அய்யா உங்களிடம் தான் பேசுகிறேன்
என்னை வதைத்த துன்பங்களை எதிர்த்து வீழ்த்த என்னை விட ஆயிரம் மடங்கு அக்கறை காட்டிய நீங்கள்...!
என்னை எதிர்த்த ஒவ்வொன்றையும் நான் வெல்லும் போது என் அருகில் இல்லை....
எம்மை ஆளாக்க நீங்கள் பட்ட துன்பங்கள் ஏராளம் உண்டு எதனையும் நான் மறக்க வில்லை...
நீங்கள் வெல்ல நினைத்த எதையும் மறக்கவில்லை நான், வென்றே தீருவேன்...
எதிரியை கூட்டமாக நின்று எதிர்த்து நிற்கும் போது இருக்கும் பலத்தை விட, தனியாக நிற்கும் போது பலம் அதிகமாகத்தான் இருக்கின்றது, இரண்டில் ஒன்று எப்படியும் நின்று ஜெயித்து காட்டுவேன்...
அவமான படுத்தியவர்களை திரும்ப அவமானம் செய்ய எனக்கு ஒரு நிமிடம் போதாது அப்படியல்ல நான், என் உளவியல் வேறு, அனைத்தும் உன்னில் இருந்து மற்றவை எதிர்கொள்வேன் உன்னை படிக்கின்றேன்.....
என்றும் என்றென்றும் உம்மை மறவாத உன் மகன் *வே.மு.ஞானம் @அறிவுடைநம்பி*
Comments
Post a Comment