*நடைமுறையை* *பரிசீலிக்க வேண்டும்*
இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்திலும் வலது சாரி சிந்தனையாளர்கள் ( right wing thinkers) அதிக அளவில் உருவாகியிருக்கிறார்கள், அவர்களின் கருத்துக்கள்தான் சரியான கருத்தாக ஊடகங்களில் ஊடாக இளைய தலைமுறையினருக்கு, புதிய வாக்காளர்களுக்கு புகுத்தப்பட்டு இருக்கிறது .
சமூக மாற்றத்தை விரும்பகூடிய இடது சிந்தனையாளர்கள்(left wing thinkers) இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மிக மிக குறைவாகவே இருக்கிறார்கள்.
புதிய தலைமுறையினரிடம், புதிய வாக்ககாளர்களிடமும் சரியான அரசியல் கோட்பாட்டுகளை அரசியல் புரிதல்களை உருவாக்கவில்லை.
பொதுவுடமை கட்சியினர் பணி கூட பெரிதாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லை, தனியார் மயம், உலக மயம் சூழலில் இந்தியாவில் , தமிழ்நாட்டில் நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளாமல் பழைய அறிவியல்களையும் பழைய வரலாற்றையும், பழைய அரசியல் யுத்திகளை பேசிக்கொண்டு புதிய ஆய்வுகளுக்கு உட்படாமல்,
மனித குலத்தால் கண்டுபிடிக்கபடுகிற எதிரிகள் கையால்கிற அறிவியல்களை பயன்படுத்தாமல் , இந்துத்துவ சிந்தனையாளர்கள் தீர்மானிக்கும் அரசியல் திசை வழிக்கு சமூக மாற்றத்தை விரும்ப கூடிய சக்திகள் பயணிக்கிறார்கள்.
கார்பிரேட் முதாளித்துவ அரசியல் ஒவ்வொரு நாளும் நவீன இந்துத்துவத்தை நடைமுறை படுத்துகிறது.
இன்றைய புதிய நிலைமகளில் சமூக மாற்றத்திற்கு போராடுகிற, தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள் மற்றும் தேர்தலை புறகணிக்கும் புரட்சிகர இயக்கங்கள் மிக மிக தீவிரமாக இளைஞர்களை, மாணவர்களை அரசியல் படுத்துக்கிற பணிகளை செய்ய அணியமாக வேண்டும், மாணவர்களை இளைஞர்களை சாதியவாத , மதவாத கருத்துக்களுக்கு ஆட்படாமல் அவர்களை சமூக மாற்றத்திற்கான போராட்ட களத்திற்கு அழைத்து வரவேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் புதிய தலைமுறையினர் யாரும் சமூக மாற்றத்தை விரும்புகிற இயக்கங்களில் பெரும் அளவில் பங்காற்றவில்லை என்பதை புரிந்து கொண்டு சனநாயக சக்திகள் களப்பணியாற்ற வேண்டும்.
இந்துத்துவத்தை, சாதீயத்தை வீழ்த்தவேண்டும்மென்றால் தேசிய இன உரிமை மீட்கவேன்டும் என்றால் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கருத்தியல் வழியில் அவரின் மனித உரிமை சிந்தனையின் ஊடாக தீர்வு காண நாம் போராட வேண்டும்.
ஏதோதோ அரசியல் தேரிகளை நடைமுறை படுத்துவதை விட்டு விட்டு அம்பேத்கர் அவர்களின் கருத்தியல் வழியின் ஊடாக தீர்வு காண்போம்.
கடந்த கால அரசியல் நடைமுறைகளை மீக தீவிரமாக கையாளத்தொடங்கினால் அது இன்னும் அதிக ஆபத்தானதாக இருக்கும் ,
நாம் தக்க நேரத்தில் இந்த ஆபத்தை புரிந்து கொள்ளாவிட்டால் , இந்த ஆபத்தை அகற்றும் விதத்தில் நாம் வேலை அனைத்தயும் நடத்தி செல்லாவிட்டால், சனநாயகத்திற்கான கோட்பாடுகள் அனைத்தும் இந்துத்துவத்தின் பிடியில் இருக்கும்.
தலித் அரசியலுக்கு சாதி ஒழுப்பு குறிக்ககோளுக்கு மிகப்பெருத்த சேதம் ஏற்படும்.
மாணவர்கள் இளைஞர்களை அரசியல் படுத்துவோம் அதற்கான களப்பணியை உடனே துவங்குவோம்! .
*கற்பது என்பதே நமது பணி* ...
Mu.Arivudainambi 2014 fb பதிவு
இவண்:
வழக்கறிஞர் *மு.அறிவுடைநம்பி* விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Comments
Post a Comment