படிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும்...
1999 ஆம் ஆண்டு அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு பிரச்சாரம் முடிந்து அப்போது கடலூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே இருந்த துவராக லாட்ஜ் க்கு வந்தார் அப்போது தலைவருடன் எடுத்தப்படம்..
நான் அப்போது 12-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியிருந்தேன், முதன் முதலாக சிதம்பரம் தேர்தல் கலவரத்தில்தான் என் மீது வழக்கானது, அப்போது என் மீது எந்த வழக்கு இல்லாமல் இருந்திருந்தால் எனது அம்மாவின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றி இருப்பேன், ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆண்டுக்குள் அனைத்து வழக்குகளும் முடிந்துவிடும் அடுத்த ஆண்டு முடிந்துவிடும் என்று நினைதிருந்தேன், ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக புதிது புதிதாக வழக்குகள் சேர்ந்தன, கடைசியாக அம்மாவின் ஆசையை நிறைவேற்ற உறுதியாக நின்றேன் 2020 ஆம் அண்டு கடவு சீட்டிற்கு விண்ணப்பித்தேன், ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக கடவுசீட்டு நிறுத்தப்பட்டு விளக்கம் கேட்டனர், நீதிமன்றத்தில் முறையிட்டு கடவுசீட்டு பெறலாம் என்று நினைத்தேன் அதற்குள் அம்மா தவறிவிட்டார், எனது அம்மா தன் வாழ்நாள் முழுவதும் தவம் செய்த வரம் கிடைக்காமல் போயின...
அம்மாவை தவிற இந்த உலகத்தில் யார் பெரிது, அம்மா விரும்பியதை நிறைவேற்றாத பிள்ளை நான்..
படிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும், காலத்திற்கு ஏற்ற கடமையை ஒழுங்காக செய்ய வேண்டும், அன்று நான் போராட்ட களத்தில் வழக்கு சிறை, தலைமறைவு,நீதிமன்றம் என்று அலைந்து திரிந்த போது , வேலை, படிப்பு, குடும்பம் என்ற இருந்தவர்கள் இன்று எனக்கு மேலே என்னை வழி நடத்தும் பதவி, அதிகாரத்தில் இருக்கிறார்கள், இதை எதற்காக பதிவு இடுகிறேன் என்றால், படிக்க வேண்டிய வயதில் படித்தே ஆக வேண்டும், காலம் கடந்து நான் முதுகலை பட்டப்படிப்பிலும் (M.A) சேர்ந்திருக்கிறேன். மற்றவர்களுக்கும் நிகராக தகுதியாக்கிக் கொள்ளவேண்டுமல்லவா...
Comments
Post a Comment