பெயர் மாற்றம் வேண்டும்...!

சாதியின் காரனமாக  தீண்டாமைக்கு ஆளான பூர்வகுடி மக்களை வேறு பெயர் கொண்டு அழைத்தலும், பெயர் சூட்டலும் அரசின் சலுகைகளுக்காக அடையாளம் காண்பதற்கு வகைப்படுத்தலும், தொடர்ந்து கொண்டே இருக்கின்றன 

ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பெயர்கள் அரசும், சமூக செயல்பாட்டாளர்களும் பூர்வகுடிகளுக்கு சூட்டி கொண்டுதான் வருகிறார்கள், தீண்டதகாதவர்கள் என்றும், 
டிப்பிரஸ்ட்டு கிளாஸ் என்றும் அரிஜன சாதி என்றும், தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் ஆதிதிராவிடர்கள் என்றும் தலித்துகள் என்றும் பெயர் வைத்து அழைத்து வருகிறார்கள் தற்போது ஆதிதிராவிடர் என்று அரசு ஆவணங்கள் மூலம் வகைப்படுத்தி அழைத்தாலும் ஆனால் ஆட்சியாளர்கள் , அரசியல் கட்சியினர், வெகு மக்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டோர் என்றே அழைக்கின்றனர்,  ஷெட்யூல்டு காஸ்ட் என்று அழைப்பது கூட சரியானதாக ஏற்கலாம் அல்லது ஷெட்யூல்டு காஸ்ட் (SC )என்பதை மொழி பெயர்த்து அட்டவணை வகுப்பினர் அல்லது பட்டியல் வகுப்பினர் என்று கூட அழைக்கலாம்,
ஆனால் தாழ்த்தப்பட்டோர் என்று அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அழைப்பது என்பது ஏற்புடையதாக பொறுத்தமுடையதாக தோன்றவில்லை.

ஒவ்வொரு காலகட்டத்தில் நடந்த பெயர் மாற்றம் இக்காலத்தில் நடந்தே தீரவேண்டும் பூர்வகுடிகளை ஆதிதிராவிடர் என்று அழைத்ததால் தமிழினத்தில் எந்த விதமான மாற்றமும் நடந்துவிடவில்லை தமிழர்கள் வேறு ஆதிதிராவிடர்கள் வேறு என்று பிரிந்து நிற்கின்ற சூழ்நிலையே இங்கு இருக்கின்றன , ஆதிதிராவிடர் என்பதால் பூர்வகுடிகளை மேலும் தனிமைப் படுத்துகிறது,  

ஒடுக்கப்படுகிற பூர்வகுடிகள்தான் ஆதிதமிழர்கள் அல்லது பழந்தமிழர்கள், தொல்தமிழர்கள் என்றும் தமிழினத்தின் மூத்த குடிகள் என்று  தமிழர்க்குரிய தனி வரலாற்றைச் சுட்டுகாட்டி அதன் அடிப்படையிலான அரசியல் சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கு வழியில்லாமல் (பறையர்கள்) பூர்வகுடிகள் ஆதிதிராவிடர்கள் என்ற பெயரை திணித்ததில் எந்த மாற்றமும், சமூக இணக்கமும் உருவாகவில்லை மாறாக திராவிட கட்சிகளின் ஓட்டுவங்கியாக மட்டுமே மாறி நிற்கின்றோம் , சமூக சமத்துவத்திற்கான  போராட்ட களத்தில் நிற்பதை விட வடுக அரசியல் சூழ்சியான திராவிட கட்சியில் (சிந்தனையில்)  சிக்குண்டு கிடக்கின்றோம். 

தனிநபர்களின் பெயர் மாற்ற அவசியம் குறித்து அதன் தேவை குறித்து  அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் பல்வேறு ஆய்வுகளை அரசியல் பண்பாட்டு நடவடிக்கைகளை எடுத்திருப்பதை இந்த நாடு அறியும், நாமும் அறிவோம். 

எழுச்சித்தமிழரின் பெயர் மாற்ற அரசியல் பண்பாட்டு நடவடிக்கையால் பல லட்சம் பேர் தமிழ் பெயர் ஏற்றார்கள் அதைப்போலவே அக்காரணங்களாலுக்காகவே நாம் சாதி பெயரை மாற்ற வேண்டும் ஆதிதிராவிடர்  என்று அழைப்பதை ஒழித்து தொல்தமிழர் என்று அழைக்க பாடுபடவேண்டும். 

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பெயர் மாற்றம் மதம் மாற்றங்கள் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார் என்பதையும் நாம் அறிந்து இருக்கிறோம், இழிவுப் படுத்தும் சாதி பெயரை ஒன்றை மாற்றுவதை விட மதத்தை மாற்றினால் பூர்வகுடிகளின்  பெயரும் மாறிவிடும் என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறியிருக்கிறார். 

சாதி பெயர் மாற்றம் மிக அவசியமான கால கட்டத்தில் நாம் நின்று கொண்டு இருக்கிறோம் இந்த மண்ணின் பூர்வகுடிகள் இன்றைய தமிழினத்தின் மூத்த குடிகள், முன்னோர்கள் என்று வரலாற்று வழியில் பெயரை சூட்ட பாடுபடுவோம் தொல்தமிழர், அல்லது ஆதிதமிழர் என்று பெயர் சூட்ட போராடுவோம், ஆந்திரா,கேரளா, கர்நாடக பூர்வகுடிகளை  ஆதி ஆந்திரர், ஆதிகேரளர், ஆதி மலையாளி என்று அழைப்பது போல தமிழக பூர்வகுடிகளை ஆதி தமிழர்கள் என்று அழைக்கட்டும் நமக்கு ஏன் ஆதிதிராவிடர் பெயர். 

(விவாதத்திற்கு)

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்