Posts

Showing posts from May, 2020

சுத்த தமிழன் தான்...

சுத்த தமிழன் தான் சேரி மக்களின் வீடுகளை  கொளுத்துகிறாரன், சுத்த தமிழன் தான் சேரி மக்களை சாதி அடிப்படையில் இழிவு செய்கின்றான், சுத்த தமிழன் தான் தர்மபுரியில் வீடுகளை கொளுத்தினான் சுத்த தமிழன் தான் சிதம்பரத்திலே ஓட்டு போட விடாமல் தடுத்தான், சுத்த தமிழன் தான் சேரி மக்களை படுகொலை செய்கின்றான்,  சுத்த தமிழன் மதவாதிகளுக்கு துணை போகின்றான் சுத்த தமிழன் தான் ஊழல் செய்கிறான், சுத்த தமிழன் தான் சேரி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றான், சுத்த தமிழன் தான் சேரி மக்களின் சொத்துக்களை சூறையாடுகிறான், சுத்த தமிழன் தான் சேரி மக்கள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கின்றான், இந்த சுத்த தமிழர்களைவிட சாதியை எதிர்ப்பவர்களும் மதவெறி எதிர்ப்பவர்களும் சமத்துவத்தை பேசுகின்ற பிறமொழி பேசுபவர்களே எங்கள் நட்பு சக்திகள், எங்கள் உறவுகள்.  #வாழும்_அம்பேத்கர்_அண்ணன்  #தொல்_திருமாவளவன் அவர்களின் சிந்தனையிலிருந்து இப்பதிவு. ஜெய் பீம்

2018 முகநூல் பதிவுகள்

1.எந்த மக்களுக்காக போராடுகிறோமோ அந்த மக்களிடம் நேர்மையாக,  உண்மையாக நடந்து கொண்டோம் என்றால் அவர்கள் நமக்காக கடவுளையும் திட்டுவார்கள், வெறுப்பார்கள். 2.சீனா கம்யூனிஸ்ட் கட்சி CPC நடத்தி முடிந்த மாநாட்டு தீர்மானத்தில் வரும் 30 ஆண்டுகால செயல் திட்டத்தில் Promoting richest culture என்ற ஒன்றை சொருகி உள்ளார்கள், அது அனைவருக்கும் தெரியும் அதுதான் புத்தரின் தம்மம். 3.சீனா கம்யூனிஸ்ட் கட்சி CPC அதனுடைய politbureau உறுப்பினராக பெளத்த லாமா ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும், இந்தியாவில் கம்யூனிசம் பேசுகிறவர்கள்  புத்தரையும், அம்பேத்கர் அவர்களையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். 4.மறைந்த மேற்கு வங்க முதல்வர் அய்யா ஜோதி பாசு அவர்கள் ஒரு முறை ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் அவர் ' "ஆம் தொழிலாளர் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியவில்லை என்றார்". 5.(social democracy) சமூக சனநாயகத்தை அடையாமல் ( political democracy ) அரசியல் சனநாயகத்தை அடைவோம் என்பது வெற்று வேலை என்றார் புரட்சியாளர் அம்பேத்கர் 6. கட்சி ,அமைப்புகளில் சூழ்ச்சியால், யுத்தியால், பொய்கள...

பறையர்கள் (பூர்வகுடிகள் ) மீது தொடுக்கப்பட்ட பீதித்தாக்குதல்.

*தமிழன் இதழில்* பறையர்கள் குறித்து பறையர்களின் பூர்வத் தொழிலென்ன என்ற கேள்விக்கு அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் அளித்த பதில் பூர்வத்தில் இவர்கள் *அந்தண* , *அரச* , *வணிக* , *வேளாளமென்ற* நான்கு தொழில்களையும் சரிவர செய்து வந்தார்கள்.  பறையர்  ஆதியில் இருந்து அல்லது 2000 வருடமாக இந்திய துணை கண்ட நிலப் பகுதி முழுவதும் பறையர்கள் அடிமையாக வாழ்ந்தார்கள், இருந்தார்கள் என்று சொல்வது ஆதாரமற்ற பொய் .  இது ஒரு வகையான பய உணர்ச்சி அடிப்படையில் தாழ்வு மனப்பான்மையில் பறையர்கள் வாழ்வதற்கு சொல்லப்பட்ட , உளவியல் நீதியாக நிறுவப்பட்ட வரலாற்று பொய் . பீதியல் வாழ்வது, பயத்தில் வாழ்வது என்பது ஒரு வகை மனநோய் , இது ஒரு தனி மனிதனுக்கு சில காரணங்களால் பாதிப்பு ஏற்படுத்தும் பயம் ,பதட்டம், படபடப்பு, ஏற்பட்டு ,வேறு முன்னேற்ற தொடர்பான செயல்களில் கவனம் செலுத்தாமல் அல்லது இயல்பு வாழ்க்கை இல்லாமல் பயத்தில் வாழ்வார்கள், காரணம் இன்றி ஏதோ ஒரு வகையான பீதியில் வாழ்வார்கள், அவர்களை இந்நோய் அதாவது பீதி, பய உணர்ச்சி நோய்  தாக்கி இருக்கும்  இந்த நோயை panic attack என்று அறிவியல் படியும், நரம்பியல் ,மனநோய் மர...

*நடைமுறையை* *பரிசீலிக்க வேண்டும்*

இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்திலும் வலது சாரி சிந்தனையாளர்கள் ( right wing thinkers) அதிக அளவில் உருவாகியிருக்கிறார்கள், அவர்களின் கருத்துக்கள்தான் சரியான கருத்தாக ஊடகங்களில் ஊடாக இளைய தலைமுறையினருக்கு, புதிய வாக்காளர்களுக்கு புகுத்தப்பட்டு இருக்கிறது . சமூக மாற்றத்தை விரும்பகூடிய இடது  சிந்தனையாளர்கள்(left wing  thinkers)  இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மிக மிக குறைவாகவே இருக்கிறார்கள். புதிய தலைமுறையினரிடம், புதிய வாக்ககாளர்களிடமும் சரியான அரசியல் கோட்பாட்டுகளை அரசியல் புரிதல்களை உருவாக்கவில்லை. பொதுவுடமை கட்சியினர் பணி கூட பெரிதாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லை, தனியார் மயம், உலக மயம்  சூழலில் இந்தியாவில் , தமிழ்நாட்டில் நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளாமல் பழைய அறிவியல்களையும் பழைய வரலாற்றையும், பழைய அரசியல் யுத்திகளை பேசிக்கொண்டு புதிய ஆய்வுகளுக்கு உட்படாமல்,  மனித குலத்தால் கண்டுபிடிக்கபடுகிற எதிரிகள் கையால்கிற அறிவியல்களை பயன்படுத்தாமல் , இந்துத்துவ சிந்தனையாளர்கள் தீர்மானிக்கும் அரசியல் திசை வழிக்கு சமூக மாற்றத்தை விரும்ப கூடிய சக்திகள் பயணிக்க...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சுரண்டலுக்கு வைத்துள்ளார்கள்.

*புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்*   *ஏன் உருவானார்கள்* ,  *யார் உருவாக்கினார்கள்*  கோவிட்19 வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் வந்தது, ஊரடங்கினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்தான் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் செருப்பு கூட இல்லாமல் நடந்தே சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டுள்ளனர், அவர்களின்  துயரம் என்பது மனித இனத்தின் இதுவரை நடந்திடாத பேரவலம், *யார் இந்த புலம்பெயர் தொழிலாளர்கள்* ...? இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள், தமிழகத்தில் இருக்கிறவர்கள் குஜராத்திற்கு கூலி வேலைக்கு, கல் தூக்கும்  வேலைக்கு செல்கிறார்கள், குஜராத்தில் இருப்பவர்கள் இங்கு தமிழ்நாட்டில் வந்து அதே வேலையை செய்கிறார்கள், எதற்கு செய்கிறார்கள் இதற்கு ஏன் ஒரு அலைச்சல், அவரவர்கள் அங்கங்கேயே அதாவது அவரது ஊர்களிலேயே அந்த வேலையை செய்து கொள்ளவேண்டியதுதானே,  அமெரிக்காவில், சிங்கப்பூரில் ஒரு பொறியாளருக்கு 5 லட்சம் சம்பளம் தருகிறார்கள் என்பதற்காக அங்கு வேலைக்கு போனால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறத...

புலம்பெயர் தொழிலாளர்கள் ஏன் உருவாகினர்கள் யார் உருவாக்கினார்கள் !

மார்ச் 25 முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் வந்தது, ஊரடங்கினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்தான் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டுள்ளனர் அவர்களின் அவலம் என்பது பேரவலம் யாரந்த புலம்பெயர் தொழிலாளர்கள். இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள், தமிழகத்தில் இருக்கிறவர்கள் குஜராத்திற்கு கூலி வேலைக்கு, கல் தூக்கும்  வேலைக்கு செல்கிறார்கள் குஜராத்தில் இருப்பவர்கள் இங்கு தமிழ்நாட்டில் வந்து அதே வேலையை செய்கிறார்கள்  எதற்கு செய்கிறார்கள் இதற்கு ஏன் ஒரு அலைச்சல், அவரவர்கள் அங்கங்கேயே அதாவது அவரது ஊர்களிலேயே வேலை செய்து கொள்ளவேண்டியதுதானே, அமெரிக்காவில், சிங்கப்பூரில் ஒரு பொறியாளருக்கு 5 லட்சம் சம்பளம் தருகிறார்கள் என்பதற்காக அங்கு வேலைக்கு போனால் ஒரு அர்த்தம் இருக்கிறது,  ஆனால் இந்தியாவில் கூலி வேலை செய்வதற்கு பல மாநிலங்களை கடந்து செல்வதற்கு அர்த்தம் என்ன, இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எப்படி உருவாகுகிறார்கள், புலம்பெயர்ந்து வாழ வேண்டிய அவசியம் என்ன?  ஏன் இதை எவரும் ஆய்வு...

இந்துமதம் மனநோயாளின் கூடாரம்

தமிழ்நாட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை அவமதிப்பு செய்பவனை காவல்துறை கைது செய்யும் போதெல்லாம்,  குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் அவர்கள் மனநோயாளி என்று காவல்துறை அறிவிக்கும்,   இப்போது நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று ,  சாதி தீண்டாமை, கடைபிடிக்கும் அல்லது இந்துமதத்தை ஏற்று நிற்கும்  சாதி இந்துக்கள் அனைவரும் சமூகத்தில் மனநோயாளியாகத்தான் வாழ முடியும் என்று  புரட்சியாளர் அம்பேத்கர் கூறியிருக்கிறார்  அதன் படியே  அரசு ஒட்டுமொத்த சாதி இந்துக்களை மனநோயாளி என்று அறிவிப்பதே சரியானது , நாங்கள் ஏற்கிறோம் இவர்கள் மனநோயாளிகள் தான் என்று, சாதி வெறி பிடித்த அனைவரும் மனநோயாளிகளே அவர்களுக்கு உரிய சிகிச்சை கொடு. அறிவியலுக்கு முரண்பாடான வாழ்க்கை வாழக்கூடிய இந்த வகை மனிதர்கள் மனநோயாளி தான் அக்கினி சட்டியில் பிறேந்தேன் நெருப்பில் இருந்து தோன்றியவர்கள் என்று சொல்லி கொண்டு தலையில் பிறேந்தேன் , தோளில் பிறேந்தேன், இப்படி பல அறிவியலற்ற நடைமுறையில் வாழும் மனநோயாளிகள் , அறிவியலற்ற சித்தாந்தங்களை பின்பற்றும் இந்த மனநோயாளிகளை அரசே !  உடனே (மெண்டல் ) மனநோயாளி என்ற...

நாகர்கள் தொல்தமிழர்களே..

நாகர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் வாழ்ந்தவர்கள் நகர்கள் தமிழர்களே என்று புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆய்வு செய்து அறிவித்திருக்கிறார், இதனையே எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள் செம்மொழி மாநாட்டில் உலக தமிழர்களுக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் ஆய்வை முன்வைத்து உலக தமிழர்களுக்கு, தமிழ் அறிஞர்களுக்கு எடுத்து சொல்லி புரட்சியாளர் அம்பேத்கரின் புகழை பரப்பி இருக்கிறார். நாகர்களிடமே ஆரியர்கள் எழுத்துகளை கற்றனர், சமஸ்கிருதத்தை உருவாக்கி அதை கற்பித்தவர்கள் நாகர்களே  இவ்வெழுத்துகளுக்கு தேவநாகரி ( தேவ+ நாகரி) என்று அழைக்கப்படுவதாக பல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நாகர்களின் மந்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் அம்மந்திரங்கள் ஆங்கில அறிஞர்கள் ரிவென்பர்க் மற்றும் பெட்டிக்ரூவ் இருவரும் தொகுத்துள்ளனர். நாகர்கள் வழிவந்த மக்களே நயினார் , நயினார் கோவில்கள்  கட்டியுள்ளனர், இன்று  வாழும் தொல் தமிழராகிய வள்ளுவர்களே எஞ்சிய  நாகர்களின் நேரடி பிற்சந்ததியர் ஆவர், இவர்களே நயினாரும் ஆவார். பறையர் வள்ளுவர் ஒன்றே, பரதவர்களும் நாகர் இனத்தின் கிளைகளே.