திராவிட கட்சிகளே அப்படித்தான்...

2020 fb.பதிவு #தயாநிதி_என்ன_திராவிட_கட்சிகளே #அப்படித்தான்

நீதிகட்சியில் படித்த பட்டதாரிகள் 
மாவீரன் இரட்டைமலை சீனிவாசன், பெருந்தலைவர் 
எம்.சி.ராஜா, என்.சிவராசு 
முனுசாமி பிள்ளை, தர்மலிங்கம் பிள்ளை முதலான தொல் தமிழர்களின் தலைவர்கள் பலர்  முன்னணியில் இருந்தனர் 

குறிப்பாக மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1893 ஆம் ஆண்டிலேயே 'பறையன்"  என்னும் ஏட்டை நடத்த தொடங்கியவர்  1904ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கா சென்று நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார்,

 1928 ஆம் ஆண்டில் சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பை நிறுவினார் ,  1923  ஆம் ஆண்டிலிருந்து 1938 வரை தொடர்ந்து சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்,
 
1930 ஆம் ஆண்டில் ராவ்பகதூர் பட்டம் பெற்றார்,  1930 நவம்பரில் லண்டனில் நடந்த முதல் வட்ட மேசை மாநாட்டில் பங்கு பெற்றார் அதனை தொடர்ந்து 1932 ஆண்டில் தாழ்த்தப்பட்டோருக்கு தனி தொகுதி வழங்கக்கூடாது என சாகும்வரை காந்தி உண்ணா நோன்பு இருந்தார் காந்தியின் உயிரைக் காப்பாற்றி பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார் காந்திக்கு உயிர் பிச்சை போட்டவர் மாவீரன் இரட்டமலை சீனிவாசனும் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது,

இத்தகைய மாபெரும் தலைவர்கள் இருந்தும் ,  தொல் தமிழர்களின் தலைவர்கள் பலர் இருந்தும்  எவரையும் நீதிக்கட்சி தலைமை  ஒருவரைக்கூட அமைச்சர் ஆக்கவில்லை ,
ஆனால் என்.ஆர்.சேதுரத்தினம் ஐயர் என்னும் பார்ப்பனர் மட்டுமே இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நீதிக்கட்சியின் ஆட்சியில் அமைச்சராக முடிந்தது. 

மூன்றரை மாதங்களே நீடித்த வெங்கட ரெட்டியின் இடைக்கால அமைச்சரவையில் மட்டுமே தொல் தமிழர்களின் தலைவரான பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்கள் அதுவும் ஆங்கிலேயே ஆளுநரின் பரிந்துரையால் ஒரு அமைச்சராக முடிந்தது .

நீதிக்கட்சியின் தொடக்கமே தொல்தமிழர் விரோதமான கட்சிதான் என்பதை அப்போதைய நமது தலைவர்கள் புரிந்து கொண்டார்கள் வரலாறும் அதைத்தான் நமக்கு காட்டுகிறது. 

அதனைத்தொடர்ந்து இன்றும் நீடித்துக் கொண்டிருக்கின்ற திராவிட கட்சிகள் வரை அனைத்தும் தொல் தமிழர்களுக்கு எதிரானது தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சென்னையில்  பஞ்சாலை தொழிலாளர்கள் 1921 மே மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் அப்போது தீண்டப்படாதவர் எனப்பட்ட நலிந்த சாதி தொழிலாளர்கள் நெடுநாள் பட்டினி கிடப்பதை தாங்கமுடியாமல் வேலைக்கு திரும்பினர் இதனால் மேல்சாதி தொழிலாளர்கள் ஆத்திரம் பட்டனர் புளியந்தோப்பு (புலையன் தோப்பு)  என்னுமிடத்தில் ஒரு சாதி கலவரம் மூண்டது அந்த சாதி கலவரத்தை நடத்தியது நீதிக் கட்சி , அந்த சாதி கலவரத்தில 
மேல்சாதி தொழிலாளர்களுக்கு 
பெரும் துணையாக நின்றது இந்த பார்ப்பனரல்லாதாரரின் கட்சி என சொல்லிக்கொண்ட நீதிக்கட்சி, ஒடுக்கப்பட்ட சாதியினரை பார்த்து வடிப்பதெல்லாம் முதலைக்கண்ணீர் தான் என்பதை இதனால் மெய்ப்பட்டு விட்டதாக எம்சி ராஜா போன்ற தொல் தமிழர் தலைவர்கள் அப்போது எடுத்துரைத்தனர் ,

பறையர் என்னும் தொல் தமிழரை ஆதிதிராவிடர் என்னும் ஒரு புதிய பெயரைச் சொல்லி அழைக்குமாறு கேட்டுக்கொண்டு அன்றைய நீதிக்கட்சியை ஏற்றுக்கொண்ட எம்.சி ராஜா போன்ற தொல் தமிழர் தலைவர்கள், பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தை பின்னர் புரிந்து கொள்வதற்கு இது போன்ற சாதிய அணுகுமுறைகள்  உதவின என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள், நாமும் திராவிட அரசியல் யாருக்கானது என்பதை புரிந்து கொள்வோம்.

தொல் தமிழர்களின் தனிப்பெரும் தலைவராக தமிழகத்தில் இருந்த மாவீரன் ரெட்டமலை சீனிவாசன் ஆதிதிராவிடர் என்னும் பெயருக்கு மாறாக பழந்தமிழர் என்றும் பெயரையே ஆண்டுவந்தார்,  தமிழர்களை ஆதிதிராவிடர் என்றும் சாதி இந்துக்கள் என்றும் முதன்முதலில் பிரித்து எழுதி சாதி இந்து என்ற சொல்லை ஆக்கியதும், அறிமுகப்படுத்தியதும் நீதிக்கட்சியின் அன்றைய ஏடான திராவிடர் ஏடுதான் என்பதை அந்நாளைய ஆதிதிராவிடன் நவம்பர் 15 , 1921  இதழில் பின்வருமாறு எழுதி அம்பலப்படுத்தியது 

முன்னர் நம்மை பறையர் பள்ளர், சக்கிலியர், பஞ்சமர் என்ற இழிவான பெயர்களை மாற்றி ஆதிதிராவிடர் என்னும் மேன்மையான பெயரை அல்லது பதத்தை நம் கழுத்தில் மாற்றியதாக மிகவும் பெருமை அடித்து பேசினார்கள்,
பிறகு   பின்னி ஆலை வேலை நிறுத்தம் குழப்பத்திற்கு பிறகு நம்மை பறையர் என்றும் பஞ்சமர் என்றும் திராவிடன் ஏட்டில் எழுதி தூற்ற தொடங்கிவிட்டனர்,

திராவிட அரசியல் வாதிகள் தாழ்த்தப்பட்டோர் என்றும், ஆதிதிராவிடர் என்றும்  நம்மை அழைப்பதை ஒழித்து தொல்தமிழர் அல்லது ஆதி தமிழர் என்றோ அழைக்க போராட வேண்டும், நீதிகட்சி முதல் தயாநிதி வரை இப்படித்தான் தொல் தமிழரை அணுகுகிறார்கள என்பதை நாம் உணர வேண்டும்.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்