Posts

Showing posts from 2021

கால் நூற்றாண்டுகளாக விடுதலைச் சிறுத்தையாய் அண்ணன் திருமாவளவன் அவர்களுடன் நான்

Image
2022 #இனிய_புத்தாண்டு #வாழ்த்துகள்... பலரை அடையாளப்படுத்தியதிலும், பலரை அமைப்பிற்குள் அய்க்கியப்படுத்தியலும்,  பலருக்கு பல தகுதிகளை ஏற்படுத்தியதிலும் எனக்கு பெரும் மகிழ்ச்சி உண்டு, சரியாக  எனது கடமையை செய்துள்ளேன். விடுதலைச்சிறுத்தையாய் நான் உணர்ந்தது எனது 16 வயதில் ,  விடுதலைச் சிறுத்தைகளின் போராட்ட களத்தில் 17 வயதிலிருந்து இருக்கிறேன் இன்று  25 ஆம் ஆண்டில்  நான்.  கடந்த 25 ஆண்டுகளில் நேர்மையுடன் மக்களுக்காக பணியாற்றி இருக்கிறேன், வாழ்ந்திருக்கிறேன்,  ஆதிக்க சக்திகள், சமூக விரோதிகள், கொள்கை பகைவர்கள், போன்ற எவரிடமும்  ஒரு திமிருடனே சுய மரியாதையுடன்   சமரசமின்றி இருந்துள்ளேன்.  என் வாழ்நாளின் பெரும் பகுதி அம்பேத்கர்- திருமா தான் என் உயிர் மூச்சுக் காற்றாக  வாழ்ந்துவிட்டேன், மன நிறைவு அடைகிறேன். நான் கடந்து வந்த பாதையை, எனது உழைப்பை பிறருக்கு சொல்லும் வகையில் மக்கள் மட்டுமே சாட்சியங்களாய் உள்ளார்கள்,    எனது போராட்ட வாழ்வில்  நான் ஒரு முறை கூட எனது புகைப்படத்தை நானே போட்டு போஸ்டர் அடித்தது இல்லை என்று சொன்னால் நீங...

புத்தாண்டு வாழ்த்துகள்

#எதிர்_நடவடிக்கைகளும்,  #நியாயமில்லாத_அதிருப்தியும்,  #என்னை_சீண்டும் #சுடு_சொற்களும்_என்னை_ஒன்றும் #செய்துவிடவில்லை. #அவர்கள்_என்_கொள்கைகளை #தாக்குகிறார்களே_ஒழிய_என்னை #தாக்கவில்லை, அவர்களை நான் நினைத்துக் கூட பாக்க மாட்டேன் ஏனெனில் எனக்கு அண்ணலும், அண்ணன் திருமா கொடுத்த அரசியல் மருந்தும்  இருக்கிறது. நான் யாருடைய அபிப்பிராயமும் பெரிது என்று நினைத்து என்னை தாழ்த்திகொண்டும், பிறர் கூறும் பாராட்டையும், புகழையும், ஆமோதிப்பையும் எதிர்பார்த்து என் பணியை செய்யவில்லை  அப்படி நான் எதிர்பார்த்து பணி செய்வது  பிறரால்  ஆட்டுவிக்கப்படும் பாதையில் பயணிப்பேன் என்பதை நான் அறிவேன்  ஆக� புரட்சியாளர் அம்பேத்கரும், என் அண்ணன் திருமாவின் கொள்கையும் கோட்பாடுமே என்னை வழி நடத்தும்.  என் எண்ணம் எதுவோ அதுவே என் சூழ்நிலை அதற்கான குணநலன்களுடன் நான் எமது போராட்ட பாதையில் செல்கிறேன். சில தோழர்களை  வேண்டுமென்றே எதிர்க்கிறேன் என்று பிறர் நினைக்ககூடும். தோழர்களே உங்களை திருப்திப்படுத்துவதற்காக நான் என் நடைமுறையை மாற்றிக்கொள்ளமுடியும்.  அப்போது நான் உண்மையானவனாக இ...

அன்னை மீனாம்பாள் சிவராஜ் பிறந்தநாள்...

Image
திசம்பர் 26 #அன்னை_மீனாம்பாள் #சிவராஜ்_பிறந்தநாள்..... பறையர் பேரினத்தின் மாபெரும் ஆளுமை , இந்தி எதிர்ப்பு போரை தமிழ்நாட்டில் முதன்முதலில் துவங்கிய வீர பறையர். ஈ.வே.ரா அவர்களுக்கு பெரியார் என்று பட்டம் வழங்கிய பூர்வகுடி அன்னை. இவர் பறையர் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான #வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் #கப்பலோட்டிய_தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான #மதுரைப்பிள்ளையின் பேத்தி. இவர் அக்காலத்தில் ரங்கூனில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிக்குலேசன்வரை படித்தவர். இவர் தனது 16வது வயதில் 1918இல் பட்டியலின இயக்கத் தலைவர்  தந்தை ந. சிவராஜ் பறையனார் அவர்களை மணந்து கொண்டார். அன்னையின் புகழ் வரலாற்றில் நிலைத்து நிற்கும்  அன்னை மீனாம்பாள் பறையர் புகழ் ஓங்குக...  அன்னையின் புகழ் வாழ்க

நல்ல கலாச்சாரம்

நல்ல கலாச்சாரம், பண்பாடு,நாகரீகம், மனித நேயம் வளர்க்காத  எந்த கொள்கையும், தத்துவமும், கோட்பாடும் மனித குலத்திற்கு எதிரானது. நமக்கு தேவை வசதியான வாழ்க்கை  அல்ல, உயர்ந்த கலாச்சார பண்பாட்டு முறையான சமூக அமைப்பு முறை  உருவாக வேண்டும். இந்தியாவில் உயர்ந்த சிறந்த கலாச்சார, பண்பாட்டை உருவாக்க கூடிய ஒரே தத்துவம் அம்பேத்கரிசமே.....

இந்து_மதத்தில்_கடவுள்_கிடையாது - #தந்தை_பெரியார்

Image
#இந்து_மதத்தில்_கடவுள்_கிடையாது - #தந்தை_பெரியார் ___________________ மதம் என்பதற்கு என்ன அடிப்படைத் தத்துவ மென்று பார்க்கும்போது யாரோ ஒருவர் கூறியதை, அது புத்திக்கு ஏற்றதா? இல்லையா? என்று சிந்திக்காமல் அவரிடம் இருக்கும் பக்தியைக் கொண்டு நம்பிவிட வேண்டும் என்பது தான். இதன்றி, கூறியதை ஆராய்ந்து, ஏன்? எப்படி? என்ன? எதற்காக? என்று அதில் கண்டவற்றுக்கு விவரம் கேட்டால் அப்படிக் கேட்பவன் மதத் துரோகி. இதுதான், அதாவது வெறும் நம்பிக்கை வைப்பதுதான் மதம் என்பதன் உட்கருத்து. பவுத்தம் என்பது ஆராய்ந்து புத்திக்குச் சரி என்றுபட்டால் மாத்திரம் ஏற்பது. உதாரணம், புத்தர் கூறியது: எனக்கும் கடவுள் என்பதற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. நான் சாதாரண மனிதன். நான் சொல்பவை என் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு எட்டியவைகளேயாகும். அவற்றை நீங்கள் ஆராய்ந்து பார்த்து உங்களுக்குச் சரியென்று பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; சரியில்லை என்று தோன்றினால் அதை விட்டு விடுங்கள் என்ப தாகும். இன்னமும் விளக்கமாக, நான் கூறுகிறேன் என்பதற்காக நம்பி விடாதே. எதையும் உன் புத்தியைக் கொண்டு ஆராய வேண்டும். இல்லையேல், நீ பகுத்தறிவு கொண்ட ...

பிஜேபி_ஆர்எஸ்எஸ்_மக்கள்_விரோத #கொள்கைக்கு_எதிரான_போர்

#பிஜேபி_ஆர்எஸ்எஸ்_மக்கள்_விரோத #கொள்கைக்கு_எதிரான_போர்  இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களில் தாய் மொழியில் வழக்காடும் உரிமையை கேட்கும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை தினிக்க வேண்டும் என்பதுதான் பிஜேபி நிலைப்பாடு  இந்தியாவில் வாழும் ஒவ்வொரு தேசிய இனத்தின் மொழியையும், அவர்களின் அனைத்து உரிமைகளையும் காக்க வேண்டும் என்று போராடுபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒவ்வொரு தேசிய இனத்தின் தாய் மொழியை அழித்து, இந்தி மொழியை மட்டுமே வாழ வைக்க வேண்டும் என்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது பிஜேபி  இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் மதத்தால் சாதியால் பிரித்து தொடர்ந்து மக்களிடையே மோதல் உருவாக்கி தனது கொள்கையை நிறுவுவது பிஜேபி  மக்களை பிளக்கும் அனைத்து காரணிகளையும் ஒழிக்க வேண்டும் என்று போராடுபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்  மொழி,இனம் ,சாதி  இப்படியான எந்த அடையாள அரசியலையும் விரும்பாதவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் மாறாக ஒடுக்குமுறை எங்கே இருந்தாலும் அங்கே போராடுபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் ஜெய்பீம்

சனாதன சமூக அமைப்பு

#மீள்பதிவேற்றம் பிற்போக்கான பண்பாட்டு பழக்க வழக்கங்கள்,மூட நம்பிக்கையில்  அறிவியல் அற்ற தன்மையிலான மத நம்பிக்கையில், புராணங்கள், கற்பனை கதைகளை நம்பி, சனாதனத்தில்  திளைத்து போய் வாழ்கின்ற சமூக அமைப்பில் வாழ்வாதாரத்திற்காக  மனப்பாட கல்வி பயின்று நல்ல வேலைக்காக, போட்டி தேர்வு எழுதுவதற்காக மனப்பாடம் செய்து  தேர்ச்சி பெற்று அதிகாரியாக உருவாகியிருப்பவன், ஆய்வு பட்டங்கள் பெற்று இருப்பவன் ,அறிவியலை, மருத்துவத்தை, தொழிநுட்பத்தை, விஞ்ஞானத்தை மனப்பாடம் முறையில் படித்தவன் ஒன்றுக்கும் உதவாதவன் தான், இவனால் இந்த நாட்டை எந்த துறையிலும் மேம்படுத்த முடியாது வரி மட்டுமே வசூல் செய்து அரசை , அரசாங்கத்தை நடத்தலாம். இந்த அறிவு கெட்ட முண்டங்கள் தான் நெருப்பில் இருந்து பிறந்தேன் என்கிறது,  தலையில் இருந்து பிறந்தவன் என்று நம்புகிறது, மார்பின் வழியே வந்தவன் என்று பீத்தி கொள்கிறது, கால் பாதத்தில் இருந்தும் பிறந்ததாக சொல்கிறது. மனிதனுக்கு மனிதன்  வேறுபாடு பார்க்கிற பண்பாட்டு பழக்க வழக்கங்கள் இருக்கும் போது இவன் எப்படி மக்களுக்காக, மேம்பட்ட ஓர் நாட்டை கட்டி எழுப்ப முடியும். விஞ்ஞானம், ...

மீள்_பதிவு

Image
#மீள்_பதிவு   ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட பிரச்சினை, தனிப்பட்ட கோபம், தனிப்பட்ட கருத்துக்களால், தனிப்பட்ட வெறுப்பால் ஓர் மாபெரும் தலைமையை, மாபெரும் இயக்கத்தை விமர்சனத்திற்கும், பழி சொல்லிர்க்கும், தேவையில்லாத விரோதம் உருவாக்குவதற்கும் வழி வகுக்குகிறது..... தலைமையை நேசிப்பது என்பதிலும் கொள்கை நேசிப்பு என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும் சம அளவில் இருக்கவேண்டும். உங்கள் சொந்த வெறுப்புக்கும், பகைக்கும் கட்சியை பயன்படுத்த வேண்டாம்  அடுத்தடுத்த தலைமுறைக்கும் கட்சி சென்றாக வேண்டும்.  மக்களுக்குகான மாபெரும் இயக்கம் இது தனிப்பட்ட எவருக்கும் சொந்தம் கிடையாது. தினமும் முகநூலில் சகோதரத்துத்துவத்தை உடைக்கிற கருத்து மட்டுமே சில தற்குறிகளால் கட்டமைக்கப்படுகிறது, சாதிய மதவாத சக்திகளை எதிர்ப்பதைவிட சொந்த சமூகத்தவரை எதிர்த்து செய்கிற வேலையே பெரிதாக இருக்கிறது,  கொள்கை அடிப்படையில் வருடத்திற்கு 10 இளைஞர்களை அரசியல் படுத்தி கட்சிக்கு அழைத்துவரும் வேலை செய்தலே போதும்  அதை விடுத்து உட்கட்சி முரண்பாடு, பொறாமை அரசியல், நல்லவர்களை பிரிப்பது , பழி சொல்வது, ஆதரவு சக்திகளை எ...

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

Image
*தமிழக அரசே* ! *காவல் துறையே* !    *விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்* மற்றும் *SC/ST*   *இளைஞர்களை* *பல ஆண்டுகளாக ரவுடி பட்டியலில்* *வைத்திருப்பதை*   *ஆய்வு செய்து* *நடவடிக்கை எடு* ….     ஒரு வரலாற்று தாள் ( History sheet ) அல்லது ரவுடி தாள் ( Rowdy sheet) ஒன்றினை ஒரு நபர் பெயரில் ஏற்படுத்தப்பட்டு அந்த நபர் மீது  வரலாற்று தாள் ஏற்படுத்தப்பட்ட அல்லது ஒரு ரவுடி என்ற முத்திரை  குத்தப்படுமேயானால் அது அந்த நபர் மீது ஒரு அழியாத களங்கத்தை  ஏற்படுத்திவிடும். அதோடு அவருடைய அடிப்படை உரிமைகளை  பாதிப்பதாகவும் அமைந்துவிடும். குறிப்பாக இந்திய அரசியலமைப்பு  சட்டம் கட்டளை  (Articles) 21 மற்றும் 19(1)-ல் வழங்கப்பட்டுள்ள  சுதந்திரமாக வாழும் உரிமையை பறிப்பதாகவும் அமைந்துவிடும்.  அத்தகையை அடிப்படை உரிமையை சரியான காரணங்களின்  அடிப்படையில்தான் கட்டுப்படுத்த முடியும். அந்த உரிமையை எந்த ஒரு  முறையிலும் அதிகாரம் பெற்ற ஒருவரின் உத்தரவினால் சரியான காரணங்கள் இல்லாமல் பறிக்கபடுமேயானால் அந்த ...

புரட்சியாளர் அம்பேத்கர்

#புரட்சியாளர்_அம்பேத்கர்  #என்று_அனைவரும்_அழைப்பதற்கு #காரணம்  #எழுச்சித்தமிழர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை டாக்டர் என்றும் பாபா சாகிப் என்றும் சட்டமேதை என்றும் அறிஞர் என்றும் அண்ணல் என்றும்   பல பெயர்களை கொண்டு மக்களும், தலைவர்களும் அழைத்தார்கள் ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் என்று #எழுச்சித்தமிழர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள்  அழைத்து புரட்சி செய்தார்,  புரட்சியாளர் அம்பேத்கர் என்று அச்சிட்டு, பரப்பி, மேடைக்கு மேடை முழங்கி இன்று அரசு மற்றும் அரசியல்வாதிகள் முதல் பொது மக்கள் வரை அனைவரையும் புரட்சியாளர் அம்பேத்கர் என்று முழங்க வைத்துள்ளார்.  பல தளங்களில் பல நுட்பமான வேலையை செய்து பல மாற்றங்களை நிகழ்த்தி இருக்கிறார் எழுச்சித்தமிழர், அவரின் சாதனைகளை பேசுவதற்கு எழுதுவதற்கு, பரப்புவதற்கு ஆட்கள் குறைவு, இளைய தலைமுறையே விளம்பரம், கவர்ச்சி, பொய்களில் சிக்காமல் கொள்கை, தத்துவம் சார்ந்து களப்பணி செய்யுங்கள்...

சனாதன வாதிகள் இடது சாரிகள் கூடாரத்தில் . (2018 பதிவு)

#சனாதன_வாதிகள்  #இடது_சாரிகள்_கூடாரத்தில் கொண்ட கொள்கையில் உறுதியாக கடைசிவரை அதன் இலக்கை நோக்கி நகர வேண்டும் கொள்கை எதிரி நமக்கு தெரியும்  ஆனால் கூடவே இருந்து கொண்டு நமது ஒற்றுமையை , கொள்கையை சிதைப்பவனை நாம் அடையாளம் காணவேண்டிய நேரம் இது அவர்களை அடையாளம் காண்பது பெரும் கடினம் அவர்கள் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் முகமூடி அணிந்திருப்பார்கள். வலது சாரிகள் திட்டமிட்டு இடது சாரிகளின் அரசியலை தலைமை தாங்க வைத்து அதனை எளிதில் அழிக்க திட்ட மிட்டு வேலை செய்து வருகிறார்கள். சாதி வெறியர்கள், மத வெறியர்கள் இன வெறியர்கள், சாதிய அமைப்பை  பாதுகாக்க விரும்புவர்கள் முதலாளித்துவ , கார்பரேட் நிறுவன  கைக் கூலிகள், சமூக மாற்றத்திற்கு போராடுகிற அனைத்து அமைப்புகளுக்குள்ளும் ஊடுருவி  சிதைப்பதற்கு வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களே வழிநடத்தும் பொறுப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள்  இன்றைய புதிய சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது அவர்களை சமாளிக்க புதிய பலத்துடன் மீண்டும் ஒரு யுத்தம் முதலில் இருந்து தொடங்குவதே சரியானதாக இருக்கும்.  People's Advocate As...

காவிரி நதிநீர் பிரச்சினை 2019 fb பதிவு

Image
2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக்கண்டத்தில்  முதல் நதிநீர் பிரச்சினையை புத்தர் தீர்த்து வைத்தார், அதனை தொடர்ந்து அவரின் சீடர், புத்தரின்  அரசியல் வாரிசு, டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள் 2019 இல் தமிழ்நாடு- கர்நாடக மக்களுக்கான தண்ணீர் பிரச்சினை தீர்க்க நாடாளுமன்றத்தின் மூலம் முயற்சிக்கிறார். ________________________________ ரோகிணி ஆற்றின் தண்ணீரைத் கோலியர் என்ற இனத்தினரும், சாக்கியர் என்ற இனத்தினரும் அதை சமத்துவமாகப் பயன்படுத்தி வந்தனர். புத்தர் சாக்கிய இனத்தைச் சேர்ந்தவர். கோலியர்களும் புத்தர்களின் சொந்தக்காரர்கள்தான், ஒரு முறை கடும் வறட்சியும் பஞ்சமும் வந்து சேர்ந்தது. நதியின் நீர்வரத்தும் பாதிக்கப்பட்டது. கிடைக்கும் சொற்ப நீரை யார் பயன்படுத்திக் கொள்வது என்பதில் இரண்டு இனத்தினருக்கும் சண்டை மூண்டது.  கோலியர்களும், சாக்கியர்களும் மோதி கொள்கிற சூழ்நிலை தெரிந்து  பிரச்சினையைக் கேள்விப்பட்ட கௌதம புத்தர் போரைத் தடுத்து நிறுத்த விரும்பினார். அவர் அவசரமாக அப்பகுதிக்கு வந்து சேர்ந்து இரு தரப்பினருக்கும் பிரச்சினையை தீர்த்து வைத்தார். புத்தரை தொடர்ந்து அண...

சுய_உரையாடலுக்கு

Image
#சுய_உரையாடலுக்கு திரட்டப்பட்ட மக்களை ஓட்டாக மாற்றுவதும், ஒட்டுமொத்த மக்களை அமைப்பாக  திரட்டுவதுமே  மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க பணி. இருப்பதை தக்க வைப்பதும் ஒருவகை நிர்வாக ஆளுமைதான்,  இருப்பதை விட அதிகப்படியாக உருவாக்குவது என்பது மாபெரும்  நிர்வாக ஆளுமை. தன்னை மட்டுமே முன்னிறுத்தி கொண்டு  குடும்பத்தை கூட அரசியல் படுத்தமுடியாதவர்கள் ஒரு ஆளுமை தான்,  குடும்பத்தை அரசியல் படுத்தி , மற்றவர்களையும் அரசியல் படுத்தி அமைப்பாய் மாற்றுபவர்களே மாபெரும் ஆளுமை.  உலகத்தில்  பெரிய சந்தை  இந்தியா என்றால் இந்தியாவில் பெரிய சந்தை சேரி மக்களே, சேரி மக்களை சந்தை படுத்துகின்ற கலையை, யுத்தியை இந்துத்துவ சாதிய முதலாளித்துவ கும்பல் நுட்பமாக கற்று வைத்துள்ளனர்.     அதே வடிவத்தில் அரசியல் களத்தில் சேரி மக்களின் ஓட்டுகளை கொள்ளை அடிக்கிறார்கள். சேரி மக்கள் அரசியல் அதிகாரத்திற்கே வர விடாமல் பல்வேறு நுட்ப அரசியலை நகர்த்துகிறார்கள் , சேரி மக்கள் அரசியல் சக்தியாய் எழுச்சி பெறாமல் சிதைக்கிறார்கள் இப்படி பல யுத்திகளை இந்துத்துவ சாதிய சனாதன சக்திகள் பல வகைய...
Image
சேரி தனியாக இல்லை, சேரியை யாரும் ஒதுக்கி வைக்க வில்லை சேரியே முதல் மனித நாகரிக குடியிருப்பு, ஆதி மனிதன் கட்டமைத்த மக்கள் பாதுகாப்பாக சேர்ந்து வாழ்கிற பகுதி சேரி, மீதி உள்ள இடங்களில் பிற்பாடு குடியானவர் பகுதிதான் குடியானவர்கள் தெரு.  மு.ஞா.

முனீஸ்வரன்

பஞ்சாத்தா, எனது பாட்டி வீட்டு குல தெய்வம், முனீஸ்வரன் நம்ம சேரி மக்கள் எல்லோரும் வணங்குவது. இந்த சாமியை எந்த இந்து பிராமணன் வணங்குகிறார். சேரி பண்பாடு வேறு,  இந்து பிராமண பண்பாடு வேறு

சேரி பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் மீட்போம், சீரமைப்போம்.

எங்களது குடும்ப வழக்கப்படி  மணமகளுக்கு தாலி கட்டும் போது வெள்ளை புடவைதான் கட்டி இருக்கனும் அந்த புடவையை மஞ்சளில் நனைத்து இருப்பாங்க, இப்படித்தான் எனது அண்ணனுக்கு திருமணம் நடந்தது. எனக்கு திருமணம் நடக்கும் போது எனது மனைவியின் குடும்ப வழக்கபடி கூரை புடவையும் எடுத்தோம் , எங்கள் வழக்கப்படி வெள்ளை புடவையும் எடுத்தோம் இரண்டுமே நடக்காமல் பட்டு புடவையில்  தாலி கட்டியாச்சி. ஆனால் இரண்டு சேலையும் வீட்டில் வந்து கட்டி சாமி கும்பிட்டாச்சு. பொதுவாக எங்கள் உறவினர்கள் வணங்குவது பெரியாயி சாமி,  எங்கள் குல சாமி பெயர் பார்பாங்குலத்து அம்மன் , என்னடா பார்ப்பான் குலத்து அம்மனை பறையர் குடும்பம் கும்பிடனும் என்று எனக்குள்ளே நான் சிறுவயதில் சிந்தித்தது உண்டு , நான் விபரம் தெரிந்து எனது அப்பா கிட்ட கேட்கும் போது பார்ப்பானும் பரையர்  எல்லாம் ஒன்று,  பிராமணர் என்பவர் தான் வேற என்றார் அப்போது விளையாட்டாக எடுத்து சிந்தித்தேன், இப்போது சில குறிப்புகளை தேடி, தேடி சில ஆய்வுகளை படிக்கும் போதுதான் புரிகிறது.  பார்ப்பான், அய்யர், #அந்தணர் , வள்ளுவர் என்ற பெயருக்கு எல்லாம் சொந்தக் காரன் #மறை...

சொல்லு ஒன்றும் செயல் ஒன்றும் வெவ்வேறாக இருக்கக் கூடாது....

Image
.வழக்கறிஞர் #அறிவுடைநம்பி  அவர்ளின் பதிவு கடலூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர்  சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றும்  இருக்க கூடாது, இரண்டும் ஒன்றாகவே இருக்க வேண்டும். வலிகளை சக்தியாக மாற்ற கற்று கொண்டவன் முன்பு  சதிகள்,ஓரங்கட்டுதல் நடவடிக்கைகள் ஒன்றும் வெற்றி பெறாது. புறக்கணிப்பு என்பது ஒரு தளத்தில் இருந்து அப்புறப்படுத்த எடுக்கும் கோழைகளின் நடவடிக்கை. ஒருவரின் சிறப்பு மிக்க பணியை பாராட்ட மனம் இல்லாதவர் ஆயுள் காலம் முழுதும் போலி மனிதர்களையே நம்பி பயணம் செய்பவர்களாக இருப்பார்கள். சுயநல விரும்பிகள் முன்னேற்றம் அடைவது குறித்து கவலை கொள்ளாமல் பொது நல விரும்பிகளின் முன்னேற்றத்தை தடை செய்யும் பணி செய்பவன் மொத்த மனித சமூகத்தையும் சுரண்ட  அல்லது தன் உள் வைத்திருக்கும் சனநாயக விரோத திட்டத்தை நிறைவேற்ற பணி செய்பவன். திட்டமிட்ட பொய்,  அவதூறுகளுக்கு பதில் அளிப்பது வீண் செயல். பொய் எப்போதும் தோற்கும்.

மூணார் தோட்ட தொழிலாளர் மக்களுக்கு எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார். 22.08.2020 ஆம் ஆண்டு fb பதிவு.

Image
தமிழ்நாட்டின் பூர்வகுடிகள் இந்திய நிலப்பரப்பில் உள்ள  தேயிலை தோட்டங்களில் , கடல் கடந்து பிழைக்க சென்ற நாடுகளில் உள்ள  தேயிலை தோட்டங்களில் இயற்கை பேரிடரால், சுரண்டல் கொடுமையால்,   பசி பட்டினியால், இனவெறியால்,  ஏன் சாதிய கொடுமையால், அரச பயங்கரவாதத்தால் செத்து மடிந்தவர்களின் எண்ணிக்கை என்ன படவே இல்லை, வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை, அவர்களின் வாழ்வும் வரலாறும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் இருந்து பிழைக்க சென்ற தோட்ட தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமையை, துயரத்தை விட உலகத்தில் எந்த தொழிலாளர்களும்  அனுபவித்து இருக்க மாட்டார்கள். எவரும் இவர்களை ஆதரிக்கவும் மாட்டார்கள்.  ஏனெனில் சாதியும் இருக்கிறது. இன்று மூணார் தோட்ட தொழிலாளர் மக்களுக்கு எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்கள்  நேரில்  சென்று ஆறுதல் கூறினார்.

சேரி பண்பாடு தனித்துவமானது

Image
#சேரி_பண்பாடு_வேறு,  இந்து பிராமணிய பண்பாடு வேறு, சேரி மக்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை, வாழ்வின் பண்பாடு அனைத்தும் இந்து பண்பாடு அல்ல, தனித்த அடையாளம் கொண்ட சேரி பண்பாடு, தனித்த  பண்பாட்டு நாகரிகம் உடையவர்கள் சேரி மக்கள்.  இதைபோட்டு சாதியவாதிகள் குழப்பிக் கொண்டு சேரி  பண்பாட்டு பழக்க வழக்கங்களை கொச்சை படுத்த வேண்டாம்.  நீங்கள் திரௌபதி அம்மனை வணங்குவதற்கும், நாங்கள் மாரியம்மனை  வழிபடுவதற்கும் காரணம் வேறு,  நீங்கள் ராமனை வழிபடுவதற்கும் நாங்கள் முனீஸ்வரனை வணங்குவதற்கும் வரலாற்று பின்னணி வேறு ,   நீங்கள்  கடவுள் மறுப்பு அரசியலை மட்டுமே செய்வதற்கும் நாங்கள் மனித சமத்துவத்தை அடைய போராடுவதற்கும்  உள்ள வேறுபாடு நூறு சதவீதம் முரண்பட்டது.  சாதி வெறியர்கள், மத வெறியர்கள், சமூக துரோகிகள் எப்போதும் விடுதலைச்சிறுத்தைகள் மீது  அவதூறு பரப்புவதே வேலையாக உள்ளனர் பெரியார் செய்ததைத்தான் செய்ய வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை, பெரியாரிடம் கற்க, கற்பிக்க  நிறைய இருக்கிறது . ஆய்வு , மறு ஆய்வு என்பதே சரி. நீங்கள்...

ஆங்கில வழி கல்வி அவசியம்

Fb எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. ஆங்கில வழி கல்வி பள்ளியை  அரசே ஏற்படுத்துவதை  தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் எதிர்ப்பது ஆங்கிலவழி பள்ளி நடத்தும் முதலாளிகளுக்கு நட்டம் எற்படும் என்பதாலா... ? வணிக மொழி ஆங்கிலம் ஏழை மக்கள் கற்க கூடாது என்பதாலா...? ஏன் அரசு பள்ளிகளில் பயிலும்  ஏழை மாணவர்கள்  ஆங்கிலத்தை கற்கட்டுமே          அன்னை தமிழை பாதுகாக்க, வளர்க்க, என்ன வழியே அதை செய்யலாமே .   ஆனால் எந்த மொழி வழியில் படித்தாலும் தமிழ்நாட்டில்  தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் படிக்க வேண்டும் என்கிற நிலையை உருவாக்கிட வழி செய்வதை விட்டுவிட்டு, மாறாக எல்லா உபதேசமும்  சேரிக்கு மட்டுமே சொல்லப்படுகிறது. தமிழ் மொழிக் காப்பு, குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் உட்பட அனைத்து பிரச்சாரமும் சேரிக்காக மட்டுமே செய்யபடுகிறது,  குடும்ப கட்டுப்பாடு சேரி சமூகம் மட்டுமே செய்து கொள்கிறார்கள், தமிழ் வழியில் படிப்பதும் சேரி மாணவர்களே............ ஆங்கில வழி கல்வி அவசியத்தை உணர்வோம் அன்னைத் தமிழை காப்போம்!  அனைத்து மொழிகளையும் கற்போம்!

சி.பா.ஆதித்தனாரின் அருமையான ஆறு பதில்கள்

1. #கேள்வி: #திராவிடர்கள்_யார்? #பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே திராவிடர்கள். 2.#கேள்வி: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா? #பதில்: பொருந்தாது. 1875ஆம் ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது.  அந்த ஆண்டில் கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் தான் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த 'திராவிடர்' என்ற சொல்லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்து அதன்படியும் எழுதினார். அவர் கையாண்டது தவறான கருத்து. ஏனென்றால் முன் காலத்தில் இருந்து மூன்று தெலுங்கு நாடுகளைத் தான் திரிவடுகம் என்றும், திராவிடம் என்றும் வடவர்கள் சொல்லி வந்தார்கள். திரிவடுகர் நாட்டிற்குத் தெற்கே வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் இந்தச் சொல் பொருந்தும் என்று கால்டுவெல் எழுதியது தவறான கண்ணோட்டம். அவரைப் பின்பற்றித் தமிழர்கள் என்று குறிப்பிடதற்குத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதும் தவறாகும். தமி...

திராவிட கட்சிகளே அப்படித்தான்...

2020 fb.பதிவு #தயாநிதி_என்ன_திராவிட_கட்சிகளே #அப்படித்தான் நீதிகட்சியில் படித்த பட்டதாரிகள்  மாவீரன் இரட்டைமலை சீனிவாசன், பெருந்தலைவர்  எம்.சி.ராஜா, என்.சிவராசு  முனுசாமி பிள்ளை, தர்மலிங்கம் பிள்ளை முதலான தொல் தமிழர்களின் தலைவர்கள் பலர்  முன்னணியில் இருந்தனர்  குறிப்பாக மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1893 ஆம் ஆண்டிலேயே 'பறையன்"  என்னும் ஏட்டை நடத்த தொடங்கியவர்  1904ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கா சென்று நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார்,  1928 ஆம் ஆண்டில் சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பை நிறுவினார் ,  1923  ஆம் ஆண்டிலிருந்து 1938 வரை தொடர்ந்து சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்,   1930 ஆம் ஆண்டில் ராவ்பகதூர் பட்டம் பெற்றார்,  1930 நவம்பரில் லண்டனில் நடந்த முதல் வட்ட மேசை மாநாட்டில் பங்கு பெற்றார் அதனை தொடர்ந்து 1932 ஆண்டில் தாழ்த்தப்பட்டோருக்கு தனி தொகுதி வழங்கக்கூடாது என சாகும்வரை காந்தி உண்ணா நோன்பு இருந்தார் காந்தியின் உயிரைக் காப்பாற்றி பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார் காந்திக்கு உயிர் பிச்ச...

பெரியாரை ஏற்பவர்கள்

பெரியாரை ஏற்பவர்கள் டாக்டர் அம்பேத்கரை ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, டாக்டர் அம்பேத்கர் அவர்களை ஏற்பவர்கள் பெரியாரை ஏற்றுதான் ஆகவேண்டும் என்ற அவசியம் கிடையாது, பகை முரண்பாடு எது நட்பு முரண்பாடு எது என்ற அணுகுமுறை மூலம் சமூக மாற்ற போராட்டத்தில் நம்முடன் பிறரை இணைப்பது.. நான் புரட்சியாளர் அம்பேத்கரை எற்பதால் பெரியாரை ஏற்றுதான் ஆகவேண்டும் என்று அட்வைஸ் செய்வது என்பது பாசிசம். உலகத்தில் பல்வேறு நாடுகளில் மக்களுக்காக ஏதேனும் ஒர் அடிப்படையில் அதாவது தேசிய இன விடுதலைக்கு, அடிமை முறை ஒழிப்புக்கு, வர்க்க விடுதலைக்கு,  போராடிய தலைவர்களை எல்லாம்  தலைவர்களாக ஏற்றால் தான் நாம் முற்போக்கு சக்தி என்றும், புரட்சிகர வாதி என்றும் பிறர் கருதுவார்கள் என்பது பயித்தியகாரத்தனம்.

அறிவுடைநம்பி

Image
 

அறிவுடைநம்பி

Image
 

Arivudainambi

Image
 

சூத்திரர் அரசியலை நம்ப கூடாது

பிராமணர்களின் அளவிற்கு சமூக அந்தஸ்தும், பொருளாதார நிலையையும், அதிகாரத்தையும் அடைவதுதான்  சூத்திர அரசியல் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் மற்றும் சூத்திரர்களுக்கும் ஒரே அஜந்தா.  சூத்திரர்கள் அதிகாரத்தை அடைய பிராமணியத்தை, இந்துத்வத்தை, முதாளித்துத்வத்தை எதிர்ப்பார்கள் மற்றும் ஆதரித்தும் நிற்பார்கள். பொதுவுடைமை, சமத்துவமும் பேசுவார்கள்  கடுமையாக அதனை எதிர்க்கவும் செய்வார்கள், நேரடியாக இந்துத்துவத்தை ஆதரித்தும் கடுமையாக உழைப்பார்கள். மொழி, இனம், சுயமரியாதை, பகுத்தறிவு , சமூக நீதி என்று சொல்லி சூத்திரர்களின் முன்னேற்றத்திற்கு எதையும் செய்வார்கள். சூத்திரர்களின் அரசியல் பஞ்மர்களுக்கானது (தொல் தமிழர்களுக்கு) என்று மொழியை வைத்து இனத்தை வைத்து மயங்கி போகிறோம். எப்படி பார்த்தாலும் ஒன்றாகத்தான் உள்ளார்கள். பட்டியல் பூர்வ குடிகள் தான் அரசியல் அதிகாரத்தை பற்றி கவலை படாமல் சூழ்ச்சியால் சிதைந்து நிற்கிறோம்.

இந்து மதமே மனநோயாளிகளின் கூடாரம். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

#இந்து_மதமே_மனநோயாளிகளின் #கூடாரம். டாக்டர்  பி.ஆர்.அம்பேத்கர் _________ மத்திய மாநில அரசே  #சாதி_இந்து  #மனநோயாளிகளுக்கு #சிகிச்சை_கொடு  தமிழ்நாட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை அவமதிப்பு செய்பவனை காவல்துறை கைது செய்யும் போதெல்லாம்,  குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் அவர்கள் மனநோயாளி என்று காவல்துறை அறிவிக்கும்,   இப்போது நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று ,  சாதி தீண்டாமை, கடைபிடிக்கும் அல்லது இந்துமதத்தை ஏற்று நிற்கும்  சாதி இந்துக்கள் அனைவரும் சமூகத்தில் மனநோயாளியாகத்தான் வாழ முடியும் என்று  புரட்சியாளர் அம்பேத்கர் கூறியிருக்கிறார்  அதன் படியே  அரசு ஒட்டுமொத்த சாதி இந்துக்களை மனநோயாளி என்று அறிவிப்பதே சரியானது , நாங்கள் ஏற்கிறோம் இவர்கள் மனநோயாளிகள் தான் என்று, சாதி வெறி பிடித்த அனைவரும் மனநோயாளிகளே அவர்களுக்கு உரிய சிகிச்சை கொடு. அறிவியலுக்கு முரண்பாடான வாழ்க்கை வாழக்கூடிய இந்த வகை மனிதர்கள் மனநோயாளி தான் அக்கினி சட்டியில் பிறேந்தேன் நெருப்பில் இருந்து தோன்றியவர்கள் என்று சொல்லி கொண்டு தலையில் பிறேந்தேன் , தோளில் பிறேந...

இந்திரர்கள் நாம்தான்

ஞாயிற்று வழிபாடு மேலோங்கியிருந்த தொன்மையான அக்காலத்தில் தமிழுக்கு இலக்கணம்  உருவானது.     #ஐந்திரம்* என்ற மறைந்த தமிழ் இலக்கண நூலை இயற்றியவர் #இந்திரன்தானாம்* அதனால் தான் பிற்காலத்து மொழியான சங்கத மொழியில் #இந்திர_வியாகரணம்* என்றனர்  *இந்திரன்* வீரத்தைக் குறிக்கும் தெய்வமாம் விண்ணையே ஆள்பவனாம், வானிலுள்ள தேவர்களுக்கெல்லாம் தலைவனாம். #ரிக்வேதத்தில் வருகின்ற 33 தேவர்களுக்கும் இந்திரனே தலைவனாம் , இதனால் 33 தெய்வங்களின் பெயர்கள் ரிக்வேதத்தில் இருக்கவேண்டும் ஆனால் அவ்வாறு இல்லை அவற்றில் முப்பத்தி ஒரு (31) தேவர்களின் பெயர்களை மட்டும் இருக்கின்றன  *இந்திரன்* ஆரியர்களின் தெய்வம் அல்ல *இந்திரன் தமிழரின்* தெய்வம் , 12 உயிரெழுத்துக்களும் 18 மெய்யெழுத்துக்களும் ஒரு ஆயுத எழுத்தும், குற்றியலிகரம், குற்றியலுகரம் என்ற தமிழ் எழுத்துக்கள் முப்பத்தி மூன்றையும் (33) தெய்வங்களாக்கி அவற்றி்ற்கு தலைவனாக இந்திரன் கற்பிக்கப்பட்டான். இதனால் வந்த கதையே இந்திரனை  33 தேவர்களின் தலைவானாக்கிய கதையாகும்.  #ஐந்திரம் என்ற இலக்கண நூலும் தமிழுக்கு மொத்தம் 33 எழுத்துக்கள் என்று வரையற...

நில அளவைகள்

Image
நில அளவைகள்... நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது  மனையையோ அளக்க  முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை... குறிப்பாக நிலவரைபடம்    FMB பற்றி தெளிவாக  நமக்குத் தெரிவதில்லை  அது நமக்கு புரியாத  ஒரு புதிராகவே இருக்கிறது. எனவே ஒரு நிலத்தை எப்படி  அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்  FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.. சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் : 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும். 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE). 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள். 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும். 5. இரண்ட...

சோழர்கள் #பறையர்களே

#சோழர்கள் #பறையர்களே  ________________ இராஜபறகேசரி' பட்டம் சுமந்து இறை தொண்டனாக  வலம் வந்தவர் பறகேசரி கண்டராதித்த விழுப்பறைய சோழன். கண்டராதித்தன் என்றும், விழுப்பறையர் ஞான கண்டாரதித்தர்  என்றும் அழைக்கப்பட்ட  இவர், சோழமண்டல சக்கரவர்த்தியாக அரசாண்ட காலம் கி.பி. 953 முதல் 957 வரை.  சைவ சமயத்தின் எல்லையில்லா பக்தி கொண்டவர். பறகேசரி  *கண்டராதித்த விழுப்பறையர்* தனது பிறப்பிடமான கண்டராதித்த சோழபுரத்தில் ( *கண்டாச்சிபுரம்* ) தனது உறவினர் குடும்பத்தில் *வீரநாராயிணி* தேவியார் திருமணம் செய்தார் அவர் பட்டத்திற்கு  வருமுன்னரே முதல் மனைவி வீரநாராயணி இறந்துவிட்டதால் இறப்பிற்கு பிறகு தனது விழுப்பறையர் குலத்தில் பெண் தேடாமல் இரண்டாவது மனைவி செம்பியன் மாதேவியாரை *பறகேசரி கண்டராதித்தன்* ,  பட்டத்தரசியாக்கினார். *பறகேசரி கண்டராதித்த விழுப்பறைய சோழன்* சில ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்தார். திடீரென்று ஏற்பட்ட  உடல்நலக் குறைவினால் இயற்கை அடைந்தார் பின்னர் *செம்பியன் மாதேவியார்* தனது வாழ்நாள் முழுவதும் தெய்வத் திருப்பணிகள் பல செய்து சோழர்கள்  வரலாற்றில் தனக்கென...

காசநோய் ஒழிந்து விட்டதா?

#இந்தியாவில்_காசநோய் #ஒழிந்துவிட்டது #என்ற #பொய்_தோற்றம் #உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் ஆண்டுக்கு 4000 பேர் இந்தியாவில் இறக்கிறார்கள் , ஒரு நாளைக்கு 1400 பேர் காசநோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறார்கள்.இந்நோய் இந்தியாவின் பெரும் அளவில் நிறைந்துள்ளது என்கிறது ஆய்வுகள்.  #டியூபர்செல்_பாசிலஸ் எனும் கிருமியால் வரும் நோயின் பெயர் #டியூபர்_குளோசிஸ்’. இதனை சுருக்கி #டிபி’ என்று அழைக்கிறோம்.  இந்நோய் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதால்தான் வருகிறது. இது, நெஞ்சுப் பகுதி முழுவதும் சளி சேர்ந்து, பாதிக்கப்பட்டோரின் உடம்பை உருக்கிவிடும் பின்னர் உயிரை குடித்திவிடும். இந்தியாவில் காசநோயால் 24 சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டிபி நோயையே ஒழிக்க முடியவில்லை கோவிட்19  வைரஸை எப்படி ஒழிப்பார்கள், இந்திய அரசு செய்யவேண்டியது, அல்லது நாம் இந்திய மக்கள் அனைவரும் போராடி பெற வேண்டியது #மருத்துவம், #கல்வி அரசே கொடுக்க வேண்டும்,  இந்தியாவில் வறுமையில் காரணமாக ஊட்ட சத்து குறைபாடு இருக்கிறது எனவே வறுமை ஒழிக்க ...

மகளிர் விடுதலை வெல்லட்டும்

Image
உலகத்தில் இருக்கிற எல்லா பிரச்சினைகளும் (behaviours) பிகேவியர் காரணங்களால் தான் அதற்கு நாம் கொடுக்கிற பெயர் மதம், சாதி, இனம், மொழி, நிறம், ஆண்,பெண் என்று ஏழை,பணக்காரன் போன்ற பல எண்ணற்ற வடிவங்கள், இத்தகைய வேறுபாடுகள், ஆதிக்கங்கள், பல்வேறு பிரச்சனைகள் ஒழிய வேண்டுமெனில் நடத்தை பழக்கவழக்கங்கள் மாற வேண்டும் மனிதனிடம் மொத்தமாக behaviours மாற வேண்டும்.  இத்தகைய பிரச்சினைகளை எல்லாம் நுட்பமாக ஆராயாமல்  அதற்கான அரசியல் கலாச்சார நடவடிக்கைகள் எடுக்காமல் வெறுமன மேலோட்டமாக ஆணாதிக்கம் ,சாதி வேறுபாடு, போன்ற தவறான நடத்தைகள் ஒழிய வேண்டுமென சொல்வது ,செயல்படுவது ஒரு நோயாளிக்கு தவறான சிகிச்சை கொடுப்பதற்கு ஒப்பாக்கும். கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் அனைத்தும் வணிக நடத்தியல் தொடர்பாகவே உலகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எண்ணங்கள், சிந்தனைகள், கலாச்சார பழக்க வழக்கங்கள், மாறவேண்டும் அப்போது தான் நடத்தைகள் மாறும். அனைத்து பிரச்சினைகளும் பிகேவியர் தொடர்பானது நல்ல சிந்தனைகளை வளர்ப்போம்.   #மகளிர்_விடுதலை_வெல்லட்டும் இவண்:  வழக்கறிஞர்  #ஞானம் மு.அறிவுடைநம்பி கடலூர்-1

பட்டியல் சமூக மேம்பாட்டுக்கு நாம் சிந்திப்போம்.

மீள் பதிவு  #இன்றைய_சமூக_அரசியல் #பொருளாதார_நிலை_என்பது ஒவ்வொரு #தனி_மனிதனையும்_மிருக #தன்மை_கொண்டவனாக #மாற்றுகிறது* , குறிப்பாக #சூத்திர #சமூக_ஏகாதிபத்திய_மேலாதிக்கத்தை* பலமாக #நிறுவுவதற்காக* அவர்கள் #பார்ப்பனியத்தை* பலமாக #பற்றிக்கொண்டு*  பட்டியல் சமூகம் அரசியல் அதிகாரத்தை அடையக் கூடாதென பல முகமூடிகள் போட்டு  ஒடுக்கு கிறார்கள்.  #சூத்திர_சனாதன_அரசியல் #கலாச்சாரத்தை_வளர்ச்சி_பெற #வைக்கிறார்கள்.  மாங் கொட்டையெல்லாம்  Re evolution அடைந்துள்ளார்கள். நாம் (Re evolution ) மறு பரிணாமம் அடைய வேண்டும். குழந்தைகளின் அருகில்   வண்டுகள், தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் வந்தால் குழந்தையின் தாய் குறிப்பாக பெண்கள் மிக துணிவுடன் தனது கைகளால் அழுத்தி ஒரே அடி அடிப்பார்கள் விஷ பூச்சிகள் செத்துமடியும், ஆனால்  விஷ பூச்சிகளை மேலாக தொட்டு எடுத்து போட வேண்டும் என நினைப்பவர்களை கடித்து விடும்.  அடித்து அழித்து கொள்வதே சிறந்த வழி.  சமூக வளர்ச்சி, பொருளாதார ,கல்வி மேம்பாடு, சமூக விழிப்புணர்வு ,சுய தொழில் வியாபாரம் போன்றவற்றில் மேம்பட கவனம் செலுத்துவோம். ஒவ...

உதய சூரியன்

1954 ஆம் ஆண்டு ‘உழவர் கட்சி' எனும் கட்சியை தொடங்கும் தலைவர் ஏ. கோவிந்தசாமி அந்த கட்சியின் சார்பாக உள்ளாட்சி தேர்தலில் காணை காஞ்சனூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சிலகாலத்திற்கு பிறகு திமுகவில் இணைகிறார். 1957 ஆம் ஆண்டு  முதன்முறையாக தேர்தல் களத்திற்கு வருகின்ற  அண்ணா தலைமையிலான திமுக, நிறைய இடங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிடுகிறது. ஆளானப்பட்ட அண்ணாவே சேவல் சின்னத்தில்தான்  போட்டியிடுகிறார். குளித்தலை தொகுதியில் போட்டியிடும் கலைஞர் கருணாநிதியின் சின்னம் உதயசூரியன். முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன்  சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்த திமுக மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கு தேர்தல் சின்னமாக உதயசூரியன் ஒதுக்கப்பட்டதே கூட 02-03 1958 தான். ஆனால்  1936-ல் சென்னை மாகாண செட்யூல்டு வகுப்பினர் ஃபெடரேஷன்’ என்ற கட்சியை ரெட்டைமலை சீனிவாசன் தொடங்கியபோது அந்த கட்சியின் சின்னம் உதய சூரியன். அந்தக் கட்சிக்கு பெயரே ‘சூரியக் கட்சி’ தான். குடியாத்தம் எஸ்.பி.பாலசுந்தரமும், ஜெ.ஜெ.தாஸும் இணைந்து 1941-ஆம் ஆண்டு அந்த கட்சிக்கு ஒரு இதழ் தொடங...

சாதி வெறியர்களால் விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஒன்றியம் #கோ_ஆதனூரில் 29.01.1999 இல் பாலியல் வண்முறை செய்யப்பட்டு மார்பகங்கள் அறுக்கப்பட்டு, பிறப்புறுப்பில் முந்துரி கட்டையை சொருகி படுகொலை செய்ப்பட்ட சேரி பெண் #பெ_பொன்_அருவி 22 ஆம் ஆண்டு #நினைவு_நாள்... தங்கைக்கு #விடுதலைச்_சிறுத்தைகளின் செம்மார்ந்த #வீரவணக்கம்

Image

சனவரி 22.2019 பதிவு

#மு_அறிவுடைநம்பி_அவர்களின்  #உரை_சுருக்கம்  தொண்டர் அணி கடலூர் சட்டமன்ற தொகுதி  அமைப்பாளர் மேலழிச்சிப்பட்டு இராஜிவ் காந்தி அவர்களின் இல்ல திறப்பு விழாவில் கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் மு.அறிவுடைநம்பி பேசியது. ___ ___  ____________   சனாதன கோட்பாட்டை எதிர்ப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் , சனாதனத்தை வீழ்த்தி புரட்சிகர சனநாயகத்தை நிறுவுவதற்கு போராடுபவர்கள் தான் விடுதலைச் சிறுத்தைகள். தேசம் காப்போம் என்பது சனாதனத்தை ஒழித்து காப்போம் என்பதுதான், சனாதன பயங்கரவாத்த்தை எதிர்த்து தேசம் காப்போம் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிலைப்பாடு , சில குதர்க்கவாதிகள், விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சியை விரும்பாதவர்கள், காழ் புணர்ச்சி கொண்டவர்கள் சிந்தனைக்கு எட்டியபடி, வாய்க்கு வந்தபடி எதை எதையோ உளறிக்கொண்டு இருக்கிறார்கள், சமூக வலைத்தளங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கையில்  அடிப்படையில் அவரின் ஆய்வுகளின்  அடிப்படையில் இந்தியாவில் போராடுகிற ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதை நான் சொ...