மூணார் தோட்ட தொழிலாளர் மக்களுக்கு எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார். 22.08.2020 ஆம் ஆண்டு fb பதிவு.
தமிழ்நாட்டின் பூர்வகுடிகள் இந்திய நிலப்பரப்பில் உள்ள தேயிலை தோட்டங்களில் , கடல் கடந்து பிழைக்க சென்ற நாடுகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் இயற்கை பேரிடரால், சுரண்டல் கொடுமையால், பசி பட்டினியால், இனவெறியால், ஏன் சாதிய கொடுமையால், அரச பயங்கரவாதத்தால் செத்து மடிந்தவர்களின் எண்ணிக்கை என்ன படவே இல்லை, வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை, அவர்களின் வாழ்வும் வரலாறும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் இருந்து பிழைக்க சென்ற தோட்ட தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமையை, துயரத்தை விட உலகத்தில் எந்த தொழிலாளர்களும் அனுபவித்து இருக்க மாட்டார்கள். எவரும் இவர்களை ஆதரிக்கவும் மாட்டார்கள். ஏனெனில் சாதியும் இருக்கிறது.
இன்று மூணார் தோட்ட தொழிலாளர் மக்களுக்கு எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
Comments
Post a Comment