சனவரி 22.2019 பதிவு
#மு_அறிவுடைநம்பி_அவர்களின்
#உரை_சுருக்கம்
தொண்டர் அணி கடலூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் மேலழிச்சிப்பட்டு இராஜிவ் காந்தி அவர்களின் இல்ல திறப்பு விழாவில் கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் மு.அறிவுடைநம்பி பேசியது.
___ ___ ____________
சனாதன கோட்பாட்டை எதிர்ப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் , சனாதனத்தை வீழ்த்தி புரட்சிகர சனநாயகத்தை நிறுவுவதற்கு போராடுபவர்கள் தான் விடுதலைச் சிறுத்தைகள்.
தேசம் காப்போம் என்பது சனாதனத்தை ஒழித்து காப்போம் என்பதுதான், சனாதன பயங்கரவாத்த்தை எதிர்த்து தேசம் காப்போம் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிலைப்பாடு ,
சில குதர்க்கவாதிகள், விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சியை விரும்பாதவர்கள், காழ் புணர்ச்சி கொண்டவர்கள் சிந்தனைக்கு எட்டியபடி, வாய்க்கு வந்தபடி எதை எதையோ உளறிக்கொண்டு இருக்கிறார்கள், சமூக வலைத்தளங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கையில் அடிப்படையில் அவரின் ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவில் போராடுகிற ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதை நான் சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அம்பேத்கர் இயக்கம்தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய நான் விரும்புகின்றேன்.
இந்தியக் குடியரசில் ஜனநாயகம் இருக்கிறது, சமத்துவம் இருக்கிறது, சகோதரத்துவம் இருக்கிறது, அனைத்து மனிதனும் சமம் என்ற கோட்பாடு இருக்கிறது, ஆனால் கிராமிய குடியரசில் அதாவது ஒவ்வொரு கிராமத்திலும் சமத்துவம் இல்லை ,சுதந்திரம் இல்லை, சகோதரத்துவம் இல்லை, சாதி மத ஏற்றத்தாழ்வு என்பது மதத்தின் அடிப்படையில், இந்துத்துவ சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு கிராமமும் இருந்து கொண்டிருக்கின்றன இந்த கிராமத்தில் எந்த சட்டமும் எடுபடாது மனு தர்ம சட்டத்தை தவிர, ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக இருந்துகொண்டிருக்கின்றன ஒரு தனி நாடக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கென்று ஒரு தனிச் சட்டம் இருக்கின்றன அந்த சட்டத்தின் அடிப்படையில் பட்டியலின மக்கள் அடிமைகளாகத்தான் நடத்த விரும்புகின்றனர்.
இத்தகைய மனிதத்தை பிளக்கின்ற,சகோதரத்துவத்தை உடைகின்ற பல்வேறு வேறுபாடுகளை வளர்கின்ற இந்த சாதி அமைப்பை அடித்து நொறுக்குவதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைக் கொள்கை, இந்த சாதி அமைப்பை பலமாக கட்டி காப்பாற்றுகின்ற இந்துத்துவ சனாதன கோட்பாட்டை விழுத்துவதே விடுதலை சிறுத்தைகளின் கொள்கை . சாதியத்தை பாதுகாக்கின்ற கிராம குடியரசை , இந்த கிராம குடியரசுகளை சாதியைப் பாதுகாக்கும் இந்த சாதி அமைப்பு முறைகளை அடித்து நொறுக்குவது எங்களின் உறுதியான போராட்டம் இதையொட்டியே எங்களின் அரசியல் களங்கள் விரியும்.....
இவைகள்தான், இத்தகைய கொள்கை புரிதலின் இருந்துதான் வெவ்வேறு வடிவமாக எங்கள் போராட்டம் இருக்கும். எங்களுடைய கோட்பாடு என்பது புரட்சியாளர் அம்பேத்கரின் கோட்பாடு எங்களுடைய தலைவர் எழுச்சித்தமிழர் அண்ணன் திருமாவளவன் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை வாரிசு ,கௌதம புத்தரின் அரசியல் வாரிசு மௌரிய பேரரசின் ஒரு மாபெரும் அரசன், ஒரு அசைக்க முடியாத தலைவன் ,அசோகரின் அரசியல் வாரிசு,
சனாதனத்தை எதிர்த்து களமாடுவோம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வலுப்படுத்துவோம்
அனைத்து அம்பேத்கரிய வாதிகளும் ஜனவரி 23 திருச்சி நோக்கி வாருங்கள் சனாதனத்தை எதிர்த்து விழுத்துவோம்
சமூக ஜனநாயகத்தை அடைய போராடுவோம் வாருங்கள்
Comments
Post a Comment