கால் நூற்றாண்டுகளாக விடுதலைச் சிறுத்தையாய் அண்ணன் திருமாவளவன் அவர்களுடன் நான்

2022 #இனிய_புத்தாண்டு #வாழ்த்துகள்...

பலரை அடையாளப்படுத்தியதிலும், பலரை அமைப்பிற்குள் அய்க்கியப்படுத்தியலும்,  பலருக்கு பல தகுதிகளை ஏற்படுத்தியதிலும் எனக்கு பெரும் மகிழ்ச்சி உண்டு, சரியாக  எனது கடமையை செய்துள்ளேன்.

விடுதலைச்சிறுத்தையாய் நான் உணர்ந்தது எனது 16 வயதில் ,  விடுதலைச் சிறுத்தைகளின் போராட்ட களத்தில் 17 வயதிலிருந்து இருக்கிறேன் இன்று  25 ஆம் ஆண்டில்  நான். 

கடந்த 25 ஆண்டுகளில் நேர்மையுடன் மக்களுக்காக பணியாற்றி இருக்கிறேன், வாழ்ந்திருக்கிறேன்,  ஆதிக்க சக்திகள், சமூக விரோதிகள், கொள்கை பகைவர்கள், போன்ற எவரிடமும்  ஒரு திமிருடனே சுய மரியாதையுடன்   சமரசமின்றி இருந்துள்ளேன். 

என் வாழ்நாளின் பெரும் பகுதி அம்பேத்கர்- திருமா தான் என் உயிர் மூச்சுக் காற்றாக  வாழ்ந்துவிட்டேன், மன நிறைவு அடைகிறேன்.

நான் கடந்து வந்த பாதையை, எனது உழைப்பை பிறருக்கு சொல்லும் வகையில் மக்கள் மட்டுமே சாட்சியங்களாய் உள்ளார்கள்,   

எனது போராட்ட வாழ்வில்  நான் ஒரு முறை கூட எனது புகைப்படத்தை நானே போட்டு போஸ்டர் அடித்தது இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்புவது கடினம் தான்..! ஏனெனில் தன்னை முன் நிறுத்தும் அரசியல் தானே நடக்கிறது.

லட்ச கணக்கில் பணம் செலவு செய்து  எமது தோழர்களே ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளை கூட கொண்டாடுகிறார்கள் என்றால் இதையும் நீங்கள் நம்புவது கடினம் தானே...!  
ஆனால் இதுதான் உண்மை.

எமது உழைப்பை எமது பணியை  மக்களே அங்கீகரித்து அவர்களின் சொந்த செலவில்  என்னை  தோழமையுடன் நான் சோர்வடையாத அளவிற்கு    அவர்கள் என்னை இழுத்துக் கொண்டே செல்கிறார்கள்,  என்றும் அவர்களின் அன்பிற்காகவே நான் போராடி கொண்டே இருப்பேன்.

நான் உருவாக்கியவர்களே சிலர் அவர்களால் தான்   நான் வளர்ந்ததாக கூறப்படும் போது, நான் எதுவும் அவர்கள் குறித்து பதிலளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது நன்றி உள்ளோரும், அறம் உள்ளோரும்  ஏன் என்னை  எதிரியாக  கருதுபவர்  கூட எனக்காக அவர்களுக்கு பதிலளிக்கும் போதுதான் எனது பணி குறித்து நானே உணர்ந்துள்ளேன், 

துரோகம், பொறாமை, போன்ற கீழ்த்தரமான உணர்ச்சி மிக்க நயவஞ்சர்களை நான் நீண்ட வருடங்களுக்கு பிறகே கண்டறிந்துள்ளேன், மிச்ச சொச்சங்களும்  கடந்த 2019,2020,  2021 ஆம் ஆண்டோடு அடித்து போய்விட்டது, இந்த ஆண்டு தகுதி வாய்ந்த, தலைமை பண்பு கொண்ட, அர்ப்பணிப்புள்ள சிறந்த களப்போராளிகளை உருவாக்க போகிறேன் ஆனால் அவர்கள் ஒரு போதும் மூத்த தோழர்களுக்கு மரியாதை கொடுக்காத தற்குறிகளாக இருக்க மாட்டார்கள்,  மாபெரும் போராட்ட வாதியாக  பிறர் மீது பேர் அன்பு கொண்டவர்களாக உருவாக்குவேன்... 

 உங்கள் தந்திரம், யுத்தி, ஒதுக்குதல் குறித்து  அனைத்தும் வரும் தளமுறை கேள்வி எழுப்பும் போது அதனை ரசிக்க நானும் இருக்க மாட்டேன், வேதனை பட நீங்களும் இருக்கமாட்டீர்கள். பொறுக்கிகள், போலிகள் மின்னலாம் ஆனால் போராளிகள் வரலாற்றில் வாழ்வார்கள். 

2022 #இனிய_புத்தாண்டு #வாழ்த்துகள்...

ஞானம் மு.அறிவுடைநம்பி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்