உதய சூரியன்

1954 ஆம் ஆண்டு
‘உழவர் கட்சி' எனும் கட்சியை தொடங்கும்
தலைவர் ஏ. கோவிந்தசாமி அந்த கட்சியின் சார்பாக உள்ளாட்சி தேர்தலில் காணை காஞ்சனூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சிலகாலத்திற்கு பிறகு திமுகவில் இணைகிறார்.

1957 ஆம் ஆண்டு 
முதன்முறையாக தேர்தல் களத்திற்கு வருகின்ற 
அண்ணா தலைமையிலான திமுக, நிறைய இடங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிடுகிறது. ஆளானப்பட்ட அண்ணாவே சேவல் சின்னத்தில்தான்  போட்டியிடுகிறார்.

குளித்தலை தொகுதியில் போட்டியிடும் கலைஞர் கருணாநிதியின் சின்னம் உதயசூரியன்.

முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன் 
சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்த திமுக மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கு தேர்தல் சின்னமாக உதயசூரியன் ஒதுக்கப்பட்டதே கூட 02-03 1958 தான்.

ஆனால் 

1936-ல் சென்னை மாகாண செட்யூல்டு வகுப்பினர் ஃபெடரேஷன்’ என்ற கட்சியை ரெட்டைமலை சீனிவாசன் தொடங்கியபோது அந்த கட்சியின் சின்னம் உதய சூரியன். அந்தக் கட்சிக்கு பெயரே ‘சூரியக் கட்சி’ தான்.

குடியாத்தம் எஸ்.பி.பாலசுந்தரமும், ஜெ.ஜெ.தாஸும் இணைந்து 1941-ஆம் ஆண்டு அந்த கட்சிக்கு ஒரு இதழ் தொடங்கினார்கள். அந்த இதழின் பெயர் ‘உதயசூரியன்.’

முதல் தலித் இதழின் பெயர் - சூரியோதயம் 
தொடங்கப்பட்டது 1869 ஆம் ஆண்டு.

ஆகவே

நீங்கள் பேசிக்கொண்டிருப்பது 
எங்களின் வரலாறு
நீங்கள் சூடிக்கொண்டிருப்பது 
எங்களின் அடையாளங்கள்
நீங்கள் வாழ்ந்துக்கொண்டிருப்பது 
எங்களின் நிலம்

ஞாபகம் இருக்கட்டும்
திராவிட அரசியல் போர்வையில் இருக்கும் சாதி வெறியர்களுக்கு

சமரன்

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்