அன்னை மீனாம்பாள் சிவராஜ் பிறந்தநாள்...
திசம்பர் 26 #அன்னை_மீனாம்பாள் #சிவராஜ்_பிறந்தநாள்.....
பறையர் பேரினத்தின் மாபெரும் ஆளுமை , இந்தி எதிர்ப்பு போரை தமிழ்நாட்டில் முதன்முதலில் துவங்கிய வீர பறையர்.
ஈ.வே.ரா அவர்களுக்கு பெரியார் என்று பட்டம் வழங்கிய பூர்வகுடி அன்னை.
இவர் பறையர் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான #வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் #கப்பலோட்டிய_தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான #மதுரைப்பிள்ளையின் பேத்தி.
இவர் அக்காலத்தில் ரங்கூனில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிக்குலேசன்வரை படித்தவர்.
இவர் தனது 16வது வயதில் 1918இல் பட்டியலின இயக்கத் தலைவர்
தந்தை ந. சிவராஜ் பறையனார் அவர்களை மணந்து கொண்டார்.
அன்னையின் புகழ் வரலாற்றில் நிலைத்து நிற்கும்
அன்னை மீனாம்பாள் பறையர் புகழ் ஓங்குக...
Comments
Post a Comment