#மு_அறிவுடைநம்பி_அவர்களின் #உரை_சுருக்கம் தொண்டர் அணி கடலூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் மேலழிச்சிப்பட்டு இராஜிவ் காந்தி அவர்களின் இல்ல திறப்பு விழாவில் கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் மு.அறிவுடைநம்பி பேசியது. ___ ___ ____________ சனாதன கோட்பாட்டை எதிர்ப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் , சனாதனத்தை வீழ்த்தி புரட்சிகர சனநாயகத்தை நிறுவுவதற்கு போராடுபவர்கள் தான் விடுதலைச் சிறுத்தைகள். தேசம் காப்போம் என்பது சனாதனத்தை ஒழித்து காப்போம் என்பதுதான், சனாதன பயங்கரவாத்த்தை எதிர்த்து தேசம் காப்போம் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிலைப்பாடு , சில குதர்க்கவாதிகள், விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சியை விரும்பாதவர்கள், காழ் புணர்ச்சி கொண்டவர்கள் சிந்தனைக்கு எட்டியபடி, வாய்க்கு வந்தபடி எதை எதையோ உளறிக்கொண்டு இருக்கிறார்கள், சமூக வலைத்தளங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கையில் அடிப்படையில் அவரின் ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவில் போராடுகிற ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதை நான் சொ...