சோழர்கள் #பறையர்களே
#சோழர்கள் #பறையர்களே
________________
இராஜபறகேசரி' பட்டம் சுமந்து இறை தொண்டனாக வலம் வந்தவர் பறகேசரி கண்டராதித்த விழுப்பறைய சோழன். கண்டராதித்தன் என்றும், விழுப்பறையர் ஞான கண்டாரதித்தர் என்றும் அழைக்கப்பட்ட இவர், சோழமண்டல சக்கரவர்த்தியாக அரசாண்ட காலம் கி.பி. 953 முதல் 957 வரை.
சைவ சமயத்தின் எல்லையில்லா பக்தி கொண்டவர்.
பறகேசரி *கண்டராதித்த விழுப்பறையர்* தனது பிறப்பிடமான கண்டராதித்த சோழபுரத்தில் ( *கண்டாச்சிபுரம்* ) தனது உறவினர் குடும்பத்தில் *வீரநாராயிணி* தேவியார் திருமணம் செய்தார் அவர் பட்டத்திற்கு வருமுன்னரே முதல் மனைவி வீரநாராயணி இறந்துவிட்டதால் இறப்பிற்கு பிறகு தனது விழுப்பறையர் குலத்தில் பெண் தேடாமல் இரண்டாவது மனைவி செம்பியன் மாதேவியாரை *பறகேசரி கண்டராதித்தன்* , பட்டத்தரசியாக்கினார். *பறகேசரி கண்டராதித்த விழுப்பறைய சோழன்* சில ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்தார்.
திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் இயற்கை அடைந்தார் பின்னர் *செம்பியன் மாதேவியார்* தனது வாழ்நாள் முழுவதும் தெய்வத் திருப்பணிகள் பல செய்து சோழர்கள் வரலாற்றில் தனக்கென்று ஓர் இடம்பிடித்தார்.
இவர்கள் வாழ்ந்த காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியத்தில் சக்கரவர்த்திகளாக வீற்றிருந்து அரசாண்ட 1. பறகேசரி முதலாம் பராந்தக சோழன் (செம்பியன் மாதேவியார் மாமனார் ) 2. கண்டராதித்த விழுப்பறைய சோழன் (இவரின் கணவர்),
3. அரிஞ்சய சோழன் (இவரின் கொழுந்தன்), 4. இரண்டாம் பராந்தகன் (எ) சுந்தர சோழன் (அரிஞ்சயனின் மகன்),
5. மதுராந்தகன்( எ) உத்தம சோழன் (செம்பியன் மாதேவியார் மகன்),
6. அருள்மொழிவர்மன் எனும் முதலாம் இராசராச சோழன் (இவரின் கொழுந்தன் பெயரன்) ஆகிய ஆறு சக்கரவர்த்திகளின் அரசாட்சியைக் கண்டுகளித்து வழிகாட்டிய பெரும் மூதாட்டியார் *செம்பியன் மாதேவியார்.*
பல வருடங்களுக்கு பிறகு விழுப்பறையர் குலத்து இராஜ *பறகேசரி விஜயாலன்* சோழ ஆட்சியை மீண்டும் நிறுவினார் என்றால் செம்பியன் மாதேவியார் அவர்கள் பறகேசரி இராஜாராஜ விழுப்பறைய சோழன் வரை *மாபெரும் ஆலோசராக இருந்துள்ளார்* .
இவர், 60 ஆண்டுகள் சிவப்பணி, அறப்பணிக்கு தன்னை அர்ப்பணித்து, சுமார் 80 ஆண்டுகள் இப்புவியில் வாழ்ந்திருந்து மறைந்தவர், இவரின் காலம் கி.பி 920 முதல் -1001-வரை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
இவர் 941-ஆம் ஆண்டு தன் மாமனார் முதலாம் பராந்தக சோழர் ஆட்சியில் திருச்சிராப்பள்ளி புறப் பகுதியிலுள்ள உய்யக் கொண்டான் மலையில் திருகற்குடி மாதேவர்க்கு ஒரு நந்தா விளக்கு எரிக்க *தொண்ணூறு ஆடுகள்* அளித்தது முதல்
*செம்பியன் மாதேவியார் ஏற்படுத்திய தொண்டுகள் பல* அவர் ஏற்படுத்திய கோயில்கள் பல அவற்றுள் " *திருநல்லம்* ' எனும் "கோனேரிராஜபுரத்தில்' செங்கற்களால் கட்டப்பட்டிருந்த கோயிலை இவரே *புதுபித்து கட்டினார்* , இக்கோயிலில் பறகேசரி கண்டராதித்தன் விழுப்பறைய சோழர் அவர்கள் சிவலிங்கத்திற்கு *பூஜை செய்வது போல் ஒரு சிற்பத்தை சமர்ப்பித்துள்ளார்.*
இந்தத் திருக்கோயிலுக்கு தன் *கணவன் பெயரான "ஸ்ரீகண்டராதித்தர்* ' என்ற பெயரையே சூட்டி மனநிறைவு கொண்டார்.
இச்சிற்பத்தின் அடியில் காணப்பெறும் கல்வெட்டைப் படித்துப் பார்த்தால் *செம்பியன் மாதேவிக்கு* உள்ள சிவபக்தி கலந்த பதிபக்தி அன்பின் வெளிப்பாடு எத்தனை உயர்வானது என்று புலனாகும்.
ஸ்வஸ்தி ஸ்ரீ கண்டராதித்த தேவர் தேவியார்- மாதே வடிகளாரான ஸ்ரீ செம்பியன் மாதேவியார்- தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான- உத்தம சோழர் திரு ராஜ்ஜியஞ் செய்தருளா நிற்க- தம்முடையார் ஸ்ரீகண்டராதித்த தேவர் திருநாமத்தால்- திருநல்லமுடையாருக்குத் திருக்கற்றளி எழுந்தடுத் தருளிவித்து. - இத்திருக்கற்றளிலே திருநல்லமுடையாரைத் திருவடித் தொழுகின்றாராக எழுந்தருளுவித்த ஸ்ரீகண்டராதித்த தேவர் இவர் - என இங்குள்ள *கல்வெட்டில் உள்ளது.*
*முதல் ராஜேந்திர சோழ பறகேசரி* மாமன்னனான கங்கைகொண்ட சோழர் நாகை மாவட்டம் செம்பியன் மாதேவி எனும் ஊரிலுள்ள கயிலாசமுடையார் கோயிலில் கி.பி. 1019-ஆம் ஆண்டில் இவ்வரசியாரின் திருவுருவ செப்புத் திருமேனியை எழுந்தருளவித்து வழிபட்டு மகிழ்ந்தார். இச்சிலை வடிவத்தை இன்றும் இவ்வாலயத்தில் காணலாம்.
தேவர் என்றால் இன்றைய தேவர் சாதியை குறிப்பது கிடையாது தேவர், தேவி என்றால் தலைவன் தலைவி என்பதைகாட்டிலும் மேன்மையான ஸ்தானத்தை குறிக்கும் சொல்.
*பறகேசரி விஜயாலன் தனது விழுப்பறையர் குடியை கொண்டு* சோழர் ஆட்சியை மீண்டும் நிறுவினார், பல்லவர்கள் மற்றும் சிற்றரசர் பலர் உதவியுடன் மீண்டும் சோழர் ஆட்சியை தஞ்சையில் நிறுவினார் மற்ற சிற்றரசு ஆட்சி பகுதிகளையும் தனது ஆட்சி பகுதியில் இணைந்தார்.
இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் எந்தவிதமான தீண்டாமையும் சாதி பாகுபாடும் கிடையாது, சாதி கொடுமையும் கிடையாது.
நிலங்களை *பறகேசரி இராஜராஜ சோழன்* மட்டுமே இந்த துணை கண்டத்தில் முதல் முதலாக நிலத்தை அளந்து தனது அரசு ஆவணங்களில் நிலத்தை வகைப் படுத்தி , அதில் இருக்கும் சொத்துளை கூட பதிவு செய்து ஆவண படுத்தினார், யாருக்கு உரிமை என்பதையும் முறைபடுத்தினார், (அதாவது அடங்கள்) அன்று இருந்த குடியிருப்புகள் பறைசேரி மற்றும் பறையர்களின் பல பிரிவுகளான குடியிருப்புகள், வேளாள பறைசேரி மற்றும் தீண்டாச்சேரி, தீண்டாச்சேரியில் பறையர்கள் வாழவில்லை ஈழவர்கள் வாழ்ந்துள்ளனர்.
அந்தணர்கள் என்பவர்கள் பறையர் குடியின் ஒரு பிரிவே இவர்களை பண்டாரம், வள்ளுவர் என்று இன்று அழைக்கப்படுகிறார்கள் ஆனால் அந்தணர்கள் என்றால் பிராமணர்கள் என்று இப்போது அனைவரையும் திரிபு வரலாற்றில் மூலம் நம்ப வைக்கப்பட்டுள்ளது. ஆக அத்தகைய அந்தணர்களுக்கும், பிராமணர்களுக்கும் குடியிருப்புகள் ஏற்படுத்தி கொடுத்து பறகேசரி இராஜராஜசோழன் அவர்கள் பல இலவசங்கள் கொடுத்ததால்
திராவிட சிந்தனையாளர்கள் திட்டமிட்டு ஏதோ
இராஜராஜசோழன் காலத்தில் சாதி தீண்டாமை இருந்ததை போல பொய் வரலாற்றை வேண்டுமென்று பரப்பி பறையர் மரபில் தோன்றிய பறையர் குடி அரசர்களை பறையர்களே எதிர்க்கிற வேலையை திராவிட அரசியல் சாதி வெறியர்களும் பறையர்களுக்கு எதிரான சாதியினரும் திட்டமிட்டு செய்துள்ளனர்.
பிரேம்ம தேயங்கள் ( *அக்ரஹாரங்கள்* ) முதன்முதலில் கர்நாடகத்தில் தான் தோன்றின.
கர்நாடகத்திற்கு பிறகு அக்கிரகாரங்கள் வட இந்தியாவில் தோன்றிய *குப்தர் காலத்தின் போது* மேற்கு வங்கத்தில் கிபி 5 ஆம் நூற்றாண்டிலும், கிழக்கு வங்காளத்தில் கிபி 6 ஆம் நூற்றாண்டிலும், ஒரிசாவிலும், குஜராத்திலும் கிபி 7 ஆம் நூற்றாண்டில் இருந்துதான் அகரகாரங்கள் தோன்றலாயின, *சாளுக்கியரால்* கர்நாடகம் முழுவதும் விரவின. பிராமணர்களுக்கு எதற்கெடுத்தாலும் பல இலவசங்கள் கொடுக்கப்பட்டன.
சரி இதனை பிறகு விவாதிப்போம்.*
*உத்தம சோழன்* கி.பி.970-985 (மதுராந்தகன்)
சோழ மன்னன் கண்டராதித்தனின் ஒரே புதல்வன் *உத்தமசோழன்* .
*கண்டராதித்தன் விழுப்பறையர்* இறக்கும் போது இவர் சிறுவனாய் இருந்தமையால் கண்டராதித்தனின் தம்பி *அரிஞ்சிய சோழனுக்கு முடி சூட்டப்ப்ட்டது.* அரிஞ்சிய சோழனுக்கு பிறகு அவனது மகன் *சுந்தரசோழனுக்கு முடிசூட்டப்பட்டது.*
சுந்தரசோழனுக்கு பிறகு அவரதுமகன் *பரகேசரி* *இராஜராஜசோழன்* (எ) அருண்மொழித்தேவன் ஆட்சியேற வேண்டும் என்று குடிமக்கள் பெரிதும் விரும்பினாலும், *தனது சிறிய தந்தையுடைய* அரசாலும் உரிமையையும் விருப்பத்தையும் மதித்து அருண்மொழித் தேவன் என்கிற *பறகேசரி இராஜராஜ சோழன்* விட்டுக்கொடுக்க *உத்தமசோழன்* *விழுப்பறையர்* அரியணையேறினார்.
இம்மன்னனது *உத்தமசோழன். பறகேசரி* என்னும் பட்டம் கொண்டு தனது முன்னோர்களை போலவே ஆட்சிபுரிந்தார்.
இவரின் ஆட்சிக்காலத்தில் சுந்தரசோழனின் மகன் அருண்மொழித் தேவன் என்ற பறகேசரி *இராசராசசோழன் இளவரசர் பட்டம் கட்டப்பெற்றார்.*
நடுவில் புலியுருவம் பொறிக்கப்பட்டதாகவும் ஓரத்தில் உத்தமசோழன் என்று கிரந்த எழுத்துகளைத் தாங்கிய நாணயம் இவன் காலத்து வரலாற்றுச் சான்றாகும்.
உத்தமசோழன் என்று வடமொழியில் வரையப்பெற்ற பொற்காசு உத்தமசோழன் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டதாக சர் வால்டர் எலியட் என்னும் அறிஞர் தன்னுடைய “ *தென்னிந்திய நாணயங்கள்* ” என்ற நூலில் கூறியுள்ளார். இப்போது கிடைத்துள்ள சோழமன்னர்களின் நாணயங்களில் இதுவே பழமையானது என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
இவர் காலத்தில் நாடு அமைதியுடன் இருந்தது. மக்கள் யாவரும் துன்பங்களின்றி இனிதே வாழ்ந்து வருமாறு நல்ஆட்சி செய்து வந்த உத்தமசோழன் விழுப்பறையர் கி.பி.985ம் ஆண்டு மரணமடைந்தார்.
இவரைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் *இராஜராஜ சோழன் அரியணை ஏறினார்*
கண்டராதித்த விழுப்பறைய சோழனின் மனைவியும் உத்தமசோழனின் தாயும் ஆன செம்பியன் மாதேவி இவரிடம் தான் ராஜராஜன் வளர்ந்தார்.
உத்தம சோழனின் புதல்வன் *மதுராந்தக கண்டாராத்தித்த சோழன்* ஆவார் இவர்
இராஜபறகேசரி *இராசராச சோழனின்* ஆட்சியில் கோயில் மற்றும் அறநிலைய துறையை சிறப்பாக பார்த்து வந்தார், பறகேசரி *இராஜ இராஜ சோழன்* உத்தரவுபடி தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்கு கண்டராதித்த *கல்தச்சன்* தலைமையிலான குழு தஞ்சை கோயிலை கட்டினார்கள். கல்தச்சன் விழுப்பறையர் குலத்தை சேர்ந்தவர் ஆவார். இராஜ பறகேசரி வழிகாட்டுதல் படி பிரவிடை சாம்பானுக்கு கோயில் கட்டினார்.
*கோயில் வரலாறு*
*பறையர் குல சோழ மன்னன்*
*பிரவிடை சாம்பான்* என்பவரது சமாதியின் மேல் எழுப்பப்பட்டதே
*தஞ்சை பெருவுடையார் கோவில்.*
தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட
*இடங்கையர் வலங்கையர் சரித்திரம்* என்னும் நூலில்
இது ஆதாரபூர்வமாக உள்ளது.
வலங்கையர் வரலாறு என்னும் சுவடியில்
*பிரவிடை சாம்பான்* மன்னரது வரலாறு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த சுவடிகள் இன்றும் தமிழ்நாடு கீழ்த்திசை சுவடிகள்
நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
சுவடி கூறும் *வரலாறு*
ராவணன் என்னும் மல்லியை பெருமானுக்கு
மூன்று மகன்கள் இருந்தனர்
1) *சாம்புகன்*
2) *பிரவிடை சாம்பான்*
3) *தியாகன்* என்னும் *தியாகச் சாம்பான்*
இவர்கள் அக்கால சோழ மண்டலத்தில்
சிறிய கோட்டை கட்டி வாழ்ந்த *பறையர் குடி மன்னர்களாவர்*
*பிரவிடை சாம்பானது* கோட்டை
"விளாறுகோட்டை"
அதுவே பின்னாளில்
'விளாரிகோட்டை' என்று திரிந்தது என்கின்றனர். பின்னர்
மலாரிகோட்டை என்றும் வழங்கப்பட்டது. அந்த கோட்டை பிற்காலத்தில் உடைந்து போயின
_சோழ மன்னன்_ " *பிரவிடை சாம்பான்"* மரித்த பின்
இந்த கோட்டையில் தகனம் செய்யப்பட்டார்.
கணவன் மரித்த துயரத்தில் அவனது மனைவி
*பெரிய நாயகியும்* அவ்விடத்திலே தீ குளித்து இறந்தால்
*பிரவிடை சாம்பான்* " *மரணித்த அந்த இடத்திலே*
ஒரு வேப்ப மரமும் ஒரு அரசமரமும் வைத்து
திண்ணை அமைத்து இரண்டு செங்கல் வைத்து
அவர்களை " *தெய்வமாக* " அந்த ஊர் மக்கள் வணங்க துவங்கினர்
அந்த இடத்திலே நந்தவனமும் கிணற்றுத்
தண்ணீர் பந்தலும் பிற்காலத்தில் அமைக்கபட்டது.
பிற்காலத்தில் " *இராஜ* *பரகேசரி இராஜ இராஜ சோழ மாமன்னர்"* இவ்விடத்திற்கு வந்த பொழுது
*பிரவிடை சாம்பான்* தகனம் செய்யப்பட்ட
அவ்விடத்தின் சிறப்பை கேட்டு இரண்டு நாள் அங்கு தங்கினார்
அவ்வாறு *பறகேசரி* மாமன்னர்" அங்கு தங்கும் பொழுது
" *பிரவிடை சாம்பனும்* அவரது மனைவி *பெரிய நாயகியும்*
*பரகேசரி மாமன்னர் கனவில்*
தோன்றி அவ்விடத்தில் அவர்களுக்கு திருப்பணி செய்யுமாறு கூறினார் என்றும்
*பறகேசரி மன்னர்* அவ்விடத்தில் வேண்டிய காரியம் கைகூடியதால்
அதன் பேரில் அவ்விடத்திலேயே
*பிரவிடை சாம்பானுக்கு கோவில்* " எழுப்புவதாக முடிவு செய்தார் பின்னாளில் தான் நிரைவேற்றும் விதமாக
விவசாய பூமியாய் இருந்த பகுதியில் சுற்றிலும் மதில் எழுப்பி
கோபுரம் வைத்து *பிரவிடைசாம்பானுக்கு*
உலகம் வியக்கும் வகையில் *பெரிய கோவிலை கட்டினார்*
அக்காலத்தில்
*பிரவிடை சாம்பான்* *கோவில்* என்று அழைக்கபட்ட இக்கோவிலானது
பின்னாளில் பெருவிடை நயினார் கோவில் என்று பெயர் மாற்றி பூசிக்கப்பட்டது என்றும்
அதுவே பிற்காலத்தில் வடுக தெலுங்கு மன்னர்கள் கட்டுப்பாட்டில்
பெருவிடை ஈசுவரன் கோவில் என்று அழைக்கப்பட்டதாகவும்
மராட்டிய மன்னர்கள் கட்டுப்பாட்டில் வந்தபொழுது
முழுக்க வடமொழியில் திரிந்து " *பிரகதீஸ்வரர் கோவில்* " என்று வழங்கப்படுகிறது
என்று அறிய முடிகிறது.
படையெடுப்புகள் பல நிகழ்ந்தாலும் பெயர்கள் வடமொழியில் திரிந்தாலும்
பரையர் குல மன்னர் *பிரவிடை சாம்பான்*
அவர்களது வரலாற்றை மறைக்க முடியாமல்
நிலைத்திருக்கிறது.
*பறையர்களை தனிமைபடுத்த பழி*
பறகேசரி சுந்தரசோழன் அவரது மகன் *ஆதித்த கரிகாலனை* பங்காளி சண்டையில் உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் காட்டுமன்னார்கோயில் அருகே *கடம்பூர் சம்புவராயர்* அரண்மனை வீட்டிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார், பிற்காலத்தில் ஆதித்த கரிகாலனை பறையர்கள் கொலைசெய்தார்கள் அவர்கள் பாண்டிய அரசை சேர்ந்தவர்கள் என்று பொய்யாக வரலாற்றை திருத்தி எழுதினார்கள் பறையர்கள் சோழர்களுக்கு எதிரியை போல சித்தரித்து சோழர் வரலாற்றை பிற சாதியினர் கொண்டாட சதி செய்தனர்.
ஆதித்த கரிகாலனை கொலை செய்தவர்கள் அவரது உறவினர்களான *சாம்பவர் என்று அடையாள படுத்தி கொண்ட பறையர்கள்தான்* எனவேதான் அவர்களை தங்கள் குடும்பத்தை விட்டு விலக்கி வைத்தனர். மற்றபடி கொலைதண்டனை அல்லது நாடுகடத்தல் கூட எதுவும் உத்தமசோழனும் சரி அவருக்கு பின் வந்த ஆதித்த கரிகாலனின் சகோதரர் இராஜ இராஜ சோழனும் சரி யாரையும் அவரது சகோதரர் கொலைக்காக ஒரு உயிரை கூட எடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
பறையர்களின் வரலாற்றை 1915 முதல் கடுமையாக தமிழகத்தில் அழிக்க துவங்கினார்கள் சோழ வரலாற்றை கல்வெட்டுகள் முதற் கொண்டு அனைத்தையும் அழித்துள்ளனர்.
#பறையர்_வரலாற்றை_மீட்போம்.*
இவண்:
#ஞானம்*
*மு.அறிவுடைநம்பி*
Comments
Post a Comment