உலகத் தாய்மொழி் நாள்
மொழி என்பது ஒரு இனத்தின் உயிர் பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1999 ஆம் ஆண்டு UNESCO அறிவித்த இந்த நாள், 1952 ஆம் ஆண்டு மொழி உரிமைக்காக போராடிய மாணவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் உருவானது. மொழி என்பது வெறும் தொடர்பாடல் கருவி அல்ல, அது ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, உணர்வு, சுயமரியாதை மற்றும் அரசியல் அடையாளத்தின் உயிர்நாடி. தமிழ்நாடு அரசு உலகத் தாய்மொழி நாளை சிறப்பாகக் கடைபிடிப்பது பாராட்டத்தக்கது. இது ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, தாய்மொழி மீதான அரசியல் மற்றும் பண்பாட்டு பொறுப்புணர்வின் வெளிப்பாடு. தாய்மொழியில் கல்வி, நிர்வாகம், நீதித்துறை, அறிவியல் ஆகியவை வளர வேண்டும் என்ற எண்ணமே உண்மையான மொழிப் பாதுகாப்பு. ஒரு மொழியை அழித்து மற்றொரு மொழியை நிறுவுவது எந்த ஜனநாயக அரசுக்கும் ஏற்ற செயலல்ல. மொழி திணிப்பு என்பது சமூக விரிசலை ஏற்படுத்தும் அபாயகரமான நடைமுறையாகும். ஒரே மதத்தைப் பின்பற்றிய (Pakistan) பாகிஸ்தான் கூட மொழி உரிமை மறுக்கப்பட்டதன் விளைவாக 1971 இல் பிளவுபட்டு பங்களாதேஷ் (Bangladesh) உருவானது. இந்த வரலாறு மொழி...