Posts

Showing posts from April, 2021

இந்திரர்கள் நாம்தான்

ஞாயிற்று வழிபாடு மேலோங்கியிருந்த தொன்மையான அக்காலத்தில் தமிழுக்கு இலக்கணம்  உருவானது.     #ஐந்திரம்* என்ற மறைந்த தமிழ் இலக்கண நூலை இயற்றியவர் #இந்திரன்தானாம்* அதனால் தான் பிற்காலத்து மொழியான சங்கத மொழியில் #இந்திர_வியாகரணம்* என்றனர்  *இந்திரன்* வீரத்தைக் குறிக்கும் தெய்வமாம் விண்ணையே ஆள்பவனாம், வானிலுள்ள தேவர்களுக்கெல்லாம் தலைவனாம். #ரிக்வேதத்தில் வருகின்ற 33 தேவர்களுக்கும் இந்திரனே தலைவனாம் , இதனால் 33 தெய்வங்களின் பெயர்கள் ரிக்வேதத்தில் இருக்கவேண்டும் ஆனால் அவ்வாறு இல்லை அவற்றில் முப்பத்தி ஒரு (31) தேவர்களின் பெயர்களை மட்டும் இருக்கின்றன  *இந்திரன்* ஆரியர்களின் தெய்வம் அல்ல *இந்திரன் தமிழரின்* தெய்வம் , 12 உயிரெழுத்துக்களும் 18 மெய்யெழுத்துக்களும் ஒரு ஆயுத எழுத்தும், குற்றியலிகரம், குற்றியலுகரம் என்ற தமிழ் எழுத்துக்கள் முப்பத்தி மூன்றையும் (33) தெய்வங்களாக்கி அவற்றி்ற்கு தலைவனாக இந்திரன் கற்பிக்கப்பட்டான். இதனால் வந்த கதையே இந்திரனை  33 தேவர்களின் தலைவானாக்கிய கதையாகும்.  #ஐந்திரம் என்ற இலக்கண நூலும் தமிழுக்கு மொத்தம் 33 எழுத்துக்கள் என்று வரையற...

நில அளவைகள்

Image
நில அளவைகள்... நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது  மனையையோ அளக்க  முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை... குறிப்பாக நிலவரைபடம்    FMB பற்றி தெளிவாக  நமக்குத் தெரிவதில்லை  அது நமக்கு புரியாத  ஒரு புதிராகவே இருக்கிறது. எனவே ஒரு நிலத்தை எப்படி  அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்  FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.. சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் : 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும். 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE). 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள். 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும். 5. இரண்ட...

சோழர்கள் #பறையர்களே

#சோழர்கள் #பறையர்களே  ________________ இராஜபறகேசரி' பட்டம் சுமந்து இறை தொண்டனாக  வலம் வந்தவர் பறகேசரி கண்டராதித்த விழுப்பறைய சோழன். கண்டராதித்தன் என்றும், விழுப்பறையர் ஞான கண்டாரதித்தர்  என்றும் அழைக்கப்பட்ட  இவர், சோழமண்டல சக்கரவர்த்தியாக அரசாண்ட காலம் கி.பி. 953 முதல் 957 வரை.  சைவ சமயத்தின் எல்லையில்லா பக்தி கொண்டவர். பறகேசரி  *கண்டராதித்த விழுப்பறையர்* தனது பிறப்பிடமான கண்டராதித்த சோழபுரத்தில் ( *கண்டாச்சிபுரம்* ) தனது உறவினர் குடும்பத்தில் *வீரநாராயிணி* தேவியார் திருமணம் செய்தார் அவர் பட்டத்திற்கு  வருமுன்னரே முதல் மனைவி வீரநாராயணி இறந்துவிட்டதால் இறப்பிற்கு பிறகு தனது விழுப்பறையர் குலத்தில் பெண் தேடாமல் இரண்டாவது மனைவி செம்பியன் மாதேவியாரை *பறகேசரி கண்டராதித்தன்* ,  பட்டத்தரசியாக்கினார். *பறகேசரி கண்டராதித்த விழுப்பறைய சோழன்* சில ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்தார். திடீரென்று ஏற்பட்ட  உடல்நலக் குறைவினால் இயற்கை அடைந்தார் பின்னர் *செம்பியன் மாதேவியார்* தனது வாழ்நாள் முழுவதும் தெய்வத் திருப்பணிகள் பல செய்து சோழர்கள்  வரலாற்றில் தனக்கென...

காசநோய் ஒழிந்து விட்டதா?

#இந்தியாவில்_காசநோய் #ஒழிந்துவிட்டது #என்ற #பொய்_தோற்றம் #உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் ஆண்டுக்கு 4000 பேர் இந்தியாவில் இறக்கிறார்கள் , ஒரு நாளைக்கு 1400 பேர் காசநோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறார்கள்.இந்நோய் இந்தியாவின் பெரும் அளவில் நிறைந்துள்ளது என்கிறது ஆய்வுகள்.  #டியூபர்செல்_பாசிலஸ் எனும் கிருமியால் வரும் நோயின் பெயர் #டியூபர்_குளோசிஸ்’. இதனை சுருக்கி #டிபி’ என்று அழைக்கிறோம்.  இந்நோய் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதால்தான் வருகிறது. இது, நெஞ்சுப் பகுதி முழுவதும் சளி சேர்ந்து, பாதிக்கப்பட்டோரின் உடம்பை உருக்கிவிடும் பின்னர் உயிரை குடித்திவிடும். இந்தியாவில் காசநோயால் 24 சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டிபி நோயையே ஒழிக்க முடியவில்லை கோவிட்19  வைரஸை எப்படி ஒழிப்பார்கள், இந்திய அரசு செய்யவேண்டியது, அல்லது நாம் இந்திய மக்கள் அனைவரும் போராடி பெற வேண்டியது #மருத்துவம், #கல்வி அரசே கொடுக்க வேண்டும்,  இந்தியாவில் வறுமையில் காரணமாக ஊட்ட சத்து குறைபாடு இருக்கிறது எனவே வறுமை ஒழிக்க ...