Posts

Showing posts from October, 2023

படிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும்...

Image
1999 ஆம் ஆண்டு அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு பிரச்சாரம் முடிந்து  அப்போது கடலூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே இருந்த  துவராக லாட்ஜ் க்கு வந்தார் அப்போது தலைவருடன் எடுத்தப்படம்..  நான் அப்போது 12-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியிருந்தேன், முதன் முதலாக சிதம்பரம் தேர்தல் கலவரத்தில்தான் என் மீது வழக்கானது, அப்போது என் மீது எந்த வழக்கு  இல்லாமல் இருந்திருந்தால் எனது அம்மாவின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றி இருப்பேன், ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆண்டுக்குள்  அனைத்து வழக்குகளும் முடிந்துவிடும் அடுத்த ஆண்டு முடிந்துவிடும் என்று நினைதிருந்தேன், ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக புதிது புதிதாக வழக்குகள் சேர்ந்தன, கடைசியாக அம்மாவின் ஆசையை நிறைவேற்ற உறுதியாக நின்றேன் 2020 ஆம் அண்டு கடவு சீட்டிற்கு விண்ணப்பித்தேன், ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக கடவுசீட்டு நிறுத்தப்பட்டு விளக்கம் கேட்டனர், நீதிமன்றத்தில் முறையிட்டு கடவுசீட்டு பெறலாம் என்று நினைத்தேன் அதற்குள் அம்மா தவறிவிட்டார், எனது அம்மா தன் வாழ்நாள் முழுவதும் தவம் செய்த வரம் கிடைக்காம...

வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி

Image
அக்டோபர் 2 முன்னாள் பிரதமர்  லால் பகதூர் சாஸ்திரி  பிறந்தநாள்... #வாழ்க_போர்வீரன்! #வாழ்க_விவசாயி லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர், இவர் இந்தியாவின் முக்கிய விடுதலைப் போராட்ட வீரர், 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் . அச்சமயம் இவரின் பெண்ணின் உடல் நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார். நாட்டிற்காக பெரும் தியாகம் செய்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள். லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. ஆனால் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் சாதிய அமைப்பை அதன் பழக்க வழக்கங்களை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியை குறிக்கும் குடும்ப பெயரை நீக்கினார்,  முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர்பான விரிவ...