Posts

1891 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பறையர் சமூகத்தின் 348 உட்பிரிவுகள் – சோழியர் என்ற பெயர் வெளிப்படுத்தும் வரலாறு!

1891 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பறையர் சமூகத்தின் 348 உட்பிரிவுகள் – சோழியர் என்ற பெயர் வெளிப்படுத்தும் வரலாறு! பிரிட்டிஷ் கால ஆவணங்கள் பதிவு செய்த பறையர் சமூகத்தின் உட்பிரிவுகள், தொழில் அடையாளங்கள், சோழியர் என்ற பெயரின் வரலாற்றுப் பின்னணி குறித்த ஓர் ஆய்வு. வழக்கறிஞர் மு. அறிவுடைநம்பி ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அந்தச் சமூகம் இன்று எந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது என்பதை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. அந்தச் சமூகத்தின் பழமையான பெயர்கள், உட்பிரிவுகள், தொழில்கள், வாழ்விடங்கள், பண்பாட்டு மரபுகள், அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தே அதன் வரலாற்றை அறிய முடியும். அந்த வகையில், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான சமூகங்களில் ஒன்றான பறையர் சமூகத்தின் வரலாற்றை ஆராயும்போது, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகளும், இனவியல் ஆய்வு நூல்களும் மிக முக்கியமான ஆவணங்களாக விளங்குகின்றன. குறிப்பாக 1891ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பறையர் சமூகத்தின் 348 உட்பிரிவுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக 1906ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்விதழ்...

நவம்பர் 1 – தமிழர் இறையாண்மையின் வரலாற்று நாள்

Image
நவம்பர் 1 –  தமிழர் இறையாண்மையின் வரலாற்று நாள் தமிழர் நிலப்பரப்பு உருவான நாள்! தமிழ்நாடு பிறந்தநாளைக் கொண்டாடுவோம்! புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், மொழிவழி மாநிலங்கள் உருவாக வழிவகுக்கப்பட்டது. அதன் வரலாற்றுத் தொடர்ச்சியில் 1956 நவம்பர் 1 அன்று தமிழர்களுக்கான மொழிவழி மாநிலம் உருவானது. இது வெறும் நிர்வாக எல்லை மாற்றம் அல்ல; தமிழர்கள் தங்களுக்கென ஒரு மொழிவழி அரசியல் நிலப்பரப்பைப் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஆனால் 1956 நவம்பர் 1 தமிழ்நாடு உருவான நாள் என்பதையும், 1969 ஜனவரி 14 அன்று மெட்ராஸ் மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்ட நாள் என்பதையும் நாம் வேறுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டுமே தமிழர் வரலாற்றில் தனித்துவமான மைல்கற்கள். இந்திய ஒன்றியம் – சொல்லில் மட்டுமல்ல, அதன் அரசியலமைப்புச் சிந்தனையிலும் கூட்டாட்சித் தத்துவம்! இந்திய அரசியலமைப்பின் முதல் உறுப்புரை இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்று வரையறுக்கிறது. ஆனால் தமிழக அரசியல் உரையாடல...

வெற்பரையன் திருவேதிகுடி – திருஞானசம்பந்தர் தேவாரம்

வெற்பரையன ________________ திருவேதிகுடி – திருஞானசம்பந்தர் தேவாரம் சொற்பிரிவிலாத மறைபாடி நடமாடுவர் தொல்ஆனை உரிவை மற்புரி புயத்தினிது மேவுவர் எந்நாளும் வளர்வானவர் தொழ துற்பரிய நஞ்சமுதமாக முன் அயின்றவர் இயன்ற தொகுசீர் வெற்பரையன் மங்கையொரு பங்கர் நகர்திரு வேதிகுடியே. விளக்கம்;- ​இறைவனின் திருவிளையாடல்  மற்றும் இயல்பு: சொல்லில் பிழையற்ற வேதங்களை ஓதியவாறே திருநடனம் புரியும் பெருமான் இவர். தொன்மையான யானையின் தோலை மற்போர் புரிந்த வலிய தோள்களின் மீது போர்த்துக் கொண்டு அழகுடன் விளங்குபவர். ​நஞ்சுண்ட பெருமை: எக்காலத்திலும் தேவர்கள் தொழுகின்ற பெருமைக்குரியவர்.  உலகைக் காக்கத் துதிக்க முடியாத (கொடிய) நஞ்சினைத் தேவர்கள் அஞ்சியபோது, அதனைத் தான் முன்வந்து அமுதமாக உண்டு அருளியவர். ​உமையொருபாகன்: பெருமைமிக்க தொகுக்கப்பட்ட புகழையுடைய மலைக்கு அரசனான (வெற்பரையன்) மகளாகிய பார்வதி தேவியை (மங்கை) தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்து அருளும் திருநகரம் இந்த 'திருவேதிகுடி' ஆகும். வெற்பரையன்... தண்டியலங்காரம் — பாடல் அறாவியங் குன்றம் அரக்கன் பெயர்ப்ப வெருவிய வெற்பரையன் பாவை — பெர...

வசதியான வாழ்க்கை மட்டும் போதாது; மனித மாண்பும், உயர்ந்த பண்பாடும், சமத்துவமும் நிறைந்த வாழ்க்கை வேண்டும்!அம்பேத்கரியப் பார்வையில் உயர்ந்த பண்பாட்டு சமூகத்தை உருவாக்குவோம்!

வசதியான வாழ்க்கை மட்டும் போதாது; மனித மாண்பும், உயர்ந்த பண்பாடும், சமத்துவமும் நிறைந்த வாழ்க்கை வேண்டும்! அம்பேத்கரியப் பார்வையில் உயர்ந்த பண்பாட்டு சமூகத்தை உருவாக்குவோம்! ______________________. ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வளவு வசதியாக இருக்கிறது என்பதில் மட்டும் அவனது வாழ்வின் உயர்வு அடங்கியிருக்கவில்லை; அவன் எவ்வளவு மாண்புடன் வாழ்கிறான், பிற மனிதர்களை எவ்வாறு மதிக்கிறான், சமூகத்தில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் எவ்வாறு நிலைநாட்டுகிறான் என்பதில்தான் உண்மையான உயர்வு அடங்கியிருக்கிறது. மனிதகுலத்தின் வரலாற்றில் பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் முன்னேற்றமும் நாகரிகத்தின் முக்கிய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. உயரமான கட்டடங்கள், ஆடம்பரமான வீடுகள், நவீன வாகனங்கள், தொழில்நுட்ப வசதிகள், அதிக வருமானம் என மனித வாழ்க்கை பல்வேறு வசதிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இத்தனை வசதிகளையும் பெற்ற ஒரு சமூகத்தில் மனிதர்களுக்கிடையே சாதிய வேறுபாடுகள் நிலவினால், பிறப்பின் அடிப்படையில் ஒருவர் உயர்ந்தவராகவும் மற்றொருவர் தாழ்ந்தவராகவும் கருதப்பட்டால், அந்தச் சமூகத்தை உண்மையிலேயே பண்பாடு நிறைந்த ...

முப்பது ஆண்டுகால அரசியல் பயணம்… மாறாத கொள்கை… பிரிக்க முடியாத நட்பு!

முப்பது ஆண்டுகால அரசியல் பயணம்… மாறாத கொள்கை… பிரிக்க முடியாத நட்பு! என் உயிர் நண்பன் குழந்தைவேலே… மீண்டு வா நண்பா! பொது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்ட கொள்கையில் ஓர் அங்குலம்கூட பின்வாங்காமல், கடந்த 30 ஆண்டுகளாகச் சாதி ஒழிப்புக்கான அரசியல் களத்தில் தொடர்ந்து நின்று கொண்டிருக்கிறேன். இந்த நீண்ட அரசியல் பயணத்தில் என்னோடு நான் பிறந்த வில்வநகர் மண்ணில் தோளோடு தோள் நின்றவன் என் சிறுவயது நண்பன் குழந்தைவேல். எங்கள் நட்பு நேற்றோ, இன்றோ உருவானதல்ல. நினைவு தெரிந்த நாளிலிருந்து தொடரும் நட்பு. அங்கன்வாடிப் பருவம் தொடங்கி பள்ளிப் பருவம், இளமைப் பருவம் என எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றாகவே பயணித்திருக்கிறோம். சிறுவயதில் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்புவது குழந்தைவேல்தான். பள்ளிக்குச் செல்வதற்காக நான் முதலில் கிளம்பி, அவனது வீட்டிற்குச் சென்று அவனை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்வதற்காகக் காத்திருப்பேன். அன்றைக்குத் தொடங்கிய எங்கள் பயணம், பின்னாளில் அரசியல் களத்திலும் தொடரும் என்று அப்போது எங்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு இளைஞனையும் சிறுத்தையாக்கிய நாட்கள்! ஒவ்வொரு குடும்பத்தையும் விடுதலைச...

🪔 அன்றைய தீபாவளி… அம்மா, அப்பாவின் அன்பு! ❤️

Image
🪔 அன்றைய தீபாவளி… அம்மா, அப்பாவின் அன்பு! ❤️ மறக்க முடியாத அம்மா… அப்பா… தீபாவளி என்றால் இன்று நமக்கு ஒரு பண்டிகை. ஆனால், நமது அம்மா, அப்பாவுக்கு அது தங்கள் பிள்ளைகளின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்ப்பதற்கான ஒரு திருநாள்! அவர்கள் எப்படித்தான் நம்மை அத்தனை விமரிசையாகத் தீபாவளி கொண்டாட வைத்தார்களோ, இன்றுவரை எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! தீபாவளி என்றாலே புதுச் சட்டை, பேண்ட், ஜட்டி, பனியன், செருப்பு, பெல்ட் என்று தலை முதல் கால் வரை அனைத்தையும் புதிதாக வாங்கிக் கொடுப்பார்கள். புதிதாக வெளியாகும் திரைப்படத்தைப் பார்ப்பதற்கும் பணம் கொடுப்பார்கள். வீட்டில் பலகாரங்கள் செய்வதற்குக் கணக்கே இருக்காது! மூன்று வகையான அதிரசம், சோமாஸ், சோயா உருண்டை, ரவா உருண்டை, பொரிவிளங்காய் உருண்டை, இரண்டு வகையான முறுக்கு, இனிப்புப் பூந்தி, மெதுவடை, மசால் வடை என்று பலகாரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதோடு கோழிக்கறி, மாட்டுக்கறி என வீட்டில் அவரவர் விருப்பத்திற்கேற்ப விருந்து சமைத்து, இனிப்பு, காரம் எனப் பலவகையான உணவுகளைச் செய்து பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். அன்று நமது அம்மாக்களின் ச...

வில்வநகர் விடுதலைச் சிறுத்தைகள் வரலாற்றில் இன்று!

Image
வில்வநகர் விடுதலைச் சிறுத்தைகள் வரலாற்றில் இன்று! 18.10.1997 — புதுக்கடை மண்ணுரிமை விளக்கப் பொதுக்கூட்டம் வில்வநகரில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் வரலாற்றில் மறக்க முடியாத நாள்! 1997 அக்டோபர் 18 அன்று, கடலூர் ஒன்றியம் புதுக்கடையில், நமது எழுச்சித்தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் மண்ணுரிமை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அன்று மாலை 6 மணிக்குத் தொடங்கிய பொதுக்கூட்டம், இரவு சுமார் 10 மணி வரை நீடித்தது. வில்வநகரில் விடுதலைச் சிறுத்தைகள் முகாம் (கிளை) அமைக்கப்பட்ட பிறகு, வில்வநகர் சிறுத்தைகள் பங்கேற்ற இரண்டாவது நிகழ்ச்சி இந்தப் பொதுக்கூட்டம்தான். சைக்கிளில் 17 கிலோமீட்டர் பயணம் — மறக்க முடியாத நினைவுகள்! அந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், அன்று காலையிலிருந்தே நான் (ஞானம் @ அறிவுடைநம்பி), எனது நண்பர்களான குழந்தைவேல், வெங்கட், பில்லா, பாலு ஆகியோர் எங்கள் நண்பர்களை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தயாராக்கினோம். எங்களைவிட வயதில், அனுபவத்தில் மூத்தவர்களான எனது உடன்பிறந்த அண்ணன் மு. ஜெய்சங்கர், அண்ணன் அ. ரகு, மாமா க. சுந்தர் ஆகியோரிடம், பொதுக்கூட்டத்த...