இந்திரர்கள் நாம்தான்
ஞாயிற்று வழிபாடு மேலோங்கியிருந்த தொன்மையான அக்காலத்தில் தமிழுக்கு இலக்கணம் உருவானது.
#ஐந்திரம்* என்ற மறைந்த தமிழ் இலக்கண நூலை இயற்றியவர் #இந்திரன்தானாம்* அதனால் தான் பிற்காலத்து மொழியான சங்கத மொழியில் #இந்திர_வியாகரணம்* என்றனர்
*இந்திரன்* வீரத்தைக் குறிக்கும் தெய்வமாம் விண்ணையே ஆள்பவனாம், வானிலுள்ள தேவர்களுக்கெல்லாம் தலைவனாம். #ரிக்வேதத்தில் வருகின்ற 33 தேவர்களுக்கும் இந்திரனே தலைவனாம் , இதனால் 33 தெய்வங்களின் பெயர்கள் ரிக்வேதத்தில் இருக்கவேண்டும் ஆனால் அவ்வாறு இல்லை அவற்றில் முப்பத்தி ஒரு (31) தேவர்களின் பெயர்களை மட்டும் இருக்கின்றன
*இந்திரன்* ஆரியர்களின் தெய்வம் அல்ல *இந்திரன் தமிழரின்* தெய்வம் , 12 உயிரெழுத்துக்களும் 18 மெய்யெழுத்துக்களும் ஒரு ஆயுத எழுத்தும், குற்றியலிகரம், குற்றியலுகரம் என்ற தமிழ் எழுத்துக்கள் முப்பத்தி மூன்றையும் (33) தெய்வங்களாக்கி அவற்றி்ற்கு தலைவனாக இந்திரன் கற்பிக்கப்பட்டான். இதனால் வந்த கதையே இந்திரனை 33 தேவர்களின் தலைவானாக்கிய கதையாகும்.
#ஐந்திரம் என்ற இலக்கண நூலும் தமிழுக்கு மொத்தம் 33 எழுத்துக்கள் என்று வரையறுத்திருப்பார்,
பாடல் பெற்ற தேவர்கள் மொத்தம் 33 பேர் என்று ரிக் வேதம் கூறுகையில் அது முப்பத்து மூன்று தமிழ் எழுத்துகளையே குறிக்கும். இதனை மறைக்க தமிழரின் தொன்மையான வரலாற்றை மறைக்க பல சதிகளை செய்துள்ளனர், ரிக்வேதத்தில் வெறும் 31 தேவர்களை மட்டுமே கணக்கில் காட்டுவது ஏன் இந்த திரிபு, புரட்டு, மோசடிகள்..?
Comments
Post a Comment