Posts

Showing posts from April, 2020

ஆளும் வர்க்கங்களிடம் கூட்டணியான அறிவாளி வர்க்கம்

மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் கோவிட்19 வைரஸ் நோய்  பரவாமல் தடுக்க  மக்களை காப்பாற்ற அரசு எடுத்த நடவடிக்கையென்பது  மக்களை வீட்டிற்குள் அடைத்தது மட்டுமே,   அன்றாடம் வேலைக்கு போனால்தான் சோறு என்ற நிலமையுடைய மக்கள்  பெறும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள், குடி மக்களின் வறுமையை போக்க  ஆட்சியாளர்கள் ரூபாய் 1000 வழங்கினார்கள், போதுமா இந்த தொகை? ஏழை எளிய மக்கள் வறுமையின் காரணமாக உணவு பஞ்சத்தால்  ஊட்டச் சத்துக் குறைபாடு போன்ற காரணமாக நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்து எந்த வகையான நோயும் தாக்கும்  என்கிற அபாயத்தில் உள்ளார்கள், பசியால் இறந்து போகிற நிலைமைக்கு ஏழை எளிய மக்கள் வந்துவிட்டனர். மக்கள் வறுமையின் காரணமாக திருட்டு, தற்கொலை, கொலை, போன்ற நிலைக்கு போவது கூட நடக்கலாம்.  அரசாங்க உத்தரவை மீறி  குடிமக்கள் அரசுடன் ஆட்சியாளருடன் சண்டைக்கு போகிற நிலையும் உருவாகலாம் , மக்களை நோயில் இருந்து காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும், வறுமை  பசியின் காரணமாக சீர்குலைந்து கூட போகலாம். இதனால் பெருத்த அளவில் உயிர் சேதம் கூட நடக்கலாம். மக்களின் வறுமை ...

பரகேசரி, சாம்பவராயர்

சோழ மன்னர்கள் தங்களை பரகேசரி, இராஜ பர கேசரி என மாறி மாறி அழைக்கின்றனர், தந்தை பர கேசரி என்றால் மகன் இராஐ பரகேசரி என்று தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்,  முதல் பர கேசரியாக விஜயாலன் என்று கல் வெட்டிலும், செப்பேடுகளிலும் வருகிறார். பர சிங்கம் அல்லது பறை சிங்கம் என்று சொல்லி கொள்வதில்  அவர்களது விழுப்பறையர் மரபை நிறுவுவதில் கவனமாக செயல் பட்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் ஆதி தமிழ்குடியான மறையர் அல்லது பரையர் வழிவந்த தமிழர்கள் என்பதை நிறுவ மிக தெளவாக வாழ்ந்துள்ளனர் இல்லையெனில் விஜயாலன் முதற் கொண்டு இராஜேந்திர சோழன் வரை அனைவரையும் ,  சாளுக்கியரின் ஒர் பிரிவு என்றோ அல்லது பல்லவர்களின் ஓர் பிரிவு என்றோ திராவிட சிந்தனையாளர் தெலுங்கு குடிகள் என்று நிறுவியிருப்பார்கள் ஆனால் இப்போது  அதனை விடுத்து சோழர்கள் பரையர்கள்தான் என்பதை சொல்லாமல் வரலாற்றை இருட்டடிப்பு செய்துள்ளார்கள்.  பறை என்றோ அல்லது பரை என்றோ எப்படி வேண்டுமானாலும் சாதி இந்து எழுதினாலும் பரையர்கள் அல்லது பறையர்கள் அல்லது மறையர்களைத்தான் சாரும் .  சம்புவராயர் அல்லது சாம்பவராயர் என்று எழுதி அதனை சாதி வெறியர்கள் தாங்கள் ...

ஆதனே ஆதாம் ...அசேராவே அல்லா..

ஆதம் எகிப்தியரின் ஞாயிற்று தெய்வமாக இருந்தத. அத் தெய்வம் மறையும் ஞாயிற்றை குறித்தது . பின்னர் *ஆதம்* எனும் இந்த தெய்வத்தை *ரே*  என்னும் இன்னொரு எகிப்திய தெய்வத்துடன் இணைத்து *ஆதம்- ரே* என்று ஆக்கினர் . கிமு 1351-1334 எகிப்தின் ஆட்சி மாற்றம் நடந்தபின் அரசன் முன்பிருந்த எகிப்திய தெய்வங்களை வழிபடுவதை ஒழித்துவிட்டு *ஆதன்* எனப்பட்ட ஞாயிற்று தெய்வத்தை மட்டுமே வழிபட வேண்டுமென ஆணையிட்டார், உலகத்தில்  முதன்முதலில் ஒரு கடவுள் வழிபாடு இதுவேயாகும். பினிசிய தெய்வங்களாகிய ஆதனும் அசேரவுமே பிற்காலத்து யூத கிறிஸ்துவ , இஸ்லாமிய சமயங்களில் வருகின்ற படைப்புக் கதைகளில் *ஆதம் ,அவ்வா*  எனப்பட்ட முதல் ஆணும் பெண்ணுமாக உருவகப் படுத்தப்பட்டனர். ஆதன் என்னும் எகிப்திய- பீனிசியத்  தெய்வமே யூதர்களின் படைப்பு கதையில் ஆதாம்  என்றானது,  ஆதன் என்பதே ஆதம் என்றும் ஆதாம் என்றும் திரிந்திருக்கிறது என்றும்.  ஆதமின் மனையாட்டியைப் பழைய எபிரேய மொழியில் அவ்வா என்று அழைப்பதால் அம் மூதாட்டியையும் தாயையும் குறிக்கும் அப்பெயர் *ஒளவை* என்னும் தமிழ் பெயரின் திரிபாயிருக்கலாம் என்றும்   *பாவாண...

அயோத்தி தாசர் பண்டிதர்: பார்பாரென்ற பெயர் யாருக்கு சொந்தம்.

புத்த சங்கத்தை சேர்ந்த புருஷர்களை மகடபாஷையில் பிக்குகளென்றும், இஸ்திரீகளை பிக்குகனிகளென்றும்,  சகட பாஷையில் புருஷர்களை பார்ப்பார்கள் என்றும் இஸ்திரீகளை பாப்பினிகளென்றும்  வழங்கி வந்தார்கள் . பாப்பு, பாப்பா, பார்ப்பாரென்னும் பெயர்  தண்மெய்ப்  பெற்றவர்களாதலின் பௌத்த சங்கத்தை சேர்ந்து சித்திபெற்ற புருஷர்களை பார்ப்பார்கள் என்றும், பௌத்த சங்கத்தை சேர்ந்த சித்திபெற்ற இஸ்திரிகளை பாப்பினிகளென்றும் அழைக்கப்பட்டார்கள். சகல பற்றுக்களை மறுத்து தண்மெளாம் சாந்த நிலைப்பெற்ற பாப்பான் ,பாப்பினியெனப் பெற்ற சிறந்த பெயரை வேஷப் பிராமணர்களாம் மிலேச்சர்கள் பிள்ளை பெண்சாதிகளுடன் இருப்பதுடன் பொருளாசை  மிகுதியுற்று சகல பற்றுமுள்ளவர்கள் வைத்துக் கொண்டு கல்வியற்றக் குடிகளிடம் சென்று தங்களை பாப்பார், பார்ப்பிணிகளெனக் கூறி அதிகாரப்பிச்சை யிரந்துண டு நூதனமாக தேசத்திற்கு குடியேறிய மிலேச்சர்கள் யாவரும் தங்கள் பிள்ளை பெண்சாதிகளுடன் யாவரையும் பிராமணர், பிராமணரென்று சொல்லிக்கொண்டார்கள். பௌத்தன்ம மகட பாஷையில் அறஹத்தென்றும்,  சகட பாஷையில் பிராமணர் என்றும் , திராவிட பாஷையில் அந்தணர் என்றும் அழைக...

சேரியர் அல்லது சேரர் வரலாறு

பல நாடுகளை ஒன்றாக்கி பொறை நாடு என்று பொது பெயர் வைத்து ஆட்சி செய்திருக்கிறார்கள் அந்த ஒவ்வொரு நாட்டிற்கும் பொறை குடிகளின் அல்லது மரபுகளை சார்ந்தவர்களே அரசர்களாக இருந்துள்ளனர் மைய அரசாக  பொறைநாடு இருந்துள்ளது. தமிழினத்தின் பொறையர்கள் பறையர்கள் தான் என்பதை நீங்கள் ஏற்கவில்லை  என்றால் தமிழர்களை ஆட்சி செய்தது சிங்கள இனத்தில் இருக்கும் பொறவா சாதியா?  வரலாற்று ஆய்வாளர்கள் சேரியர் சேரர் வரலாற்றை சரியாக ஆய்வு செய்து வெளியிடவும்.

பரையர்

பரையர் (எ) மறையர் (எ) பறையர்களில் இருந்து உருவான  தலைக்கட்டு ‘குடி’ யாக ‘குலம்’ மாக , ‘கோத்திரம்’ மாக, ‘கிளை’ யாக , ‘கொத்து’ தாக மாறி பின்னர்‘சாதியாக மாறியிருக்கிறது.  தலைக்கட்டு’ வேறு, ‘குடி’ வேறு, ‘குலம்’ வேறு, ‘கோத்திரம்’ வேறு, ‘கிளை’ வேறு, ‘கொத்து’ வேறு, ‘சாதி’ வேறு ஆனால் ஒவ்வொரு சாதிக்குள்ளும் இவையிருக்கும் இந்த வேறுபாடுகள் ஒவ்வொன்றும் வளர்ந்து அது சாதியாகி உள்ளன என்பதுதான் உண்மை, இன்றைக்கு பறையர்கள் கீழ் சாதி என்று சொல்கிற சாதியர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்பு 500 ஆண்டுகளுக்கு முன்பு இவன் இந்த நாட்டில்  இப்போது அழைக்கப்படும் சாதிபெயரில் அவன் கிடையாது அவனது வரலாறு பரையர்களிடம் இருக்கிறது , அவனது மூதாதையர்கள் பரையர்கள் தான் என்பதை ஆய்வு செய்து புரிந்து கொள்ளவேண்டும், பரையர்கள் பல சாதியாக பல இனமாக உலகளாவிய அளவில் தனது தமிழ் மொழியை மறந்து இனத்தை மறந்து நாட்டை மறந்து இன்னொரு தேசத்தவர்களாக, வேற்று மொழி பேசுபவர்களாக, தன் தேசம் அறியாமல் கூட இந்திய சாதி வெறியர்களால் அழிக்கப்பட்ட வரலாற்றால் அவர்கள் தமிழர்கள் தான் என்பது கூட தெரியாமல் பல அடையாளங்களில் பரையர்கள் அல்லது தமிழர்கள்...

அய்யா உங்களிடம் தான் பேசுகிறேன்

Image
என்னை வதைத்த  துன்பங்களை  எதிர்த்து வீழ்த்த என்னை விட ஆயிரம் மடங்கு அக்கறை காட்டிய நீங்கள்...! என்னை எதிர்த்த ஒவ்வொன்றையும் நான் வெல்லும் போது என் அருகில் இல்லை.... எம்மை ஆளாக்க நீங்கள் பட்ட துன்பங்கள் ஏராளம் உண்டு எதனையும் நான் மறக்க வில்லை... நீங்கள் வெல்ல நினைத்த எதையும் மறக்கவில்லை நான், வென்றே தீருவேன்... எதிரியை கூட்டமாக நின்று எதிர்த்து நிற்கும் போது  இருக்கும் பலத்தை விட, தனியாக நிற்கும் போது பலம் அதிகமாகத்தான் இருக்கின்றது, இரண்டில் ஒன்று எப்படியும் நின்று ஜெயித்து காட்டுவேன்... அவமான படுத்தியவர்களை திரும்ப அவமானம் செய்ய எனக்கு ஒரு நிமிடம் போதாது  அப்படியல்ல நான், என் உளவியல் வேறு, அனைத்தும் உன்னில் இருந்து மற்றவை எதிர்கொள்வேன் உன்னை படிக்கின்றேன்..... என்றும் என்றென்றும் உம்மை மறவாத உன் மகன்  *வே.மு.ஞானம் @அறிவுடைநம்பி*

சோழர்கள்

*வரலாற்று திரிபு*  இவருடைய, அவருடைய, இதன் உடைய, அதன் உடைய, ஒரு பொருளின் உடையார் அதாதாவது உடையோர், தஞ்சை உடையார்  தஞ்சை காரர் , இதனை கொண்டோர் , இதன் உடையார் என்பதையெல்லாம்   படித்த முட்டாள் சாதி வெறியர்கள் தன் சாதியை பெருமை படுத்தி கொள்ள (சோழர்) பறையர்  வரலாற்றை தன் சாதிக்கானதாக  திருத்தி நிறுவி கொண்டு வருகிறார்கள்.  விழப்பறைய சோழர்களே  தஞ்சையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளனர், பறையர்களை தான் இன்று ஒவ்வொரு சாதியை சேர்ந்தவர்,சாதி வெறியர்கள் சோழர்களை எங்கள் சாதி என்று பெருமை அடித்து கொள்கிறான் வரலாற்றை திருத்தி அவர்கள் சாதிக்கு ஏற்றவாறு சோழர் வரலாற்றை நிறுவிகொள்கிறார்கள்.  சாதி வெறியர்களே எப்படி வேண்டுமானாலும் சொல்லி கொள்ளுங்கள் எழுதி கொள்ளுங்கள் பறையர்களில் இருந்து உருவான குடிகள் தானே நீங்கள் உரிமை கோருங்கள்.  விழுப்பறையர்  பெயரிலே இன்றும் விழுப்புரம் இருக்கிறது,   விழுப்பறையர் என்போர் வேறு சாதி என்று சொல்வதற்கு முன் திரிப்பதற்கு முன் பறையர்கள் வரலாற்றை தேடுங்கள் சோழர்கள் வரலாற்றை மீட்டெடுங்கள்.  *பறகேசரி*  ...

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் பிறந்தநாள் உலக சமத்துவ நாள்

Image
ஏப்ரல் 14 #புரட்சியாளர் டாக்டர் #பி_ஆர்_அம்பேத்கர் அவர்கள் #பிறந்தநாள் #உலக_சமத்துவ_நாள்

தோழமைகளுக்கு நன்றி

*கடந்த 6 ஆம் தேதி எனது தந்தையின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள்.*  எனது தந்தை  உயிருக்கு போராடி கொண்டிருக்கும் வேளையில் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்  கடுமையான தலைவலி வரும்போதெல்லாம் அவர் தன்னுடைய சுய நினைவை இழப்பார், வலி குறைந்து மீண்டும் சாதாரண நிலைக்கு வரும் போது வாடா வீட்டுக் போவோம்  என்பார்  இப்படியான நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் வாங்கு போவோம் என்று தொல்லை தருவார் , மருத்துவ மனையில் இருக்கவே முடியாது வீட்டுக்கு அழைத்துபோ எனக்கு உடல் நலம்பெரும் என்பார். நாங்கள் அறுவை சிகிச்சை முடிந்து போகலாம் என்று மருத்துவமனையில் வைத்து இருந்தோம் ஆனால் எனது தந்தை அறுவை சிகிச்சை செய்தால் நான் பிழைப்பேனா என்று தெரியாது நான் உயிருடன் இருக்கும் வரை வீட்டில் உங்களுடன் இருந்து இறந்து விட்டு போகிறேன் என்றார்  நானும் எனது அண்ணனும் பல மருத்துவரிடம் ஒப்புதல் (opinion) கேட்டோம் மூளை அறுவை சிகிச்சைக்கு பின் 10 சதவீதம் பிழைப்பதற்கு வாய்ப்பு இருக்கு, சொல்லவும் முடியாது, வயதானவர் என்பதால் அறுவை சிகிச்சை செய்யும் போதே உயிர் போகவும் வாய்ப்பு உள்து என்று ம...

திரட்டப்பட்ட மக்களை அரசியல் படுத்த வேண்டும்.

திரட்டப்பட்ட மக்களை ஓட்டாக மாற்றுவதும், ஒட்டுமொத்த மக்களை அமைப்பாக மாற்றுவதே  மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க பணி,  இருப்பதை தக்க வைப்பதும் ஒருவகை நிர்வாக ஆளுமை, இருப்பதை விட அதிகப்படியாக உருவாக்குவது மாபெரும்  நிர்வாக ஆளுமை, தன்னை மட்டுமே முன்னிறுத்தி கொண்டு  குடும்பத்தை கூட அரசியல் படுத்த முடியாதவர்கள் ஒரு ஆளுமை தான்,  குடும்பத்தை அரசியல் படுத்தி , மற்றவர்களையும் அரசியல் படுத்தி அமைப்பாய் மாற்றுபவர்களே மாபெரும் ஆளுமை.  உலகத்தில்   பெரிய சந்தை இந்தியா என்றால் இந்தியாவில் பெரிய சந்தை சேரி மக்களே,  ஆனால் சேரி மக்களை சந்தை படுத்துகின்ற கலையை, யுத்தியை இந்துத்துவ சாதிய முதலாளித்துவ கும்பல் நுட்பமாக கற்று வைத்துள்ளனர்.     அரசியல் களத்தில் சேரி மக்களின் ஓட்டுகளை கொள்ளை அடிக்கிறார்கள், அரசியல் அதிகாரத்திற்கே வர விடாமல் பல்வேறு நுட்ப அரசியலை நகர்த்துகிறார்கள் , சேரி மக்கள் அரசியல் சக்தியாய் எழுச்சி பெறாமல் சிதைக்கிறார்கள் இப்படி பல யுத்திகளை இந்துத்துவ சாதிய சக்திகள் பல வகையான தளத்தில் பணியாற்றுகிறார்கள் ஆனால் நாம் இவர்களை போல இயங்...

சோழர்கள் பறையர்களே

*சோழர்கள் பறையர்களே*  ________________ இராஜபறகேசரி' பட்டம் சுமந்து இறை தொண்டனாக  வலம் வந்தவர் பறகேசரி கண்டராதித்த விழுப்பறைய சோழன். கண்டராதித்தன் என்றும், விழுப்பறையர் ஞான கண்டாரதித்தர்  என்றும் அழைக்கப்பட்ட  இவர், சோழமண்டல சக்கரவர்த்தியாக அரசாண்ட காலம் கி.பி. 953 முதல் 957 வரை.  சைவ சமயத்தின் எல்லையில்லா பக்தி கொண்டவர். பறகேசரி  *கண்டராதித்த விழுப்பறையர்* தனது பிறப்பிடமான கண்டராதித்த சோழபுரத்தில் ( *கண்டாச்சிபுரம்* ) தனது உறவினர் குடும்பத்தில் *வீரநாராயிணி* தேவியார் திருமணம் செய்தார் அவர் பட்டத்திற்கு  வருமுன்னரே முதல் மனைவி வீரநாராயணி இறந்துவிட்டதால் இறப்பிற்கு பிறகு தனது விழுப்பறையர் குலத்தில் பெண் தேடாமல் இரண்டாவது மனைவி செம்பியன் மாதேவியாரை *பறகேசரி கண்டராதித்தன்* ,  பட்டத்தரசியாக்கினார். *பறகேசரி கண்டராதித்த விழுப்பறைய சோழன்* சில ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்தார். திடீரென்று ஏற்பட்ட  உடல்நலக் குறைவினால் இயற்கை அடைந்தார் பின்னர் *செம்பியன் மாதேவியார்* தனது வாழ்நாள் முழுவதும் தெய்வத் திருப்பணிகள் பல செய்து சோழர்கள்  வரலாற்றில் தனக்கென...