Posts

Showing posts from March, 2021

மகளிர் விடுதலை வெல்லட்டும்

Image
உலகத்தில் இருக்கிற எல்லா பிரச்சினைகளும் (behaviours) பிகேவியர் காரணங்களால் தான் அதற்கு நாம் கொடுக்கிற பெயர் மதம், சாதி, இனம், மொழி, நிறம், ஆண்,பெண் என்று ஏழை,பணக்காரன் போன்ற பல எண்ணற்ற வடிவங்கள், இத்தகைய வேறுபாடுகள், ஆதிக்கங்கள், பல்வேறு பிரச்சனைகள் ஒழிய வேண்டுமெனில் நடத்தை பழக்கவழக்கங்கள் மாற வேண்டும் மனிதனிடம் மொத்தமாக behaviours மாற வேண்டும்.  இத்தகைய பிரச்சினைகளை எல்லாம் நுட்பமாக ஆராயாமல்  அதற்கான அரசியல் கலாச்சார நடவடிக்கைகள் எடுக்காமல் வெறுமன மேலோட்டமாக ஆணாதிக்கம் ,சாதி வேறுபாடு, போன்ற தவறான நடத்தைகள் ஒழிய வேண்டுமென சொல்வது ,செயல்படுவது ஒரு நோயாளிக்கு தவறான சிகிச்சை கொடுப்பதற்கு ஒப்பாக்கும். கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் அனைத்தும் வணிக நடத்தியல் தொடர்பாகவே உலகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எண்ணங்கள், சிந்தனைகள், கலாச்சார பழக்க வழக்கங்கள், மாறவேண்டும் அப்போது தான் நடத்தைகள் மாறும். அனைத்து பிரச்சினைகளும் பிகேவியர் தொடர்பானது நல்ல சிந்தனைகளை வளர்ப்போம்.   #மகளிர்_விடுதலை_வெல்லட்டும் இவண்:  வழக்கறிஞர்  #ஞானம் மு.அறிவுடைநம்பி கடலூர்-1