Posts

Showing posts from December, 2023

இந்துமதம் வேறு, சேரி மதம் வேறு...

Image
குங்குமம் வைத்திருப்பதால் இந்து என்று நினைத்து விட வேண்டாம் #நாங்கள்_சேரி எங்களுக்கு என்று தனி பண்பாட்டு கலாச்சாரம்,, பழக்க வழக்கம், வழி பாட்டு முறை உண்டு....  சேரி பண்பாட்டையும்,  இந்துத்வ பண்பாட்டையும் வேறுபடுத்திக் காட்டும் பண்பாட்டு நடவடிக்கைகள் பெரிதும் தேவை. குல தெய்வ வழிபாடு , நடுகல் வழிபாடு, வேப்பமரம் ,அரச மரம் இப்படி இயற்கையை வழிபடுபவர்கள், அறத்தை வழிபடுபவர்கள், ஒழுக்கத்தை வழிபடுபவர்கள் ஞான வம்சத்தவர்கள்,  திருமணம், காது குத்து, வளையகாப்பு, மஞ்சள் நீராட்டு , பிறந்தநாள், சாவு, வாழ்வு, கருமாதி இப்படி எல்லாமே சேரிக்கென்று தனி பண்பாட்டு பழக்க வழக்கம் உண்டு,  மாரியம்மன், நாகம்மாள், பிடாரி அம்மாள், அங்காளம்மன், பெரியாயி, வீரன், அய்யனாரப்பன்  போன்ற இப்படியான தெய்வங்களும் பொறையாத்தாம்மா, இருச்சி, முனீஸ்வரன்,( முனி) பாப்பாத்தி அம்மன், பாப்பாங் குலத்து அம்மன்,  பாவாடை ராயன், இடும்பன், பஞ்சாத்தா, அம்சாரு அம்மா, இப்படி குல தெய்வங்களை தான் சேரி மக்கள் வழிபடுகிறார்கள் இந்த தெய்வங்களை எந்த பிராமணன் வணங்குகின்றனர்? இதையெல்லாம் இந்து மதம் என்று சொல்லி பூர்வகுடிகளை ...

பெயர் மாற்றம் வேண்டும்...!

Image
சாதியின் காரனமாக  தீண்டாமைக்கு ஆளான பூர்வகுடி மக்களை வேறு பெயர் கொண்டு அழைத்தலும், பெயர் சூட்டலும் அரசின் சலுகைகளுக்காக அடையாளம் காண்பதற்கு வகைப்படுத்தலும், தொடர்ந்து கொண்டே இருக்கின்றன  ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பெயர்கள் அரசும், சமூக செயல்பாட்டாளர்களும் பூர்வகுடிகளுக்கு சூட்டி கொண்டுதான் வருகிறார்கள், தீண்டதகாதவர்கள் என்றும்,  டிப்பிரஸ்ட்டு கிளாஸ் என்றும் அரிஜன சாதி என்றும், தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் ஆதிதிராவிடர்கள் என்றும் தலித்துகள் என்றும் பெயர் வைத்து அழைத்து வருகிறார்கள் தற்போது ஆதிதிராவிடர் என்று அரசு ஆவணங்கள் மூலம் வகைப்படுத்தி அழைத்தாலும் ஆனால் ஆட்சியாளர்கள் , அரசியல் கட்சியினர், வெகு மக்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டோர் என்றே அழைக்கின்றனர்,  ஷெட்யூல்டு காஸ்ட் என்று அழைப்பது கூட சரியானதாக ஏற்கலாம் அல்லது ஷெட்யூல்டு காஸ்ட் (SC )என்பதை மொழி பெயர்த்து அட்டவணை வகுப்பினர் அல்லது பட்டியல் வகுப்பினர் என்று கூட அழைக்கலாம், ஆனால் தாழ்த்தப்பட்டோர் என்று அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அழைப்பது என்பது ஏற்புடையதாக பொறுத்தமுடையதாக தோன்றவில்லை. ஒவ்வ...

சனாதனத்தை வீழ்த்துவோம்.

Image
2018 பதிவு ஏறத்தாழ 2400 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இந்திய பேரமைப்பில் உழைக்கும் மக்களை சமதர்ம ஆன்மீகத்துடன் திரட்டி  (Conservative ) சனாதன கொள்கையை எதிர்த்து அமைப்பை நடத்தியவர் உலகின் முதல் முற்போக்கு புரட்சியாளர் புத்தர். இந்தியாவில் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து உழைக்கும் மக்களாக இந்த விவசாய சமூக கட்டமைப்பில் உடைந்த மனிதர்களாக (அம்பேத்கரின் உடைந்த மனிதர்கள்) அடையாளப்படுத்தப்பட்டு  இன்றுவரை இந்தியாவில் இன்னொரு உழைக்கும் இந்தியாவாக இருக்கும் #தலித்துகளே_முதல்_கம்யூனிச_சமூக #அமைப்பாகும் உழைப்பின் வலிமை மற்றும் பேரண்ட ஆன்மீகத்துடன் சமத்துவ, சமூக அமைப்பை வலியுறுத்தியவர்களை இந்தியாவின்  (Conservative ) சனாதனவாதிகள் #தீண்டத்தகாதவர்களாக_மாற்றினார்கள்  காரல் மார்க்ஸின் பொருளாதாரக் கொள்கை மனித குலத்திற்கு எப்படி அவசியமோ அதற்கும் மேலாக மனித குலத்திற்கு மிக அவசியம் #சுதந்திரம் #சமத்துவம் #சகோதரத்துவம், இவைகளுக்கு எதிரான  closed door policy என்று அழைக்கப்படும் அம்பேத்கரின் ஆய்வான, தனக்குத்தானே மூடி கொள்வதன் மூலம், அடுத்த மனிதனை ஒதுக்கித் தள்ளும் சாதியக் ...