தவர்களின் தாய் மொழியையும், அவரது பண்பாட்டு பழக்கவழக்கங்களையும் அச்சமின்றி, தயக்கம் இன்றி கடைபிடித்து அவர்கள் சுதந்திரமாக வாழ்வதுதான் பெரும் சனநாயகம், 

அனைத்து மொழிகளையும் ஒழித்து ஒரு மொழி தான் பேச வேண்டும் என்பதும், ஒரே மதத்தவராக, இனத்தவராக  நிறுவ முயற்சி செய்வதும், ஒருவரின் மொழியை அவரது பண்பாட்டு பழக்க வழக்கத்தை அவரது மதத்தை, வழிபாட்டு முறையை ஒழித்து வேறொரு மதத்தவராக,தேசிய இனத்தவராக அடையாளப்படுத்த  வலிய திணிப்பது என்பதுதான் சர்வதிகாரம், அரசு பயங்கரவாதம், 
ஒரு நாடு,ஒரு மதம், ஒரு மொழி  என்பது  சர்வதிகாரத்தின் உச்சம்  அதுதான் சனாதனம்.

பறையர் பேரினத்தவரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் பறையர் என்று தான் பதிவு செய்திடல் வேண்டும்,  ஆதி திராவிடர் என்பது  சாதியின் பெயர் அல்ல அது அரசியல் அடிப்படையிலான ஒரு பெயர், இப்பெயர் பறையர்களுக்கு மட்டும் சொந்தமானதும் அல்ல, 
வரலாற்று அடிப்படையிலான சாதியின் பெயர் பறையர் அல்லது பரையர் என்பதுதான்  ஆக வரலாற்று அடிப்படையிலாக  பரையர் பேரனித்தவரை பறையர் என்று தான் பதிவு செய்திட வேண்டும், 

ஆதிதிராவிடர் என்றோ,வேறு பெயர் கொண்டோ மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்தால் பறையர் பேரினம் வரலாற்று அடிப்படையில் அரசியல் அடிப்படையில், சமூக ரீதியில் பெறும் அடிமைப்பட நேரிடும், தமிழ்நாட்டில் பறையர்களுக்கான இட ஒதுக்கீட்டை இழந்து நிற்கும் இந்த நிலையில் மேலும் பெரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகி எதிர்காலத்தில் அழிந்து போகும் நிலை பறையர் பேரினத்திற்கு உருவாகும், 

ஏன் பறையர்கள் தமிழர்களே இல்லை அவர்களுக்கும் இந்த மண்ணிற்கும் எந்த தொடர்புமே இல்லை என்ற நிலையை கூட ஆதிக்க சாதி வரலாற்று ஆய்வாளர்கள் திரித்து உருவாக்குவார்கள், எதிர்கால வரலாற்றில் பறையர்கள் அரேபியாவில் இருந்து வந்தார்கள், ஆந்திராவில் வடக்கே இருந்து வந்தார்கள் என்றெல்லாம் சாதியவாதிகள் நினைக்கின்ற போக்கில் நிறுவார்கள், மேலும் எதிர்காலத்தில் எதற்காகவும் இந்த மக்கள் அணி திரளவே முடியாத அளவிற்கு நரிக்குறவர்களைப் போல சிதறடிக்கப்படுவார்கள் என்பது தான் உண்மை.

அரசு, அரசாங்கம் வரலாற்று ஆய்வாளர்கள்  பறையர்கள் யார், அவர்களின் வரலாறு என்ன என்கிற உண்மையை  எல்லாம் சொல்லலாம் ஆனால் மாறாக பறையர் என்றாலே இழிவு என்பதை போல  அனைத்து சாதிக்குழுக்களின் சிந்தனையில் கற்பித்து, கட்டமைத்து பறையர் என்கிற பெயரையே ஒழிப்பது ஏதோ படு பயங்கர திட்டத்தை நோக்கித்தான் என்று சிந்திக்க தோன்றுகிறது இதற்காக யாரிடமும் விவாதம் செய்ய தயார்.

பறையரை பறையர் என்று கணக்கெடுத்துக் கொண்டு நீங்கள் எந்த பெயரை வைத்து வேண்டுமானால் அழைத்துக் கொள்ளுங்கள், ஆதிராவிடர் என்று சொல்லுங்கள் அல்லது ஆதி தமிழர் என்று சொல்லுங்கள் அல்லது அரசும் அரசியல்வாதிகளும் விருப்பப்படும் எந்த பெயரை வேண்டுமானால் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஒருவர் அர்ஜுனர் என்றார் இன்னொருவர் ஆதி திராவிடர் என்றார் இப்படி புராணப் பெயர்களை எல்லாம் நாங்கள் சுமந்து கொண்டுதான் இருக்கின்றோம் (எங்களிடம்) பறையர்களின் விருப்பம் கேட்டா பறையர்களுக்கு இதுவரை பெயர் வைத்தீர்கள் இதுவும் உங்கள் விருப்பத்திற்கு விடுகிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்பிலாவது பறையர்களை பறையர் என்று பதிவு செய்யுங்கள்.

பறையர் சாதியை பறையர் சாதி என்று சாதி வாரி  கணக்கெடுப்பில் பதிவு செய்யவில்லை என்றால் இட ஒதுக்கீடில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு உருவாகும், என்பதை நாம் உணர வேண்டும், இது குறித்து பெரும் விவாதம் உருவாக்க வேண்டும், 

 பறையர் என்றால் இழிவு அல்ல பறையர் என்கின்ற வார்த்தையை அரசு பயன்படுத்த வேண்டும், பறையர் என்பதற்காக ஒருவரை இழிவாக நடத்துவதும், பறையர் என்பதற்காக ஒருவர் மீது வன்முறை திணிப்பதும்,அவரை ஒதுக்குவதும் தான் தவறு, அழிக்க முற்படுவதும்தான் பாசிசம் , அதைத்தான், அத்தகைய செயலை தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு சாதி ரீதியான அடக்குமுறை செய்பவனை தண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும், அதாவது தமிழர் என்பதற்காகவும்,இந்தியர் என்பதற்காகவும் ஒருவரை ஒதுக்குவதும் ஒடுக்குவதும் என்பது தான் சட்டவிரோத செயல்,  அவர் மீது ஆதிக்கம் செய்வது என்பது தான் பாசிசம், அத்தகைய கொடுமைக்கு எதிராக சட்டப்படி தண்டிக்க வேண்டுமே தவிர, அதனை விடுத்து இந்தியன்,தமிழன் என்ற பெயரையே  அழிப்பதும், அந்தப் பெயரையே பயன்படுத்தக் கூடாது என்று தடை செய்வது, வேறு பெயரை சூட்டுவது  எந்த வகையிலும் சிறந்ததல்ல, ஏற்புடையதல்ல, இதுகுறித்தும் சிந்திக்க வேண்டும், 

ஆதிக்க சாதி  வர்க்கத்தின் இந்த உளவியல் தான் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கூண்டு போட வைத்தது, இந்த உளவியல் தான் பொது இடங்களில் சேரி மக்கள் தமக்கான கட்சி கொடியேற்றினால் அதனை ஏற்காமல் தடுத்து எந்த கட்சி கொடியும் பொது இடங்களில் ஏற்ற கூடாது என்கின்ற நிலையை உருவாக்கியது.

காலம் காலமாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு சாதியின் தலைவர்களின் பெயர் இருந்தது, அதுபோல அரசு போக்குவரத்து துறைக்கு (பேருந்துகளுக்கு) ஒவ்வொரு சாதி தலைவர்களின் பெயரும் இருந்தது, 

சேரி மக்கள் அரசியல் படுத்தப்பட்டு தனக்கான தலைவர்களின் பெயரை போக்குவரத்து துறைக்கு (பேருந்திற்கு)  பெயர் சூட்ட அரசிடம் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்திய போது   அரசு எந்த தலைவரின் பெயரும் இருக்கக் கூடாது என்று சட்டம் போட்டது, அதேபோல எந்த மாவட்டத்திற்கும் எந்த தலைவரின் பெயரையும் சூட்டுவது இல்லை என்ற சட்டத்தை உருவாக்கியது , 

அப்படித்தான் பறையர்கள் தனக்கான உரிமைகள் ஒவ்வொன்றும் பெற முயற்சி செய்யும் போது அதனை அழிப்பதற்கு நவீன வடிவத்தில் பல கருத்துக்களை நுட்பமாக சொல்லி ஏமாற்றி வருகிறார்கள், பறையர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்த பரையர்களுக்கு ஒவ்வொரு பெயரை ஒவ்வொரு கால கட்டத்தில் சூட்ட முயற்சி செய்கிறார்கள், எஞ்சியிருக்கும் பறையர்களின் வரலாற்றை அழிக்க , பறையர்களின் உரிமையை பறிக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை குறித்து நாம் சிந்திக்க வேண்டும், 

சாதிவாரி கணக்கெடுப்பில் பறையர் என்று பதிவு செய்யவில்லை என்றால் பறையர் பேரினத்திற்கு பெறும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர வேண்டும். முற்று முழுவதுமாக பறையர் என்கின்ற பெயரையே அதாவது ஒரு பேரினத்தையே அழிப்பதற்கான ஒரு மாபெரும் சதி கடந்த 70 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறது. 

வரும் காலங்களில் எந்த தனித்தொகுதியிலும்  பறையர்கள் வெற்றி பெறவே முடியாது என்கிற நிலை தமிழ்நாட்டில் கட்டாயம் உருவாகும், அனைத்து தனி தொகுதிகளிலும் பட்டியல் இனத்தில் உள்ள ஏதாவது ஒரு சாதியினர்  மட்டுமே இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருப்பார்கள், உள்ளாட்சி பிரதிநிதியாக இருப்பார்கள், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பார்கள் பறையர்கள் ஒருபோதும் அரசியல் அதிகாரத்திற்கு வரவே முடியாது,அத்தகைய சமூக, அரசியல் சூழ்நிலை உருவாக்கி சிதறடித்து பறையர்களின் அரசியல் அதிகார உரிமைக்கு பெரும் ஆபத்து உருவாகும், ஒரு பெரிய இனத்திற்கு, ஒர் பெரிய சாதிக்கான ஆபத்து உருவாகும், பறையர்களுக்கு எந்த  பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்பதை அச்சத்தோடு நான் பதிவு செய்கின்றேன்.

இவண்;
வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சுய ஒழுக்கமே ஞானம்