#இடது_சாரிகள்_கூடாரத்தில் #சனாதன_வாதிகள்...
கொண்ட கொள்கையில் உறுதியாக கடைசிவரை அதன் இலக்கை நோக்கி நகர வேண்டும், கொள்கை எதிரி நமக்கு தெரியும் ஆனால் கூடவே இருந்து கொண்டு நமது ஒற்றுமையை , கொள்கையை சிதைப்பவனை நாம் அடையாளம் காணவேண்டிய நேரம் இது, அத்தகையவர்களை அடையாளம் காண்பது பெரும் கடினம் அவர்கள் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், பிரபாகரன் போன்றவர்களின் முகமூடி அணிந்திருப்பார்கள். வலது சாரிகள் அதன் தலைமைகள் தனக்கானவர்களை அடையாளம் கண்டு அவர்களை பயிற்றுவித்து திட்டமிட்டு இடது சாரிகளின் அரசியலை தலைமை தாங்க வைத்து அதனை எளிதில் அழிக்க திட்ட மிட்டு வேலை செய்து வருகிறார்கள். சாதி வெறியர்கள், மத வெறியர்கள் இன வெறியர்கள், சாதிய அமைப்பை பாதுகாக்க விரும்புவர்கள் முதலாளித்துவ , கார்பரேட் நிறுவன கைக் கூலிகள், சமூக மாற்றத்திற்கு போராடுகிற அனைத்து அமைப்புகளுக்குள்ளும் ஊடுருவி சிதைப்பதற்கு வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களே வழிநடத்தும் பொறுப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள் இன்றைய புதிய சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது அவர்களை சமாளிக்க புதிய பலத்துடன் மீண்டும் ஒரு யுத்தம் முதலில் இருந்து தொடங்குவத...