சுய_உரையாடலுக்கு

#சுய_உரையாடலுக்கு

திரட்டப்பட்ட மக்களை ஓட்டாக மாற்றுவதும், ஒட்டுமொத்த மக்களை அமைப்பாக  திரட்டுவதுமே  மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க பணி.

இருப்பதை தக்க வைப்பதும் ஒருவகை நிர்வாக ஆளுமைதான்,  இருப்பதை விட அதிகப்படியாக உருவாக்குவது என்பது மாபெரும்  நிர்வாக ஆளுமை.

தன்னை மட்டுமே முன்னிறுத்தி கொண்டு  குடும்பத்தை கூட அரசியல் படுத்தமுடியாதவர்கள் ஒரு ஆளுமை தான், 

குடும்பத்தை அரசியல் படுத்தி , மற்றவர்களையும் அரசியல் படுத்தி அமைப்பாய் மாற்றுபவர்களே மாபெரும் ஆளுமை. 

உலகத்தில்  பெரிய சந்தை  இந்தியா என்றால் இந்தியாவில் பெரிய சந்தை சேரி மக்களே, சேரி மக்களை சந்தை படுத்துகின்ற கலையை, யுத்தியை இந்துத்துவ சாதிய முதலாளித்துவ கும்பல் நுட்பமாக கற்று வைத்துள்ளனர்.    

அதே வடிவத்தில் அரசியல் களத்தில் சேரி மக்களின் ஓட்டுகளை கொள்ளை அடிக்கிறார்கள். சேரி மக்கள் அரசியல் அதிகாரத்திற்கே வர விடாமல் பல்வேறு நுட்ப அரசியலை நகர்த்துகிறார்கள் , சேரி மக்கள் அரசியல் சக்தியாய் எழுச்சி பெறாமல் சிதைக்கிறார்கள் இப்படி பல யுத்திகளை இந்துத்துவ சாதிய சனாதன சக்திகள் பல வகையான தளத்தில் பணியாற்றுகிறார்கள், ஆனால் நாம் இவர்களை போல இயங்குகிறோமா என்று சிந்திக்க வேண்டும்.

சேரி மக்களை அமைப்பாய் திரட்டுவதும், அவர்களை ஓட்டாக மாற்றி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுகின்ற  நடவடிக்கைகளில் மக்களை அரசியல் படுத்துகின்ற பணிகளை கடுமையாக நுட்பமாக நாம் செய்ய வேண்டும்.  

அமைப்பாக திரட்டப்பட்ட சேரி மக்களை, அரசியல் படுத்தப்பட்ட #சேரி_மக்களை #சினிமா_டிக்கெட்களாக_மாற்றிய #திறமையை_போல  நாமும் நமக்கான அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டத்தில் மக்களை இணைக்க வேண்டும்,  இணைப்போம். 

டாக்டர். அம்பேத்கர், டாக்டர் தொல்.திருமா அவர்களின் மேடை பேச்சுகள், எழுத்துக்கள், சிந்தனைகளை பிறர் அவரவர்களுக்கு தெரிந்த வழியில் சந்தை படுத்துகிறார்கள், பெரும் வியாபாரம் ஆக்குகிறார்கள், அரசியல் செய்கிறார்கள்,  ஆனால் நாம் தான் அவர்களின் கருத்தியல் கொண்டு மக்களை அமைப்பாய் திரட்டவில்லை, அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற அதற்கான களத்தையும் உருவாக்கி கொள்ளவில்லை.

 #சிந்திப்போம்

2019 fb பதிவு.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்