பறையர்கள் (பூர்வகுடிகள் ) மீது தொடுக்கப்பட்ட பீதித்தாக்குதல்.
*தமிழன் இதழில்* பறையர்கள் குறித்து பறையர்களின் பூர்வத் தொழிலென்ன என்ற கேள்விக்கு அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் அளித்த பதில் பூர்வத்தில் இவர்கள் *அந்தண* , *அரச* , *வணிக* , *வேளாளமென்ற* நான்கு தொழில்களையும் சரிவர செய்து வந்தார்கள்.
பறையர் ஆதியில் இருந்து அல்லது 2000 வருடமாக இந்திய துணை கண்ட நிலப் பகுதி முழுவதும் பறையர்கள் அடிமையாக வாழ்ந்தார்கள், இருந்தார்கள் என்று சொல்வது ஆதாரமற்ற பொய் .
இது ஒரு வகையான பய உணர்ச்சி அடிப்படையில் தாழ்வு மனப்பான்மையில் பறையர்கள் வாழ்வதற்கு சொல்லப்பட்ட , உளவியல் நீதியாக நிறுவப்பட்ட வரலாற்று பொய் .
பீதியல் வாழ்வது, பயத்தில் வாழ்வது என்பது ஒரு வகை மனநோய் , இது ஒரு தனி மனிதனுக்கு சில காரணங்களால் பாதிப்பு ஏற்படுத்தும் பயம் ,பதட்டம், படபடப்பு, ஏற்பட்டு ,வேறு முன்னேற்ற தொடர்பான செயல்களில் கவனம் செலுத்தாமல் அல்லது இயல்பு வாழ்க்கை இல்லாமல் பயத்தில் வாழ்வார்கள், காரணம் இன்றி ஏதோ ஒரு வகையான பீதியில் வாழ்வார்கள், அவர்களை இந்நோய் அதாவது பீதி, பய உணர்ச்சி நோய் தாக்கி இருக்கும் இந்த நோயை panic attack என்று அறிவியல் படியும், நரம்பியல் ,மனநோய் மருத்துவர்களும் சொல்வார்கள், இந்த பீதி நோய் (பறையர்) பூர்வ குடிகளுக்கு பொய் வரலாற்றின் மூலம் இலக்கியங்களில் மூலம், நாட்டு புற கதைகளின் மூலம், எழுதப்படாத நீண்ட காலம் நிலவி வரும் ஆதாரம் அற்ற பொய் கதைகளின் மூலம், சாதிய வாதிகளின் சில நடைமுறைகள் மூலம் மொத்தத்தில் அரசியல், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் ,வாழ்வின் நடைமுறை அனைத்திலும் பூர்வகுடி பறையர்கள் அல்லாதோர் மட்டுமே மாவீரர்கள், அவர்களுக்குத்தான் நாடு சொந்தம், இந்த மண் சொந்தம், அரசாள தகுதி படைத்தவர்கள் என்று பொய்யாக நம்பவைத்து சாதிவெறியர்களின் தலைவர்களை பூர்வகுடி பறையர்களை ஏற்க வைத்து, பூர்வகுடிகளை அடிமைபடித்தி ,பறையர்கள் குறித்த வரலாற்று ஆதாரங்களை அழித்து பூர்வகுடி பறையர் அல்லாதோர் வாழ்வதற்கு ஒட்டுமொத்த பறையர்குடியினர் மீது உளவியல் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
மனம் விடுதலை பெற வேண்டும் , எவருக்கும் நாம் தாழ்ந்தவர்கள் அல்ல பறையர்கள் அரச குடிகள் , நாம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வாழ பிறந்தவர்கள் என்று நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும்.
பூர்வ குடிகள்
இப்போது இருக்கிற அரச கட்டமைப்பு சரிவரவில்லை என்றால் அதனை மாற்றி அரசை கைப்பற்ற சிந்திக்க வேண்டும்.
(Panic attack) பய ,பீதி இனி நாம் ஏற்படுத்தும் வகையில் வரலாற்றை உருவாக்குவோம்.
ஒதுக்குதலும் ,இரத்தம் சிந்துவதையும் கண்ணீர் வடிப்பதையும் மட்டுமே வரலாற்றை நிறுவுவதே வேலையாக இல்லாமல் நமது வாழ்வின் கொண்டாட்டங்கள், சாகசங்களையும், போர்க்குண நடவடிக்கைகள், அறிவாளித்தனங்களையும், பெருமைகளையும் பதிவிடுங்கள், பூர்வகுடிகளை தாக்குபவர்கள் தானே தாக்குதலுக்கு உள்ளவர்கள், ஒவ்வொன்றுக்கும் எதிர்வினை நடக்கும்.
பறையர் யார் என்று அயோத்திதாசர் அவர்கள் எதற்காக ஆய்வு செய்து இந்த விடையை கொடுத்திருக்கிறார் உங்கள் சிந்தனைகள் உங்கள் செயல்கள், உங்கள் போக்குகள் மாறவேண்டும்.
எண்ணங்களை மாற்றுங்கள்.
பூர்வகுடிகள் நாமும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அறிவார்ந்த வகையில் அவர்களுக்கு எண்ணம் மாற்றம், சிந்தனை மாற்றம் நடைபெறும் வகையில் திட்டமிட்டு செயல்படுவோம் , எந்த வகையிலாவது panic attack செய்வது, உளவியல் ரீதியாக போர் தொடுக்க திட்டமிட்டு பணியாற்றுவது குறித்து சிந்தியுங்கள்
_இவண்_ :
வழக்கறிஞர் *மு.அறிவுடைநம்பி*
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Comments
Post a Comment