வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி

அக்டோபர் 2 முன்னாள் பிரதமர் 
லால் பகதூர் சாஸ்திரி 
பிறந்தநாள்...

#வாழ்க_போர்வீரன்! #வாழ்க_விவசாயி

லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர், இவர் இந்தியாவின் முக்கிய விடுதலைப் போராட்ட வீரர்,

1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் . அச்சமயம் இவரின் பெண்ணின் உடல் நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார். நாட்டிற்காக பெரும் தியாகம் செய்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்.

லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா.

ஆனால் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் சாதிய அமைப்பை அதன் பழக்க வழக்கங்களை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியை குறிக்கும் குடும்ப பெயரை நீக்கினார், 

முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர்பான விரிவுரையில் பெரிதும் கவரப்பட்டார். 1926 இல் காசி வித்தியாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இது பின் இவர் பெயருடன் இணைந்து விட்டது.

இந்திய விடிதலைக்கு பிறகு உத்தர பிரதேச முதலமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் அவர்களின் அமைச்சரவையில் காவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இவரே முதலில் பெண்களை நடத்துனராக நியமித்தார். காவல் துறை அமைச்சராக, கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கலைப்பதற்குக் கம்பால் அடிப்பதற்குப் பதிலாக நீரை பீய்ச்சி அடிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1956 ல் மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக முன்வந்தார். எனினும் நேரு இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை, 

இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் 1820 ஆம் ஆண்டுக்கும் 1840 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில், இலட்சக்கணக்கான இந்தியத் தமிழர் தமிழ் நாட்டிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக இலங்கைக்குக் அழைத்து செல்லப்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளில் தொடங்கப்பட்ட கோப்பி, தேயிலை, இறப்பர்த் தோட்டங்களில் பணி புரிவதற்காக அமர்த்தப்பட்டனர். பின்னார் 1940 வரை கூட இலங்கை மலையக பகுதிக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்றனர் என்பது வரலாற்று உண்மை. அங்கு கடுமையான சூழ்நிலைகளில் வேலை வாங்கப்பட்ட இவர்களில் உழைப்பினால் உருவான பெருந்தோட்டங்கள் இலங்கையின் வெளிநாட்டு வருமானத்தின் பெரும்பகுதியை ஈட்டிக்கொடுத்தன. ஆனால் அவர்களின் சமூக பொருளாதார சூழ்நிலை கேள்விக்குறியாகவே இருந்தது,

டொனமூர் அரசியலமைப்பு தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமை பெறுவதற்கு வழிவகுத்தது, ஆனால் தகுதிபெற்ற மூன்று லட்சம் தொழிலாளர்களில் 1,00,574 பேர் மட்டுமே வாக்குரிமை பெற்றனர். 

1931 இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் பங்கெடுத்த இவர்களிடையே இடதுசாரி கட்சிகளின் செல்வாக்கை மட்டுப்படுத்தவும், பிரதிநிதி களைக் குறைக்கவும் இவர்களது வாக்குரிமையை பறிக்கும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது. வாக்குரிமை பறிப்பு என்பது இலங்கை  ஆட்சியாளர்களால் தமிழுர்களுக்கு இழைத்த மாபெரும் துரோகமாகும்.

பிரித்தானியர் இலங்கையை விட்டு வெளியேறிய போது, சிங்களத்தேசிய வாதிகள், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவர்களது நெருக்குதல்களினால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம்  நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு தகுதி உடையவர் என்று வரையறுக்கப்பட்டது. 

இது மலையகத் தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமைந்தது. இதன் காரணமாகச் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டதுடன், 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் . 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் என்பது, இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்தியாவின் தமிழ்நாட்டு தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும், இடையில் 1964 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 இல் கையெழுத்தான ஒப்பந்தம் தான் சீறிமா- சாஸ்திரி ஒப்பந்தமாகும், இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 பேர் விடுபட்டுப் போயினர். 1967 முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அம்மக்களை இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என மூன்று கூறாகபிரித்தது. தமிழர்கள் வரலாற்றில் இது மிகப்பெரிய வரலாற்று ஒப்பந்தம் ஆகும்.  இந்திய மக்களுக்காக சர்வதேச பிரச்சனைகளில் கூட தலையிட்டும் தீர்த்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்கு சொந்தமாக வீடு கூட கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனை வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார்,

லால் பகதூர் சாஸ்திரியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் "வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி" என்ற பொருள்படும் "ஜெய் ஜவான் ஜய் கிஷாண்" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுவதை நினைத்து பெருமை அடைகின்றோம்.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்