சேரி பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் மீட்போம், சீரமைப்போம்.
எங்களது குடும்ப வழக்கப்படி மணமகளுக்கு தாலி கட்டும் போது வெள்ளை புடவைதான் கட்டி இருக்கனும் அந்த புடவையை மஞ்சளில் நனைத்து இருப்பாங்க, இப்படித்தான் எனது அண்ணனுக்கு திருமணம் நடந்தது.
எனக்கு திருமணம் நடக்கும் போது எனது மனைவியின் குடும்ப வழக்கபடி கூரை புடவையும் எடுத்தோம் , எங்கள் வழக்கப்படி வெள்ளை புடவையும் எடுத்தோம் இரண்டுமே நடக்காமல் பட்டு புடவையில் தாலி கட்டியாச்சி. ஆனால் இரண்டு சேலையும் வீட்டில் வந்து கட்டி சாமி கும்பிட்டாச்சு.
பொதுவாக எங்கள் உறவினர்கள் வணங்குவது பெரியாயி சாமி, எங்கள் குல சாமி பெயர் பார்பாங்குலத்து அம்மன் , என்னடா பார்ப்பான் குலத்து அம்மனை பறையர் குடும்பம் கும்பிடனும் என்று எனக்குள்ளே நான் சிறுவயதில் சிந்தித்தது உண்டு , நான் விபரம் தெரிந்து எனது அப்பா கிட்ட கேட்கும் போது பார்ப்பானும் பரையர் எல்லாம் ஒன்று, பிராமணர் என்பவர் தான் வேற என்றார் அப்போது விளையாட்டாக எடுத்து சிந்தித்தேன், இப்போது சில குறிப்புகளை தேடி, தேடி சில ஆய்வுகளை படிக்கும் போதுதான் புரிகிறது.
பார்ப்பான், அய்யர், #அந்தணர் , வள்ளுவர் என்ற பெயருக்கு எல்லாம் சொந்தக் காரன் #மறையர் அதாவது இன்றை #பரையர்.
வடுக ஆட்சியாளர்களால் #பறையராக்கப்பட்டோம்.
சேரிக்கென்று தனி கலாச்சாரம் உண்டு பழக்க வழக்கங்கள் உண்டு எங்கள் பண்பாட்டு பழக்க வழக்கங்களை இந்து பண்பாடு என்று சொல்வது சரியானது அல்ல சேரி பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் மீட்போம், சீரமைப்போம்.
Comments
Post a Comment