#சேரி_பண்பாடு_வேறு, இந்து பிராமணிய பண்பாடு வேறு, சேரி மக்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை, வாழ்வின் பண்பாடு அனைத்தும் இந்து பண்பாடு அல்ல, தனித்த அடையாளம் கொண்ட சேரி பண்பாடு, தனித்த பண்பாட்டு நாகரிகம் உடையவர்கள் சேரி மக்கள். இதைபோட்டு சாதியவாதிகள் குழப்பிக் கொண்டு சேரி பண்பாட்டு பழக்க வழக்கங்களை கொச்சை படுத்த வேண்டாம். நீங்கள் திரௌபதி அம்மனை வணங்குவதற்கும், நாங்கள் மாரியம்மனை வழிபடுவதற்கும் காரணம் வேறு, நீங்கள் ராமனை வழிபடுவதற்கும் நாங்கள் முனீஸ்வரனை வணங்குவதற்கும் வரலாற்று பின்னணி வேறு , நீங்கள் கடவுள் மறுப்பு அரசியலை மட்டுமே செய்வதற்கும் நாங்கள் மனித சமத்துவத்தை அடைய போராடுவதற்கும் உள்ள வேறுபாடு நூறு சதவீதம் முரண்பட்டது. சாதி வெறியர்கள், மத வெறியர்கள், சமூக துரோகிகள் எப்போதும் விடுதலைச்சிறுத்தைகள் மீது அவதூறு பரப்புவதே வேலையாக உள்ளனர் பெரியார் செய்ததைத்தான் செய்ய வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை, பெரியாரிடம் கற்க, கற்பிக்க நிறைய இருக்கிறது . ஆய்வு , மறு ஆய்வு என்பதே சரி. நீங்கள்...