அறியாமை எனும் இருளை அகற்றஅறிவு எனும் வெளிச்சம் ஏற்றுவோம்.
அறியாமையை பயன்படுத்தியே சிலர் ஆதாயம் அடைகிறார்கள்,
அதே அறியாமையின் மேல் நின்றே அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
எனவே ஒழிக்க வேண்டிய முதல் எதிரி அறியாமைதான்.
மக்களை அறிவுச் சமூகமாக மாற்றுவதே
உண்மையான சமூக மாற்றத்தின் அடிப்படை.
குடும்ப அமைப்பு முதல் அரசமைப்பு வரை,
சமூக அமைப்பு, மத அமைப்பு, சங்கம், கட்சி, நிறுவனம் வரை
சுரண்டல், லஞ்சம், மோசடி, வேறுபாடு,
ஏற்றதாழ்வு தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கான
முழு முதல் காரணம் அறியாமையே.
உழைப்பவனை ஏமாற்றுபவன்
மிதித்து மேலேறி வெற்றி பெறுகிறான் என்றால்,
அதற்கும் காரணம் அறியாமை.
கொள்கை, கோட்பாடு, விசுவாசம்,
உண்மை, உழைப்பு, அர்ப்பணிப்பு
தோல்வியடைவதற்கும் காரணம் அதே அறியாமை
வளர்ந்து, தழைத்து, செழித்து நிற்பதே.
உழைப்பவன் உழைத்துக் கொண்டே இருக்கிறான்,
ஆனால் சூழ்ச்சி, பொய், பித்தலாட்டம்,
சமூக விரோதச் சிந்தனைகள்
அதற்கும் வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
உழைப்பவன் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்கும் சூழலில், சூழ்ச்சி, பொய், பித்தலாட்டம் ஆகியவை வளர்வதற்குக் காரணம் அறிவின் இல்லாமை அல்ல, அறிவை திட்டமிட்டு ஒதுக்கும் சமூக கட்டமைப்பே. ஆகவே சமூக மாற்றத்தின் முதல் அரசியல் இலக்கு, அறியாமையை ஒழித்து மக்களை அறிவுச் சமூகமாக மாற்றுவதுதான்
சுரண்டல், ஆதிக்கம், சமத்துவமின்மை, பிற்போக்குத்தனம், பாகுபாடு,ஏற்றத்தாழ்வு, வறுமை ஆகியவற்றின் மூல காரணம் அறிவின்மையே.
அறியாமை எனும் இருளை அகற்ற
அறிவு எனும் வெளிச்சம் ஏற்றுவோம்.
அறிவு தான் விடுதலை.
அறிவு தான் சமத்துவம்.
அறிவு தான் உண்மையான அரசியல்.
Comments
Post a Comment