காவிரி நதிநீர் பிரச்சினை 2019 fb பதிவு
2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக்கண்டத்தில்
முதல் நதிநீர் பிரச்சினையை புத்தர் தீர்த்து வைத்தார், அதனை தொடர்ந்து அவரின் சீடர், புத்தரின் அரசியல் வாரிசு, டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள் 2019 இல் தமிழ்நாடு- கர்நாடக மக்களுக்கான தண்ணீர் பிரச்சினை தீர்க்க நாடாளுமன்றத்தின் மூலம் முயற்சிக்கிறார்.
________________________________
ரோகிணி ஆற்றின்
தண்ணீரைத் கோலியர் என்ற இனத்தினரும், சாக்கியர் என்ற இனத்தினரும் அதை சமத்துவமாகப் பயன்படுத்தி வந்தனர். புத்தர் சாக்கிய இனத்தைச் சேர்ந்தவர். கோலியர்களும் புத்தர்களின் சொந்தக்காரர்கள்தான், ஒரு முறை கடும் வறட்சியும் பஞ்சமும் வந்து சேர்ந்தது. நதியின் நீர்வரத்தும் பாதிக்கப்பட்டது. கிடைக்கும் சொற்ப நீரை யார் பயன்படுத்திக் கொள்வது என்பதில் இரண்டு இனத்தினருக்கும் சண்டை மூண்டது.
கோலியர்களும், சாக்கியர்களும் மோதி கொள்கிற சூழ்நிலை தெரிந்து பிரச்சினையைக் கேள்விப்பட்ட கௌதம புத்தர் போரைத் தடுத்து நிறுத்த விரும்பினார். அவர் அவசரமாக அப்பகுதிக்கு வந்து சேர்ந்து இரு தரப்பினருக்கும் பிரச்சினையை தீர்த்து வைத்தார்.
புத்தரை தொடர்ந்து அண்ணன் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள் காவிரி ஆற்று தண்ணீர் பிரச்சனையை , தமிழர், கன்னடர் இன முரண்பட்டை முடிவுக்கு கொண்டுவர போராடுகிறார்.....
மு.அறிவுடைநம்பி
Comments
Post a Comment